கூட்டமைப்புக்கு எதிர்மாறான கருத்துடைய ஒரு துருவக் கட்சியாக நாம் அனைவரும் இணைவோம் – பேரவைக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் அழைப்பு

“தேசியக் கட்சிகளுடன் தற்பொழுது ஒரே கருத்துடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரே எதிர்மாறான கருத்துடைய ஒரு துருவக் கட்சியாக நாம் சேர்ந்து பயணிக்க வேண்டும். மாற்றுத் தலைமைத்துவத்தை உருவாக்கக் காலம் கனிந்துள்ளது. தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகளுடன் நாம் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு. புதிய பொதுச் சின்னத்தின் கீழ் எம்மை ஒன்றிணைக்கும் பணியை...

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து சுரேஷ், சித்தர் கட்சிகளை அகற்றவேண்டும் – விக்னேஸ்வரனுக்கு முன்னணி கடிதம்

“தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமையை உருவாக்கும் பணியில் தமிழ் மக்கள் கவனம் செலுத்தவேண்டும். அதற்கு ஈபிஆர்எல்எப் மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்சிகளையும் பேரவையிலிருந்து அகற்றவேண்டும்” என்று வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி, பேரவையின் வடக்கு இணைத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளது. இந்த தகவலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டார். யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள...
Ad Widget

அநாமதேய துண்டுப்பிரசுரம்- தமிழ் மக்கள் பேரவை மறுப்பு

தமிழ் மக்கள் பேரவையின் பெயரில் விடுதலைப்புலிகளின் இலச்சினையுடன் அநாமதேய துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இத்துண்டுப் பிரசுரத்திற்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு வெளியிடப்பட்ட இத்துண்டுப் பிரசுரமானது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி, எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கின்ற மாபெரும்...

புலிகளின் சின்னத்தில் அனுப்பப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்?

தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வு நாளைமறுதினம்(புதன்கிழமை) யாழில் நடைபெறவுள்ள நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் புலிச் சின்னத்துடன் பலருக்கும் அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. “மாபெரும் எழுச்சி தலைவன் வழியில் மக்கள் மேலவைத் தலைவன் கைகளைப் பலப்படுத்துவோம்“ எனப் குறிப்பிடப்பட்டு தமிழ் மக்கள் பேரவையால் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட...

தமிழ் மக்கள் பேரவையின் பொதுக்கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்

தமிழ் மக்கள் பேரவையின் 24.10.2018 பொதுக்கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் ...

கட்சி அரசியலை விடுத்துச் செயற்படுவதே சிறந்தவழி – முதலமைச்சர்

கட்சி அரசியலை விடுத்து, தமிழ் மக்கள் பேரவையை ஓர் மக்கள் பேரியக்கமாக மாற்றுவதே தற்காலத்திற்குச் சிறந்த வழி என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். சமகால அரசியல் தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களை...

இளையோர் மாநாடு : தமிழ் மக்கள் பேரவை

வட கிழக்கு தமது தாயகப் பிரதேசமாக நீண்ட வரலாற்றினை கொண்டிருக்கின்ற ஓர் தேசிய இனமாக ஈழத்தமிழர்கள் தமது சுய நிர்ணய உரிமையினை நிலைநாட்டுவதற்கும் இதனடிப்படையில் மக்களுக்கு இருக்கக்கூடிய இறைமையையும் வலியுறுத்தி நீண்ட ஓர் விடுதலைப்போரில் தமது தேசியவிடுதலைக்காக தம்மை அர்ப்பணித்திருந்தனர். தமிழினம் இந்த விடுதலை வேள்வியில் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் சொத்துடமைகளையும் வாழ்விடங்களையும் பறிகொடுத்திருந்தது. உலகளாவிய மாற்றங்கள்,...

பேரவையின் இளையோர் மாநாட்டுக்கான காரணங்களை பட்டியலிடுகிறார் முதலமைச்சர்

தமிழ் மக்கள் பேரவையால் இளையோர் மாநாடு நடத்தப்படுவதற்கான காரணங்களை அதன் இணைத்தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பட்டியலிட்டு எடுத்துக் கூறினார். இதுதொடர்பில் யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் இந்த விளக்கத்தை வழங்கினார். அவர் தெரிவித்ததாவது: உங்கள் யாவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய...

இளைஞர் மாநாடு நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவையினர் ஏற்பாடு!

எதிர்வரும் ஜூன் மாதமளவில் இளைஞர் மாநாடு ஒன்றினை நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக தமிழ் மக்கள் பேரவையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தமிழர் தாயகத்தின் முன்னேற்றத்தகும் அபிவிருத்தியில் இளைஞர் யுவதிகளின் பங்குபற்றுதலை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்படுகின்றது....

