- Wednesday
- January 22nd, 2025
அரசியல் கைதிகள் விடுதலை, சட்டமா அதிபர் திணைக்களத்தினாலேயே தாமதப்படுத்தப்படுவதாக தெரியவருகின்றது என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற காணி அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு...
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஒருபோதும் அரசாங்கம் உறுதிமொழி வழங்கவில்லை என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பெரும் குற்றச்சாட்டுக்கள் இல்லாத தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பதற்கோ அல்லது புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்கோ அரசாங்கம் இணங்கியிருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு புலி சந்தேகநபர்களை விடுவிப்பதாக நாம் ஒருபோதும் உறுதிமொழி...
பயங்கரவாதச் சட்டத்தை நீக்குவதாக சர்வதேசத்திடம் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. எனவே அச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை எவ்வாறு துரிதப்படுத்த முடியும் இவ்வாறு கேள்வியெழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஐ.நா மனித...
"சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் தாமதமின்றி உடனே விடுவிப்பது அரசின் தலையாய கடமையாகும். அவ்வாறு விடுவித்தால்தான் எமது நாட்டில் எமது ஆட்சியாளர்களிடையே மனித உரிமையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கம் உண்டென்று உணரக் கூடியதாக இருக்கும்." - இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் அமர்வு, சர்வதேச மனித...
கொழும்பு - மெகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி ஒருவர் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யாழ். அச்சுவேலி வடக்கை சேர்ந்த இவர் கடந்த 8ஆம் திகதியில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவரது தந்தை ஜ.பி.சி செய்திக்கு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 37 வயதான சிவராஜா...
"ஆயுதம் ஏந்திப் போராடிய புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேர் மஹிந்த ஆட்சியின்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டனர். கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உபதலைவர் பதவி வழங்கப்பட்டது. இவற்றை நான் தவறு என்று கூறவில்லை. முன்னாள் அரசின் இந்த அணுகுமுறை சரி என்றால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க்...
12 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை கடந்த ஆட்சியில் விடுதலை செய்தது பாரதூரமானதா? அல்லது 38 தமிழ்க் கைதிகளை பிணையில் விடுவித்தமை பாரதூரமானதா? என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர்களின் மீதான வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில்...
"தமிழ் மக்களிடம் கூறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வாக்குறுதிகளை வழங்கும் அரசு, அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றி எமது மக்களிடமிருந்து எம்மைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி கைதேர்ந்தது'' என்று சபையில் கடும் அதிருப்தியுடனும், ஆவேசத்துடனும் அரசின் மீது குற்றஞ்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இது கடந்த அரசைவிட மோசமான நிலை...
"தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதில் சட்டப்பிரச்சினை இல்லை. அரசியல் பிரச்சினையே உள்ளது. எனவே, இதை நீடித்துக்கொண்டுசெல்ல இடமளிக்கமாட்டோம்'' என்று நாடாளுமன்றில் உறுதியாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலைசெய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள்...
அரசாங்கத்தின் முக்கிய எதிர்கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்தும் கைதிகளின் பொதுமன்னிப்பு விடயத்தில் கரிசனை கொள்ளாதது வேதனைக்குரிய விடயமாகும்.இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி. அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையின் முழுவிவரம் வருமாறு:- அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட வேண்டும் என அனைத்துத் தரப்பினராலும்...
எனது மகன் விடுவிக்கப்படவேண்டும் இல்லையெனில் என்னை மாய்த்து கொள்ள வேண்டி வரும் என சிறையில் உள்ள அரசியல் கைதியின் தாயார் ஒருவர் தெரிவித்தார். கொடிய யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்படாமல் பல துன்பங்களை அனுபவிப்பது மட்டுமன்றி அவர்களது குடும்பமும் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். சிறைக்கைதிகள்...
அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் மந்தகதிக்கு தள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் காணப்பட்ட வீச்சு இப்போது இல்லை போன்று தோன்றுகின்றது என்று குறிப்பிட்ட அவர் அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு உறுதியளித்தவாறு சகல கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் அவசரகால சட்ட விதிமுறைகளின் கீழும் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் உரிமைகள் தொடர்பில் ´ஆழ்ந்த´ கவலையடைந்துள்ளதாக கூறியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. அவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு சட்டமா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளது. குற்றச்சாட்டுக்கள் இன்றியும், நம்பகமான ஆதாரங்கள் இன்றியும்...
முன்னைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்பது எமக்கு தெரியவில்லை. குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் நினைத்திருந்தால் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். ஆனால் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறித்துக் கொள்வதை ஒத்ததாக, சில அரசியல் கைதிகளை 10 லட்சம் ரூபா பிணையில் விடுவித்தது எமக்கு மனவேதனையளிக்கின்றது என வடக்கு...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 17ஆம் திகதி தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்திய போது, எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னதாக...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கும் பொறிமுறையின் கீழ் முதற்கட்ட குழுவினர் தொடர்பாக சட்டமா அதிபர் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்குழுவினரில் உள்ளடங்குவோர் குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு சிறிய தண்டனைக் காலம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்தே புனர்வாழ்வுக்குச் செல்ல முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு பல வழக்குகள் காணப்படுகின்றமையால்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இன்று காலை இவர்கள் தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தம்மை விடுவிக்கக் கோரி மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம் மற்றும் கொழும்பு மெகசின் சிறைச்சாலை போன்றவற்றில் இருந்த அரசியல் கைதிகள்...
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளில் உடல்நிலை அசாதாரண நிலைக்கு ஆளான எவரும் சிறைச்சாலைக்குள் இல்லை. அனுராதபுரம் சிறைச்சாலையில் ஒரு கைதிக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் சேலைன் செலுத்தினோம் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார தெரிவித்தார். உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அரசியல் கைதிகளின் நிலைவரம் தொடர்பாக கேட்போதே ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...
தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை தாங்கள் பூரணமாக நம்புவதாக பிணையில் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஊறணியை சேர்ந்த அழகையா சுதாகரன் என்பவர் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டு மட்டக்களப்பிலுள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். அவரை கிழக்கு...
கைதிகளில் ஒருவர் உயிரிழந்தாலும் அரசாங்கம் பொறுப்புக்கூற போவதில்லை என வடமாகாண முதலமைச்சர் தம்மிடம் தெரிவித்ததாக உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை பார்வையிட்டபோதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவிதுள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுதலையாகும் பட்சத்தில் அவர்களால் அச்சுறுத்தல் காணப்படலாம் என்ற அச்சத்திலேயே அரசாங்கம் தமிழ்...
Loading posts...
All posts loaded
No more posts