- Thursday
- January 23rd, 2025
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளை கைதுசெய்து மன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்துமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார். நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு...
வடமாகாண விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட நிபுணர் குழு சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்து உள்ளதா என்பதனை ஆய்வு செய்வதனை விடுத்து , மற்றைய குழுக்களின் ஆய்வு அறிக்கைகளில் தவறு கண்டு பிடித்துள்ளார்கள். என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். வடமாகாண சபையில் நேற்றயதினம் வடமாகாணத்தில் உள்ள நீர் பிரச்சனை தொடர்பில்...
யாழ்.சுன்னாகம் கழிவு எண்ணெய் விவகார வழக்கில் ஆட்சேபனைகள் இருந்தால் அவற்றை ஒருமாத காலத்திற்குள் சமர்பிக்குமாறு உச்சநீதிமன்றம் வடமாகாண சபைக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற நீதியரசர்களான பிரியசாத் டெப், புனநேக அலுவிஹார ஆகியோர் தலைமையிலான குழாம் முன்னிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மனு விசாரணையின்போது இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பகுதியிலுள்ள நோதன் பவர்...
சுன்னாகம் நிலத்தடி நீர் அருந்தக்கூடியதா? இல்லையா? என்பது தொடர்பாக இதுவரை முறையான அறிக்கையெதுவும் சமர்ப்பிக்காததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணை நேற்றையதினம் நீதிமன்றில் நடைபெற்றது. இதன்போது, பிரதேச வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது, சுன்னாகம் நிலத்தடி நீரினை அருந்தலாமா?...
சுன்னாகம் பிரதேசத்தில் குடிநீரில் கழிவு எண்ணெய் கலப்பிற்கு காரணமாக நிறுவனம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நோர்தன் பவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மத்திய நிலையம் சார்பாக பேராசிரியர் ரவீந்திர காரியவசம் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை நேற்றைய தினம்...
சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீரில் கழிவு ஓயில் மாசாகக் கலந்தமை தொடர்பாக நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய சுற்றாடல் மற்றும் குடியிருப்பு சுகாதாரப் பணிப்பாளருக்கு பகிரங்கப் பிடியானையை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதுடன் கொழும்பு சிரேஸ்டப் பொலிஸ் அத்தியட்சகரையும் மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளையும் பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு விசாரனையானது நேற்றைய தினம் மல்லாகம் நீதவான்...
வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதா என்பது தொடர்பிலும் ஆய்வுசெய்து அறிக்கை சமர்பிக்குமாறு நீர்வள சபைக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார். குறித்த கிணறுகளில் உள்ள நீரை மக்கள் பருக முடியுமா இல்லையா என்பது தொடர்பாகவும் ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறித்தியுள்ளார். கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதால்...
சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலக்கப்பட்டுள்ளது எனத் தொடரப்பட்ட வழக்கிற்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்கவேண்டுமென வடமாகாண பிரதம செயலாளருக்கு மல்லாக நீதிமன்ற நீதவன் ஏ.யூட்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் குறித்த வழக்கு விசாரணைக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் முன்னிலையாகவேண்டிய அவசியமில்லை எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்....
இரனைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர்கொண்டு செல்லப்படுவது தவிர்க்கபட முடியாதது. என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று(02) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வட மாகாண குடிநீர்திட்டம் தொடர்பிலான உயர் மட்ட கலந்துரையாடலின் பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...
சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சினை தொடர்பில் வெகுவிரைவில் தீர்வினை முன்வைப்பதற்கு நீர் வழங்கல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில் இதற்கான ஒத்துழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார். கடந்தக்காலங்களில் இந்த பிரச்சினையினை ஒரு சிலர் அரசியல் சுயநலனின் அடிபடையில் கையாண்டமையே அப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள்...
நிலத்தடி நீரில் மாசு தொடர்பில், இன்று காலை சுன்னாகம் சந்திக்கருகில் கவனயீப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை சமூக நீதிக்கான பொதுசன அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள மின் நிலையத்திலிருந்து பாதுகாப்பற்ற முறையில், வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் நிலத்தடி நீரில் கலந்துள்ளமையால், சுன்னாகம் அதனை அண்டிய சுற்று வட்டார பிரதேசங்களில் நிலத்தடி நீரில்...