வடக்கு கிழக்கை எதற்காக இணைக்கக் கோருகிறோம்? – முதலமைச்சர்

வடக்கையும் கிழக்கையும் பிரித்துவைக்கும் நிலை தொடர்ந்தால், வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் பேசும் மக்கள் சிறுபான்மையினராகக்கப்படுவார்கள் என வடக்கு முதல்வரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலை மாறி, வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின் பிரதேசம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் திருகோணமலை நகரசபை...

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் கலந்துரையாடல்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது இந் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

அனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைவு !!

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் அதிபரும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளருமான க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் பேரவையின் விசேட பொதுக்கூட்டம் நேற்று (01.03.2018) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு...

தமிழ் மக்கள் பேரவை ஐ.நாவுக்குச் செல்லவுள்ளது : சி.வி.விக்கினேஸ்வரன்

“ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 37ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவதுக்காக தமிழ் மக்கள் பேரவையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி சிலர் செல்லவுள்ளதாக” வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று (01) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட வடமாகாண...

தமிழ் மக்கள் பேரவையின் கருத்தரங்கு அரசியல் கலப்பற்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்: தேர்தல்கள் அலுவலகம்

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெறும் தமிழ் மக்கள் பேரவையின் கருத்தரங்கு அரசியல் கலப்பற்று இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என தேர்தல்கள் அலுவலகம் அறிவித்துள்ளது. மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரான யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, யாழ் வீரசிங்கம் மண்டபத்தில்...

அரசாங்கம் தருவதை ஏற்றுக்கொள்ளும் அவசியம் எமக்கில்லை: வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்

”தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அரசாங்கம் தருவதனை பெற்றுக்கொள்ள முடியாது. எமக்கு விருப்பமில்லாத தீர்வினை எம்மீது திணிக்க முடியாது. அவ்வாறு நடந்தால் இன்னும் 20 வருடங்களின் பின்னர் வடக்கு கிழக்கை சேராதவர்கள் வடக்கு கிழக்கை ஆட்சிசெய்ய, அவர்களின் கீழ் நாம் வாழும் நிலை ஏற்படும்” என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்...

த.ம.பேரவையின் கூட்டத்தை தடுக்க முனைவது தமிழர் அரசியலுக்கு நல்லதல்ல: சட்டத்தரணி குருபரன்

தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து கிடைக்கப்பெற்ற கடிதங்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளதென யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை தலைவரும் சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார். தமிழர் அரசியல் போக்கில் இது சரியான பாதையல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம்...

தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வு இடமாற்றம்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16ஆம் திகதி செயவ்வாய்க்கிழழை மாலை 4 மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவிருந்த கருத்தமர்வும் கலந்துரையாடலும் நிகழ்வானது அக் கலையரங்கம் பயன்படுத்துவதற்கான அனுமதி இரத்துச் செய்யப்பட்டதால் யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையினர் அறிவித்துள்ளார்கள்.

திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதில் தமிழ் மக்கள் பேரவை ஆர்வம்

தமிழ்ச் சமூகத்தின் அரசியல், நிர்வாக அடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் கலந்துரையாடல்களையும் ஆரம்பித்திருப்பதாக தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது. அந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாகவும், அதில் தமிழ் மக்கள் பேரவையில்...

தமிழரசுக் கட்சி எடுத்த முடிவானது, தமிழ் மக்களின் ஆணையை மீறிய செயலாகும்!! : சுரேஷ் பிரேமசந்திரன்

“புதிய அரசமைப்புத் தொடர்பில் தமிழரசுக் கட்சி எடுத்த முடிவானது, தமிழ் மக்களின் ஆணையை மீறிய செயலாகும். அதனால் இனியும் அவர்களுடன் சேர்ந்து இயங்க முடியாது. அவர்கள் சின்னத்தில் (வீட்டுச் சின்னம்), தேர்தலில் போட்டியிடவும் முடியாது” என, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். பொது நூலகத்தில் நேற்று (12) நடைபெற்ற தமிழ் மக்கள்...

தமிழ்த் தலைவர்களின் செயற்பாட்டால் அழிவுப் பாதையில் தமிழ் இனம்!! : சி.வி. விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டிகள், முரண்பாடுகள் காரணமாக, ஒட்டுமொத்த தமிழினமும் அழிவுப் பாதையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதென, வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பொதுநூலகக் கேட்போர்கூடத்தில், நேற்று (12) காலை இடம்பெற்ற, தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு...
Loading posts...

All posts loaded

No more posts