- Sunday
- November 24th, 2024
நீண்டகாலமாக விசாரணைகளின்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளினால் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரத போராட்டம் நேற்று நான்காவது நாளாகவும் தொடர்ந்தது. மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்த மூன்று கைதிகள் நேற்று சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கொழும்பு மகசின் சிறைச்சாலையில் நீண்டக்காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பெண் கைதி உட்பட 14 அரசியல் கைதிகளும் அனுராதபுரம் சிறைச்சாலையில்...
பொதுமன்னிப்பு அளித்து தங்களை விடுதலை செய்யுமாறு கோரி மூன்றாவது முறையாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் இன்றும் போராட்டத்தை தொடச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பு – மெகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 14 பேர் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 22ஆம் திகதி முதல் ஈடுபட்டு வருகின்றனர். இந்த...
மகஸின் சிறையில் 15 அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்! அநுராதபுர சிறையில் இருவரின் போராட்டமும் தொடர்கிறது!!
கொழும்பு, மகஸின் சிறைச்சாலையின் 'ஜே' பிரிவில் உள்ள 14 ஆண் தமிழ் அரசியல் கைதிகளும், பெண்கள் பிரிவிலுள்ள ஒரு பெண் தமிழ் அரசியல் கைதியுமாக 15 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி நேற்றுக் காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரமசகாயம் உதயகுமார், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், நடேஸ் குகநாதன், மு.சிவநாதன், மா. நீதிநாதன், க.வேதநாயகம்,...
இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைய தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் வேறு கைதிகளுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொது மன்னிப்பளித்து அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமை மேலும் மோசமடையும் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி,...
இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் இருவர் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிறைகளில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை விவாதம் ஒன்றை முன்னெடுக்கவுள்ள நிலையில், இந்த இருவர் தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அனுராதபுரம் சிறையிலுள்ள இந்த இருவரும் உண்ணாவிரத்ததை மேற்கொண்டுள்ளதை அவர்களின் உறவினர்களும், அரச அதிகாரிகளும்...
அநுராதபுரம், மகஸின் சிறைகளில் 17 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி போராட்டத்தில் குதிப்பு!
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரு தமிழ் அரசியல் கைதிகள் இன்று திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில், கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் 2009ஆம் ஆண்டு மே மாதம்...
இரண்டு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலர் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமக்கான விடுதலையை வலியுறுத்தி இரண்டு தடவைகள் உண்ணாவிரத போராட்டத்தில் அரசியல் கைதிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தின் உறுதிமொழி்க்கு அமைய அவர்கள்...
சிறைகளில் நீண்டகாலமாக நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறுவது தவறானது. குறைந்தளவானவர்களே சிறைகளில் உள்ளனர். அவர்களிலும் குற்றம் இனங்காணப்படாதவர்கள் சொற்ப அளவிலேயே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஒருங்கிணைந்த நல்லிணக்கத்துக்கான வழிமுறைகளுக்கான இணையத்தளம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (12) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது, அதில்...
அரசியல் கைதிகளுக்கு எப்படியாவது தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் சிலர் முயற்சிப்பதாக, அரசியல் கைதிகள் விவகாரங்களை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றின் நீதிபதி ஐராங்கனி பெரேராவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிணை வழங்கப்பட்ட 14 அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தல் தொடர்பில் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்து...
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுஸைனின் யாழ். விஜயத்தின் போது காணாமல் போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். அகில் இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை (07) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. யாழ். நல்லூர் ஆலய முன்றலில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கான...
ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சில சமூகவிரோத கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பின் அடிப்படையில், இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய உத்தேசிக்கப்பட்டுள்ள சில கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை...
"எதிர்வரும் பெப்ரவர் மாதம் 4ஆம் திகதி - இலங்கையின் சுதந்திர தினத்தன்று எம்மை விடுவிக்காவிடின் சிறைச்சாலைகளில் எமது விடுதலைக்கான போராட்டம் தொடரும்." - இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர். கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே தமிழ் அரசியல் கைதிகள் மேற்கண்டவாறு...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் மூவர் இன்று குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிணையில் விடுதலை செய்யப்பட்ட 39 அரசியல் கைதிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்நிலையில்...
போட் சிட்டி எனப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துடன் இலங்கை முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் சீனாவின் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். சுவிஸர்லாந்தில் நேற்று ஆரம்பமாகியுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ள, ரணில் விக்ரமசிங்க, ஊடகவிலயாளர் சந்திப்பில் கலந்து...
அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தன் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பி கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை மக்கள் இயக்கம் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கைதிகள் விடயத்தில் சரியான தீர்மானத்தினை முழுமையாக எடுப்பீர்கள் என்ற நம்பிகையில்...
அரசியல் கைதிகளின் விவகாரம் சரியான முறையில் கையாளப்படவில்லை என சட்டத்தரணி கே.வி. தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு சுமூகமான சூழல் நிலவுகின்ற நிலையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசியல் ரீதியான அணுகுமுறை மற்றும் சட்ட ரீதியான அணுகுமுறை என இரண்டு வழிமுறைகள் காணப்பட்டன. இதில் எந்தமுறையூடாக பிரச்சினையை அணுகப் போகின்றோம் என்பதை...
வெசாக் மற்றும் சிங்கள வருடப் பிறப்பை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்படுவது போன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில்...
"புலிகளுடன் தொடர்புடைய தவறுகளுக்காக தண்டனை பெற்றவர்கள் அரசியல் கைதிகள் அல்லர்'' என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் ஜயந்த சமரவீர எம்.பி. எழுப்பிய கேள்விக்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த...
தமது நிலை குறித்து அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மத தலைவர்களுக்கு தமிழ் அரசியல் கைதிகள் அவசர கடிதம் ஒன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளனர். நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாம் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டமை தொடர்பிலும், தமது விடுதலை தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 17 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்யவுள்ளதாக, பொலிசார் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று அறிவித்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றில், இந்தக் குற்றப் பத்திரிகைகளை, சட்ட மா அதிபர் தாக்கல் செய்ய உள்ளதாக பயங்கரவாத தடுப்பு...
Loading posts...
All posts loaded
No more posts