- Thursday
- November 21st, 2024
மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறையை உருவாக்கும் பணியை முன்னெடுத்துள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இதற்கான தொடர் திட்டமிடல் செயலமர்வுகளில் கலந்துகொள்ள விரும்பும் அமைப்புகள், கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் பேரவையுடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் தமிழ் மக்கள் பேரவை அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஆசிரியர்களின் பெருமுயற்சியுடனும் பெற்றோர்களின் உழைப்பு, ஊக்குவிப்புகளுடனும் மாணவர்களின்...
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது, “70 வருடங்கள் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கும் எமது உரிமைப் போராட்டங்களிலே நாம் சுமந்த வலிகளும், இழப்புக்களும், வேதனைகளும் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை என்பதை யாரும் மறுக்க முடியாது. நாம் உயிர்கொடுத்து காத்துவரும் எமது அடிப்படை அபிலாசைகள்...
தேர்தல் அரசியல் கடந்து எமது மக்களின் சுபீட்சமான எதிர்காலத்தை இலக்காகக்கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையானது மக்களிடம் அன்புரிமையுடன் பின்வரும் 5 கோரிக்கைகளை முன்வைத்து நிற்கின்றது. 1. தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் அணிதிரண்டு தவறாமல் வாக்களிப்போம் என உறுதிபூணுவோம். எமது பிரதேசத்தில் இயங்கும் பொது அமைப்புக்கள் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவைக்கு பெரும்...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான பொதுவான தீர்மானத்தை எட்டும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளை சந்திக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், புலமைசார் வல்லுநர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்ட சுயாதீனக்குழுவே இந்த சந்திப்பை மேற்கொண்டுவருகிறது. இதன் இரு சந்திப்புக்கள்...
தமிழினத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின் வெளிப்பாடாகவே, நீதிமன்ற உத்தரவை பொலிஸார் துணையுடன் மீறி செம்மலையில் பௌத்த தேரரின் உடலை தகனம் செய்தமையென தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்து அந்த பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸார், அந்த உத்தரவை...
எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்து தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழு கூடி ஆராய்ந்துள்ளது. தேர்தல் தொடர்பாக பொதுக் கலந்துரையாடலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் நடைபெற்றது. இதில்...
எழுக தமிழ் பேரணி வெற்றியடைந்ததாக தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி.விக்னேஸ்வரன். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பேரணியில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர். வவுனியா, கிளிநொச்சி, கிழக்கு போன்ற பகுதிகளில் இருந்து நிறைய மக்கள் வந்திருந்தார்கள். இதுவே பெரிய வெற்றிதான். ஏனெனில், இதற்கு முன்னர் வெளியிடங்களில் இருந்து மக்களை அழைத்து வர...
குரூர் ப்ரம்மா… எனதினிய தமிழ் மக்களே! பல்லாயிரக்கணக்கில் இங்கே வருகை தந்துள்ள அனைத்து உறவுகளுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை முதற்கண் கூறி வைக்கின்றோம். “அழுத குழந்தையே பால் குடிக்கும்” என்பார்கள். குழந்தை அழுதால்தான் தாய்க்கு அதன் பசி பற்றி பொதுவாக நினைவுவரும். “அழுதால் உன்னைப் பெறலாமே” என்றார் மணிவாசகப் பெருமான். இறைவன் கூட அழுபவர்களுக்கே வரம்...
அன்பான தமிழ் மக்களே, இன்று நாம் முன்னெப்போதும் இல்லாதவாறு சிங்கள பேரினவாதத்தின் திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு கிடக்கின்றோம். தமிழ் மண் சிதைவுற்றுள்ளது. தமிழரின் குடித்தொகை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. வடக்கில் இருந்து கிழக்கு பிரித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தோற்கடிக்கப்பட்ட மக்கள் என்ற மனநிலையுடன் எமது தாயகம் தேர்தல் அரசியற் சகதிக்குள் மூழ்கியுள்ளது. நம்பிக்கையற்ற நடைபிணங்களாய் ஈழத் தமிழ் மக்கள்...
எழுக தமிழ் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணம் முற்றவெளித் திடலை வந்தடைந்தது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறுகிறது. நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலிருந்தும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி இன்று முற்பகல் ஆரம்பமானது. தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, இலங்கை போர்க்குற்றவாளிகளை...
முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைக்கப்பட்ட தமிழர் உடல்களோடு உடலாக, அனைத்துலக மனித உரிமை கோட்பாடுகளையும், வரையறைகளையும், நியமங்களையும், நம்பிக்கையினையும் சேர்த்தே புதைக்கபட்டுவிட்டதை இன்றளவும் மெய்ப்பிப்பதாகவே தமிழினப் படுகொலைக்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது. போர் வலயத்தில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்த சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் போர் முடிவுக்கு...
எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறும் எழுக தமிழ் எழுச்சி பேரணியை முன்னிட்டு, தமிழர் தாயகம் தழுவியதான பூரண கதவடைப்பின மூலம் வழமை மறுப்பு போராட்டத்தை மேற்கொள்ள தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுக்கும் வகையில் நடைபெறுகின்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அனைத்துத் தமிழர்களும் ஓரணியில் ஒன்றுபட்டு, தென்னிலங்கை...
எழுக தமிழ் தொடர்பாக வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. போர்க்குற்ற விசாரணையை நடாத்து, அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உடனடியாக விசாரணை செய், வடக்கு- கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து, இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் குடியமர்த்து போன்ற...
வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பௌத்தர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ் மக்கள் பேரவை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு சிங்கள பௌத்த விரிவாக்கமானது முன்னெப்போதும் இல்லாதளவில் முன்னெடுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்காலத்தில் எம்முடன் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இனப் பிரச்சினைக்கு தீர்வைப்பெற முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார். யாழில் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வுக்காக ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் சி.வி.விக்னேஸ்வரன்...
யாழில் நடைபெறவிருக்கும் எழுக தமிழ் பேரணியானது கட்சிகளுக்கு அப்பாற்பட்டதாக நடைபெறவிருப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதில் அனைவரும் கலந்து கொண்டு தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் யாழில் நடத்தப்படவுள்ள எழுக தமிழ் பேரணிக்கான பரப்புரை நிகழ்வை நல்லூரில்...
எழுக தமிழ் 2019, பரப்புரை பணிகள் இன்று வெள்ளிக்கிழமை முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் நல்லூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது எழுக தமிழ் எழுச்சிப் பேரணி அடுத்தமாதம் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த எழுச்சிப் பேரணிக்கு தாயக மக்களை அணிதிரட்டும் பரப்புரைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்றது. நல்லூர் கந்தன் ஆலய...
செப்டெம்பர் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையினரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை... தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்டெம்பர் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி தமிழினத்தின் அவலத்தையும் பேரினவாத சக்திகளின் கபடத்தனத்தையும் உலகறியச் செய்கின்ற மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமாகும்....
தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், குறித்த இரு கட்சிகளும் பேரவையில் தொடர்ந்தும் இருக்கலாமென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள்...
தமிழ் மக்கள் பேரவையில் இருக்கின்ற கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் என சகலரும் ஒருங்கிணைந்து செயற்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பேரவையின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர்...
Loading posts...
All posts loaded
No more posts