யாழ்.குடாநாட்டு குடிநீரில் எண்ணை நச்சுக்கள் மற்றும் பார உலோகங்களின் தாக்கம் இல்லை. ஆனால் மலக் கிருமிகளும், நைத்திரேற்றும் அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நிலத்தடி நீர் தொடர்பான நிபுணர் குழு தனது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. சுன்னாகம் பகுதியில் ஆரம்பமாகி தெல்லிப்பளை வரையிலான பகுதிகளில் மக்களுடைய குடிநீர் கிணறுகளில் எண்ணெய் படலம் உருவாகியுள்ளதாகவும்,கழிவு...
"யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கழிவு ஒயில் நிலக்கீழ் நீரில் கலந்துள்ள விடயம் தொடர்பில் கனிய எண்ணெய் அமைச்சினூடாக ஆராய்ந்து பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று ஊடகத்துறை மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர்...
தூயநீருக்காக நல்லூர் முன்றலில் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த உண்ணாவிரதப் போராதப் போராட்டம் ஆளுனர் பள்ளிஹக்கார மற்றும் அரச அதிபர் வேதநாயகம் போன்றோரது நேரடித் தலையீட்டினால் சற்று முன்னர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. உண்ணாவிரதிகள் அமர்ந்திருந்த நல்லூர் முன்றலுக்கு நேரடியாகச் சென்ற ஆளுனரும், அரச அதிபரும் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த நீர்மாசடைதல் தொடர்பாக உண்ணாவிரதிகளின் முக்கிய கோரிக்கைகளுக்குச்...
நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்துள்ளதா எனச் சோதித்து அறியக்கூடியரூபா 20 இலட்சம் பெறுமதிமிக்க நவீனகருவி அமெரிக்காவில் இருந்து வந்துசேர்ந்துள்ளது. இதனை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு தொடர்பாக ஆராய்ந்து வரும் நிபுணர்குழுவிடம் நேற்று புதன்கிழமை (11.03.2015) கையளித்துள்ளார். வலிகாமம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு கலந்துள்ளது தொடர்பாக...
வலிகாமம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் கழிவுஎண்ணெய் கலந்துள்ளது தொடர்பாக ஆராய்வதற்காக நோர்வே நாட்டு நிபுணர்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் இப்பிரச்சினை தொடர்பாக வடக்கு விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (25.02.2015) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்....
வடக்கு மாகாண சபையின் 24ஆவது அமர்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வலிகாமம் நிலத்தடி நீரின் எண்ணெய் மாசு தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கை வலிகாமம் பிரதேச நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு 10.02.2015 வலிகாமம் பிரதேசத்தில் குறிப்பாகச் சுன்னாகம், தெல்லிப்பளைப்பகுதிகளில் உள்ள கிணறுகள் பலவற்றில் குடிதண்ணீருடன் எண்ணெய் மாசாகக் கலந்திருப்பது அப்பகுதி மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது....
சுன்னாகம், தெல்லிப்பளை பிரதேசங்களில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாக விரிவான விஞ்ஞான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாகப் பூரணமான ஆய்வு ஒன்றை நடாத்துவதற்கு வடக்குமாகாண முதல்வரின் பணிப்பின் பேரில் நிபுணர் குழு ஒன்று அண்மையில் உருவாக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்,கிழக்கு பல்கலைக்கழகம்,கொழும்புபல்கலைக்கழகம், மற்றும் பேராதனைபல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைசார் வல்லுநர்கள் இக்குழுவில்...
யாழ்.சுன்னாகம் பகுதியில் கழிவு ஒயிலினால் பாதிக்கப்பட்ட கிணறுகளை பார்வையிடுவதற்காக கொழும்பிலிருந்து சுகாதார வைத்திய அதிகாரிகள் இன்றைய தினம் குறித்த பகுதிக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன், நீர் மாதிரிகளையும் சேகரித்துள்ளனர். இன்றைய தினம் காலையிலேயே உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய் ஆகிய பகுதிகளுக்கு நேரில் விஜயம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்படும் இடங்களிலிருந்து நீர் மாதிரிகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்....
நொர்தன் பவர் நிறுவனத்தை மூடுதல் தொடர்பில் நீதிமன்றத்தில் உத்தரவு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்காலிகமான கைவிடப்படுவதாக பருத்தித்துறை சுகாதார வைத்தியதிகாரி பணிமனை வைத்தியர் ஜி.செந்தூரன் தெரிவித்தார். சுன்னாகம் சிவன் கோவில் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர்...
Loading posts...
All posts loaded
No more posts