- Sunday
- February 23rd, 2025

தமது விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க வேண்டுமென கோரியுள்ள இவர்கள், தாம் தொடர்புடைய வழக்குகளை தமிழ் பிரதேசங்களுக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தமது விடுதலையை...

அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இன்று புதன்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த சிறைச்சாலையில் உள்ள 25 தமிழ்க் கைதிகளே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். நாளை அல்லது நாளை மறுதினம் அளவில்...

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ஆம் திகதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். கைதுசெய்து நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டுமெனவும், பலகாலங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணைகள் யாவும் தமிழர் பிரதேசத்து நீதிமன்றங்களுக்கு மாற்றப்படவேண்டுமெனவும் வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும்...

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ ஆனந்த சங்கரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தியுள்ளார். அரசியல் கைதிகளை நீண்டகாலமாக தடுத்து வைத்திருப்பதற்கு நியாயமான எந்தவொரு காரணமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல்வேறு தடவைகள் அவர்கள் நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லப்பட்ட போதிலும் எந்தவொரு வழக்கு விசாரணைகளும் இன்றி...

தமிழ் அரசியல் கைதிகள் 12 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 12 பேர் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களின் விளக்கமறியல் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின்...

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து கடந்த 18 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரும் இன்று வெள்ளிக்கிழமை பகல் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளனர். இந்த தகவலை தமிழ் அரசியல் கைதி உறுதிப்படுத்தினார். மிகவிரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் சார்பாக நீதின்றத்தில் இன்று முன்னிலையான...

உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார். உண்ணாவிரதம் இருக்கும் 13 தமிழ் அரசியல் கைதிகள் இன்றைய தினம் சிறைச்சாலையினால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் இதன்போது, குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானது என்பதால் அவர்களுக்கு எதிராக...

கடந்த காலங்களில், அனைத்துத் தரப்பினரும் எம்மை ஏமாற்றிவிட்டனர். அதனால், இனியும் எவரிடத்திலும் நாம் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை. எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரையில், எமது இந்த உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை' என்று கொழும்பு மெகசின் சிறைச்சாலையில், உண்ணாநிலைப் போராட்டமொன்றை முன்னெடுத்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு போராட்டம் நடத்திவரும் கைதிகளின் நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக,...

தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணிவரை அந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும், அவர்களது உண்ணாவிரதப் பேராட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கிலும் கிளிநொச்சியில் சங்கிலிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை 8.10 அளவில் ஆரம்பமாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ன. இதற்கமைய கிளிநொச்சி திரேசம்மா தேவாலயத்தில் இந்த கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகி, நகர் பிள்ளையார் கோவில்...

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் 14 அரசியல் கைதிகளையும் தொடர்ந்து எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்படுவீர்கள் என வடமாகாண ஆளுநா் ரெஜினோல்ட் கூரே, அமைச்சா் டி.எம் சுவாமிநாதன் ஆகியோர் சிறைச்சாலைக்கு நேரில் சென்று உறுதியளித்த நிலையிலும் நீதிமன்றம் இன்று புதன்கிழமை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. நீண்டகாலமாக தடுத்து...

தமது விடுதலையை வலியுறு்தி உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் ஆறு பேரின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை வைத்திய சாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமக்கு உரிய பதில் வழங்கப்பட வேண்டும். அதுவரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்து 14 அரசியல் கைதிகளும் நேற்று போராட்டத்தை தொடர்ந்திருந்தனர். கடந்த சனிக்கிழமை...

உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை சந்தித்து அவர்களது கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளதாக, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்களது கோரிக்கைகளுக்கு அமைய அந்தந்த பிரிவுகள் குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மெகசீன் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை சந்தித்து விட்டு வடக்கு ஆளுனர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியில் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. உறவுகளை விடுவிக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தி மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை 7 மணிக்கு முனியப்பர் கோவில் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்...

நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தம்மை விடுவிக்க அரசு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரி கொழும்பு, மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது என்று அவர்களின் உறவுகள் தெரிவித்தனர். உண்ணாவிரதக் கைதிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளபோதிலும் இது தொடர்பில் அரசு தரப்பு பாராமுகமாகவே இருக்கின்றமை தமக்கு...

'சில மாதங்களுக்கு முன்னர் ஒருசில அமைச்சர்களும் அரசியல்வாதிகளும், தமிழ் அரசியல் கைதிகள் - புனர்வாழ்வுக்குச் செல்ல விரும்பவில்லை என்று ஜனாதிபதியிடம் கருத்துப்படத் தெரிவித்திருந்தனர். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. நாங்கள் எப்பொழுதும் புனர்வாழ்வுக்குத் தயாராக இருக்கின்றோம். போராட்டத்தில் சம்பந்தப்படாத ஒருசிலர் மாத்திரம், தமக்கு புனர்வாழ்வு தேவையில்லை என்றும் தாம் விடுதலை செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்....

தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட அனுமதிக்க முடியாது எனவும், அவர்களின் விடுதலை குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது. ஆனால், அரசியல் கைதிகள் குறித்து சட்டமா அதிபரின் அறிக்கையை தாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், குறித்த அறிக்கையின் பிரகாரமே...

"கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் உதவவேண்டும்.'' - இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14...

நல்லாட்சி அரசாங்கம் தனது கணவரையும் ஏனைய அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வின் ஊடாகவோ அல்லது பொது மன்னிப்பின் அடிப்படையிலேயோ, விடுதலை செய்ய வேண்டுமென, மகஸின் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதி ஒருவரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த 2009ம் ஊனமுற்ற...

நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்துவைத்திருக்கும் தம்மை விடுதலைசெய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கொழும்பு, மகஸின் சிறைச்சாலையின் 14 தமிழ் அரசியல் கைதிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு சோர்வடைந்த நிலையிலும் இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தைத் தொடர்கின்றனர். இந்தக் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக மகஸின் சிறைச்சாலையிலுள்ள ஏனைய 75 தமிழ் அரசியல் கைதிகளும் இன்று திங்கட்கிழமை ஒரு நாள்...

All posts loaded
No more posts