- Sunday
- November 24th, 2024
அரசியல் கைதிகள் 43 பேர், முதற்கட்டமாக விடுதலை செய்யப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் வைத்து நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (03) சட்டத்தரணிகளைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, 43 பேரை வழக்குகள் எவையுமின்றி உடனடியாக விடுதலை செய்வது...
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 216 விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார். எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கைதிகள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் வழங்கிய உறுதி மொழிக்கு அமைய, இந்த அறிக்கை சிறைச்சாலை திணைக்களத்தினால் சட்ட மா அதிபர்...
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எம்மை பொதுமன்னிப்பில் ஜனாதிபதி விடுவிக்க வேண்டும். இல்லையேல் உயிர் துறப்போம் என தமிழ் அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளனர். தமது விடுதலை தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் தீர்க்கமான பதிலை ஜனாதிபதி எமக்கு வழங்கவேண்டும். இல்லையெனில் மீண்டும் நாம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு சாவைத் தழுவுவோம். இதுதான் எமக்கு இறுதியாக...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் இந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளது. இந்தப் பேச்சின்போது கைதிகள் விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில்...
தடுப்புக்காவலில் உள்ள தமிழ் கைதிகள் தொடர்பில் நியாயமான வகையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புலிகளுடன் தொடர்பில்லாத தமிழ் கைதிகள் விடுவிக்கப்படுவர். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளின் அடிப்படையில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என்று சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் யாரையும் தடுத்து வைக்கவில்லை. ஆனால்...
"நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரியான நிலைப்பாட்டை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவேண்டும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோரும், உறவினர்களும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இதன் பிரதியை...
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றால் போர்க் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரையும் விடுவிக்க வேண்டும் எனக் கேட்கின்றனர். குற்றம் செய்த இராணுவத்தினர், எங்கே சிறையில் இருக்கின்றனர்? முதலில் அவர்களைப் பிடித்து சிறையில் அடையுங்கள்.5 அல்லது 6 வருடங்கள் கழித்து அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கலாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். இலங்கைக்கான அமெரிக்க...
தமிழ் அரசியல் கைதிகளுக்கான பொதுமன்னிப்பு நிராகரிக்கப்பட்டமைக்கு சட்டமா அதிபர் திணைக்கள உயரதிகாரி ஒருவரே காரணம் என்று மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் மனதாயிருக்கின்ற போதிலும், அவ்வாறு விடுதலை செய்தால் தென்னிலங்கையில் கிளர்ச்சி ஏற்படும் என்ற அச்சத்தை குறித்த உயரதிகாரி முன்வைத்து...
தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பது என்று எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. 'தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்ததால் தான் அக்கைதிகள், தாம் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தினார்கள், விடுதலைக்கு மாறாக, பிணையில் விடுதலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று தெரிவித்துள்ள...
தமது விடுதலை தொடர்பில் அரசால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை தாம் ஏற்கப்போவதில்லை என்று தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர். தாம் உண்ணாவிரதத்தை மேற்கொண்டபோது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு வழங்கப்போவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தம்மை பொதுமன்னிப்பில் விடுவிக்குமாறு கோரி மீண்டும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளப் போகின்றனர் என தமிழ் அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளனர். இலங்கையில்...
இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், நீதி ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராயும் விசேட மாநாடு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்ற நிலையில் பிரதமர் தலைமையி லான இன்றைய மாநாடு தீர்க்கமான முடிவொன்றை மேற்கொள்ளும் களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது....
தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்படமாட்டாரென சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலை சீர் திருத்த அமைச்சர் திலக் மாரப்பன்ன தெரிவித்தார். அதற்கு மாறாக அவர்களது பிரச்சினைக்கு தீர்வு மட்டுமே வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 67 தமிழ் அரசியல் கைதிகளை இவ்வார இறுதிக்குள் விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, இதுவரை காலமும் வழக்குத்தாக்கல் செய்யப்படாமல் எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளையே இந்த வாரம் விடுவிக்க ஏற்பாடாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஏனைய தமிழ் அரசியல் கைதிகள் குறித்தும் விசாரணையை...
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழியை அவர் மீறினால் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று (17) சென்று கைதிகளுடன் உரையாடினார். அதன் பின்னரே தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். குடாநாட்டில் உள்ள ஆலயங்கள் தோறும் விசேட வழிபாடுகளில் ஈடுபமாறு அகில இலங்கை சைவ மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இன, மத வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் இணைந்து அரசியல் கைதிகளின் விடுதலைக்கு குரல்கொடுக்குமாறும் சைவ மகா சபை கோரியுள்ளது. இது தொடர்பாக சைவ மகா சபை...
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக அடுத்த மாதம் 7ஆம் திகதிக்கு முன்னதாக தீர்வு முன்வைக்கப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழியை கைதிகள் நிராகரித்துள்ளனர். இந்த உறுதிமொழியை ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமெனவும், அதுவரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக எதிர்வரும்...
தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதமிருக்கும் கைதிகளில் மேலும் 12பேரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிகக்ப்பட்டுள்ளனர். அதன்படி கடந்த ஐந்து தினங்களில் உடல் நிலை மோசமடைந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் கைதிகளின் எண்ணிக்கை 33ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றுக் காலையிலும் அனைத்து சிறைச்சாலைகளிலும் மருத்துவ அதிகாரிகளால் உண்ணாவிரதமிருக்கும்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தரத் தீர்வு பெற்றுத் தரப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் நேற்று(16.10.2015) உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி தலைமையிலான நல்லாட்சி அரசு பொதுமன்னிப்பில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று...
Loading posts...
All posts loaded
No more posts