- Sunday
- November 24th, 2024
போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட பின்னரே தமது நிலைப்பாட்டை வெளியிடமுடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளதாக இந்திய நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் விசாரணைக்கென்று நியமிக்கப்பட்ட சன்ட்ரா பெய்டாஸ்,...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளாது. எமது நிலைப்பாட்டை மீறி இலங்கையில் உள்ளக விசாரணை நடைபெற்றால் புலத்தில் வாழும் எம் சொந்தங்களையும் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து சர்வதேச ரீதியில் பெரும் போராட்டங்களை முன்னெடுக்க எண்ணியுள்ளோம். - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரும் வன்னி மாவட்ட...
உள்நாட்டு விசாரணையினை நிராகரிப்பதுடன், சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி போராட்டத்தினை முன்னெடுக்க ஈழத் தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு வழங்குமாறு வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவின் உதவி இராஜாங்க...
உள்ளக விசாரணை என்பது ஒரு சிலருக்கு தண்டனை கொடுப்பதுடன் முடிந்து விடும். தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வைக் கொண்டு வராது. ஆகவே இந்த விசாரணை சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற...
வடக்கு மாகாண சபையின் நிலைப்பாடு சர்வதேச விசாரணையே, அதில் எவ்வித மாற்றமும் கிடையாது என வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யப்பானிய அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் மறிக்கோ யமமோடோ சீ.வீ.கே.சிவஞானம் அவர்களை வடக்கு மாகாண பேரவை செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். போர்...
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா கூறினால், அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. நாங்கள் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போன்று சர்வதேச விசாரணையையே தொடர்ந்து கோருவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள உள்ளகப் பொறிமுறைக்கு ஆதரவு வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளமை குறித்து தமிழ் சிவில் சமூக அமையம் அதிர்ப்தி வெளியிட்டுள்ளது. எனினும் அமெரிக்காவின் இந்த தீர்மானம் தமக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என அமையத்தின் பேச்சாளர் ஆர் கே...
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை கைளிப்பதற்காக விரைவில் கொழும்பு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நாவின் 30வது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில், அதற்கு முன்னர் அதனை இலங்கை ஜனாதிபதியிடம் கைளிப்பதற்காக அவர் வருகை...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆயினும்...
நடைபெற்று முடிந்த தேர்தல் மற்றும் தேசிய பட்டியல் தெரிவில் இலங்கை தமிழரசு கட்சி தன்னிச்சையாக செயற்படுமாயின் கூட்டாக இயங்கும் ஏனைய கட்சிகளுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை இல்லாமல் போய்விடுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய சர்வதேச சமூகத்திற்கு எந்தவொரு உரிமையும் இல்லை என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சமூகம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளமை நாட்டின் நீதிதுறையின் மீது நம்பிக்கை குறைவடைந்தமையினாலேயே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் தி ஹிந்து ஊடகத்திற்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர்...
புதிதாக எந்த அரசாங்கம் உருவாகினாலும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எந்த அரசாங்கம் மத்தியில் ஆட்சி அமைத்தாலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளக விசாரணைக்கா,...