- Sunday
- December 22nd, 2024
அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று (28) விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டிருந்ததாக, விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதனின் ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல்கைதிகளின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட விசேட குழுவான பிரதியமைச்சர்கள் காதர் மஸ்தான், ச.வியாழேந்திரன், இ.அங்கஜன் ஆகியோர் இன்று நாமல் ராஜபக்ச எம்.பியையும், நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவையும் சந்தித்து பேசியுள்ளனர். அரசியல்கைதிகளை...
அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் புதிய அரசாங்கத்தினால் விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை நேற்று (திங்கட்கிழமை) பார்வையிட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தற்போது சிறந்த...
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் ஏன் இழுத்தடிப்புகளை செய்து வருகின்றது என தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இவ்வாறான செயற்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்தில் மனித நேயம் கேள்விக் குறியாகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு...
அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக, கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலைத் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மாலை முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் அரசியல் கைதிகளின் விடுதலைக் குறித்து...
தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் மிக மிக முக்கியமாக அமையும் அதேநேரம் முடிந்தவரையில் மகிந்தவிற்கு தீனிபோடாமலும் நாம் செயல்பட வேண்டியதும் இன்றைய தேவையாகவுள்ளது. என வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள சிறைகளில் வாடும் 107 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்கப்பட வேண்டியது கட்டாயம். அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
தடுப்பிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 100இற்கு 99 வீதமானவர்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் இது மனித நீதிக்கு எதிரானதென்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள நடைபவணி இன்று (சனிக்கிழமை) அநுராதபுரத்தை சென்றடைந்தது. குறித்த...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அரசாங்கம் தமது நல்லெண்ணத்தை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடை பவணி, இன்று (சனிக்கிழமை) அநுராதபுரத்தை சென்றடைந்துள்ளது. இந்நிலையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம்...
உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யத்தவறின் வரவு செலவு திட்டத்தை நிராகரிப்போம் என்ற அழுத்தத்தினை தமிழ் தலைமைகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைத்துள்ளதுடன், உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல் நிலையை கருத்திற்கொண்டு, உண்ணாவிரதத்தினை கைவிடுமாறும் சிவில் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அனுராதபுரம் சிறையில் கடந்த 29 நாட்களாக தமிழ்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த, ஜனாதிபதியுடனான பேச்சுவார்ததையில் தீர்மானம் எதுவும், எட்டப்பட வில்லை என, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர், சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோர் நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதியை, நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தநிலையில் குறித்த இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் பேச்சாளர்...
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனக்கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் 4 ஆவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபயணம் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா நகரை சென்றடைந்தது. இதன்போது வவுனியா மக்கள் தமிழ் அரசியல் கைதிகளுக்காக தமது ஆதரவையும் தெரிவித்து பெருந்திரளாக வவுனியா நகரில் கூடினர். ஓமந்தையிலிருந்து இன்று காலை ஆரம்பித்த நான்காவது நாள் பயணமானது வவுனியா நகரின்...
ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்து தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்க முடியாது என தெரிவித்த வடக்கு முதலமைச்சர், அமைச்சர் தலதா அத்துகோரல கூறிய கருத்து தவறு என சுட்டிக்காட்டியிருந்தார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அருட்தந்தை எம். சக்திவேல் உள்ளிட்ட குழுவினரை கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார். இதன் பின்னர் கருத்து...
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து தொடர்ந்தும் பேச்சு நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “நான் அறிந்தவகையில் 2001 ஆம் ஆண்டு,...
அரசியல் கைதிகளின் விடுதலையும், அவர்களுடைய உயிர்களும் இன்று தமிழ் மக்களின் கைகளில் இருக்கின்றது என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை எம். சக்திவேல் கூறியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை, எதிர்வரும் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிய விடயமாக முன்வைக்குமானால் போராட்டத்தை கைவிட தயாரென தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கத்திடம் இவ்விடயத்தை இப்போதே தெரிவித்து, அது தொடர்பில் தமக்கு வாக்குறுதி வழங்கவேண்டுமென அவர்கள் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்....
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்களின் கிளிநொச்சியை நோக்கிய இரண்டாம் நாள் நடைபவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று பளையை சென்றடைந்த மாணவர்கள், இன்று (புதன்கிழமை) அங்கிருந்து பரந்தன் ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளனர். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் நேற்று அனுராதபுர சிறைச்சாலையை நோக்கிய நடைபவனியை ஆரம்பிததனர். யாழ். பல்கலைகழக வளாகத்தினுள்...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவணியை ஆரம்பித்து உள்ளனர். யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் இந்த நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர். “அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய், அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல –...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் பண்டத்தரிப்பு சந்தியில் சுற்றுவட்டத்திற்கு அருகில் பண்டத்தரிப்பு மகளிர் உயர்தர பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. குறுகிய கால புனர்வாழ்வு வழங்கியாவது தங்களை விரைவில் விடுதலை செய்யவேண்டும், என்ற கோரிக்கையை முன்வைத்து...
தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தற்போது தீவிர நிலையை எட்டியுள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையின் வெறும் எட்டு கைதிகளினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி அந்த எண்ணிக்கை தற்போது 59ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, கண்டி போகம்பர சிறைச்சாலையில் ஆறு கைதிகளும், கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 43 கைதிகளும் இன்று...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுப் படுத்துமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன் போது, தமது உறவுகளுக்கு நீதி வேண்டும், அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவு படுத்து உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்....
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் விருப்பத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து திங்கட்கிழமைவவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்...
Loading posts...
All posts loaded
No more posts