- Sunday
- February 23rd, 2025

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளிளிற்கு ஆதரவாகவும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இன்று ஏ9 வீதியில் உள்ள பழைய மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது. இன்று...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக போரட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி தொடர்ந்தும் 5 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாட்டின் பல பாகங்களிலும்...

நடக்க முடியாத எனது 13 வயது மகனை எங்கு சென்றாலும் தூக்கியபடி, பொருளாதார உதவிகளும் இன்றி கஷ்டப்படுகின்றேன். சிறையிலுள்ள எனது கணவரை விடுதலை செய்தால் நாங்கள் நிம்மதியாக வாழ்வோம் என மன்னாரைச் சேர்ந்த சந்திரயோதி இராஜலட்சுமி தெரிவித்தார். அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழ்.முனியப்பர் ஆலய முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை (16) நடைபெறும் அடையாள உண்ணாவிரதப்...

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணம் முனியப்பர் கோவிலடியில் இன்று காலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் பெருமளவு அரசியல் கைதிகளின் குடும்பங்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களும் இப்போராட்டத்தில்...

"அரசு தம்மை விடுதலை செய்யும் என்ற நம்பிக்கையில்", உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். உண்ணாவிரதமிருப்பவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அரசுதான் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளை...

நாடுமுழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது போரட்டத்தைக் கைவிடவேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்று மகஸின் சிறைக்கைதிகள் முன்னிலையில் விடுத்த கோரிக்கையை கைதிகள் ஏற்க மறுத்துள்ளனர். தமது விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து ஒரு பதில் கிடைக்கும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிடப்போவதில்லை என உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அமைச்சர் விஜயதாஸ...

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்று புதன்கிழமை சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான சயந்தன், அஸ்வின் ஆகியோர் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர். "உங்களின் விடுதலைக்கு எம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகின்றோம். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின்மூலம்...

சிறீலங்கா அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியான விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை(15-10-2015) யாழ் பஸ் நிலையம் முன்பாக காலை 10.30 மணி தொடக்கம் 11.30 வரை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்திற்கு அக் கட்சியின் வடமாகாண இணைப்பாளர்...

அம்மா, வருவார் வருவார் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்கின்றேன். அம்மா வருவதாக இல்லை. தயவு செய்து எனது அம்மாவை விட்டுவிடுங்கள் என வவுனியாவைச் சேர்ந்த யுவதியான சசிதரன் யதிந்தினி கதறியழுதமை அரசியல் கைதிகளது உறவுகளின் கதறல்களுக்கு மத்தியில் நெஞ்சை உலுக்கியது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு – கோட்டையில் உறவினர்கள், அரசியல் வாதிகள் சிவில்...

தமது விடுதலையை வலியுறுத்தி நேற்று மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய தமிழ் அரசியல் கைதிகளில் 12 பேரின் உடல் நிலை மோசமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 12ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். எனினும், இவர்களின் விடுதலை தொடர்பாக...

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில், பிரதமர் தலைமையிலான குழு எதிர்வரும் 20ஆம் திகதி கூடி ஆராயும் என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுப்பு காவல் மற்றும் சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், அமைச்சர் மனோ கணேசன்,...

இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்றும் மாறாக கொலை கொள்ளை குற்றம் சாட்டப்பட்டவர்களே இருக்கிறார்கள் என்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை நியாயமற்றது. இவ்வாறு தெரிவித்துள்ளனர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர். அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - நீண்ட நெடுஞ்சிறை வாழ்வை...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளையதினம் வெள்ளிக்கிழமை யாழ் முனியப்பர் கோவில் முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. மேற்படி போராட்த்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. காலம்: 16.10.2015 வெள்ளிக்கிழமை நேரம்: காலை 7.00 மணி இடம்: முனியப்பர் கோவில் முன்றல் (யாழ் பொது நூலகத்திற்கு அருகாமை) தமிழ்த்...

நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி, யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன், அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி அதனுடன் இணைந்து, மற்றுமொரு சுவரொட்டியும் ஒட்டப்பட்டுள்ளது. சமவுரிமை இயக்கம் என்ற பெயரில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் இன்றைய தினம் நண்பகலளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று விஜயம் செய்யவுள்ளது. பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

நேசத்தமிழ் உறவுகளே! உங்களின் விடிவிற்காய் உதிரம் சிந்தி ஊருக்காய் உழைத்த நாம் இன்று உறவுகளை பிரிந்து உற்றவரை பிரிந்து பூட்டிய சிறைகளுக்குள் பட்டினி போராட்டம் நடத்துகிறோம். உங்கள் பிள்ளைகளாகிய எங்கள் அவல குரல் கேட்கிறதா சொல்லுங்கள். ஒரு மனித வாழ்க்கையின் சத்தான அரைவாசி காலத்தை சிறையில் தொலைத்து ஏக்கங்கள், தாக்கங்கள், நிராகரிப்புகள், நிராசைகள், அவமானங்கள், அருவப்புக்கள்...

நல்லாட்சி அரசு தங்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் அரசியல் கைதிகளின் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் சிறைச்சாலைகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் நான்கு கைதிகள் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு நேற்று மயக்கமடைந்தனர். இதனையடுத்து மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில்...

"சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தனிப்பட்ட ரீதியில் குற்றங்கள் எதுவும் செய்யவில்லை. பொதுவான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதனால்தான் அவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளை விடுவித்தது போன்று அப்பாவிகளான தமிழ் அரசியல் கைதிகளையும் உடன் விடுவிக்க ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.'' - இவ்வாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித்...

விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியில் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே போராடினார்கள். அவர்களுக்கு உதவி செய்தவர்கள் கைது செய்யப்பட்டால், அவர்களும் அரசியல் கைதிகள் என்ற வகைக்குள்ளேயே உள்ளடங்குவார்கள் என்று, வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இலங்கையிலுள்ள சிறைகளில், அரசியல் கைதிகள் எவரும் இல்லையென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறிய கருத்துக்கு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே,...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. வடக்கு மாகாண இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான மேற்படி போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம், கஜதீபன், சுகிர்தன், பரஞ்சோதி,...

All posts loaded
No more posts