- Sunday
- December 22nd, 2024
சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தும் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் புத்தூரில் நேற்று (திங்கட்கிழமை) இப்போராட்டம் நடைபெற்றது. அனுராதபுரம் சிறையுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த பல நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில்...
உண்ணாவிரத போராட்டத்தினால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே சிறைச்சாலை புனரமைப்பு மற்றும் நீதியமைச்சர் தலதா அதுகோரல மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தற்போது வழக்கு...
இலங்கை இராணுவத்தின் யுத்தக் குற்றங்களை மறைப்பதற்கே தமிழ் அரசியல் கைதிகளைப் பகடைக்காய்களாக பயன்படுத்துவதாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை இராணுவத்தினரை யுத்தக் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்காகவே...
சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் குடிமகனதும் கடமை என, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டன போராட்டமொன்று இடம்பெற்றிருந்தது. குறித்த போராட்டத்தில்...
‘வாய்ப்பேச்சில் நல்லிணக்கம் வதைப்பது அரசியல் கைதிகளையா?’ எனக் கோஷமெழுப்பி தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இப்போராட்டம் நடைபெற்றது. இதன்போது...
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று (வியாழக்கிழமை) ஏழாவது நாளாக நீடித்து வருகிறது. தங்களை விடுவிக்குமாறு அல்லது புனர்வாழ்வளிப்புக்கு உட்படுத்துமாறு கோரி இவர்கள் கடந்த 14ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 வருடங்களுக்கு...
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியுடனான கடைசி சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான உடன்படிக்கைகள் தொடர்பில் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர்...
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் அவசர தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தியுள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற நிலையில், இது தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...
அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது. தங்களை விடுவிக்குமாறு அல்லது புனர்வாழ்வளிப்புக்கு உட்படுத்துமாறு கோரி கடந்த 14ஆம் திகதி 8 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் ஒருவர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது....
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல உண்மைகளை மறைத்து வருவதுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு சர்வதேசத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்து வருகின்றதெனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ஆகியன காலதாமதமாகின்றதென...
தமிழ் பிரதிநிதிகள் தங்களை கண்டுக்கொள்ளாத நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகளே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 2012ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மதியரசன் சுலக்ஸன், கணேசன் தர்சன், இராசதுரை திருவருள் ஆகியோர் இதற்கு முன்னர்...
அரசியல் கைதிகளின் விடுதலை எதிர்வரும் தேர்தலில் தமக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என அரசாங்கம் அஞ்சுவதாக யாழ். மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை மங்களராஜா தெரிவித்தார். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து...
நல்லாட்சியுடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்திற்கு தீர்க்கமான அழுத்தம் கொடுக்க வேண்டும் என, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு சென்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான...
“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை – முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி” எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நடைபெற்றது. அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை, சமகால சட்ட விடயங்களுக்கான அரங்கம் ஆகியன இணைந்து இந்தக் கலந்துரையாடலை நடத்தியது. அடையாளம் அமைப்பால் இது...
யுத்தத்தின்போது கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் உயிருடன் இருக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற யுத்த வெற்றியின் ஒன்பதாவது ஆண்டு நினைவுத் தினத்தின்போது, தமிழ் அரசியல் கைதிகள் என்று...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் உள்ள சிக்கல்களாக, ஜனாதிபதி கூறும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஆயுள் தண்டனை பெற்றுள்ள தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த போதே சுமந்திரன்...
தமிழ்தேசிய கூட்டமைப்பு எங்களுக்கு உதவும் என நம்பியே வாக்களித்தோம். ஆனால் அவர்களால் எங்கள் வாழ்க்கையில் மாற்றம் எதுவும் நடக்கவில்லை. கூட்டமைப்பு உண்மையாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை அறிய நடவடிக்கை எதனையுமே இதுவரையில் எடுக்கவில்லை. எடுக்கவும் மாட்டார்கள். 3 தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க கூறியிருக்கின்றார்கள். மதியரசன்,...
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, 3 அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை, அநுராதபுரம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (02) உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுரை திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம்...
தமிழ் அரசியல் கைதிகளை பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுடன் தடுத்து வைத்துள்ளதால் அவர்கள் பாரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு முதல்வரை நேற்று (திங்கட்கிழமை) முற்பகல் சந்தித்த தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், குறித்த மகஜரை கையளித்துள்ளனர். குறிப்பாக கொலை, கொள்ளை, போதைவஸ்துடன் தொடர்புடையவர்கள்...
அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த இரண்டு அரசியல் கைதிகள் சுகயீனம் அடைந்ததன் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதியரசன் சுலக்ஷன் மற்றும் ராசத்துறை திருவருள் என்ற இரு கைதிகளே இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உண்ணாவிரதம் மேற்கொண்ட கணேசன் தர்ஸன் என்ற கைதி மரண தண்டனை கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை...
Loading posts...
All posts loaded
No more posts