- Sunday
- November 24th, 2024
சர்வதேச தலையீட்டில் இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடாகும். எக்காரணத்தை கொண்டும் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது என பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா பேரவையில் கலந்துகொள்வது...
ஜெனிவாவுக்கு செல்வதற்காக அனுமதியை கோரி வடமாகாண ஆளுநரிடம் கடிதம் சமர்ப்பித்து இரண்டு வார காலமாகின்ற போதிலும் இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லையென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார். வடமாகாண சபை தலைவரிடம் உரிய அனுமதி பெற்று...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையைத் தமிழர்கள் கேட்பதற்கு போதிய நியாயம் உண்டு'' - என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் மாலை திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பைத் தனது திருகோணமலை இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நடத்தினார். இந்தச்...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அத்துடன் மீண்டும் ஒரு சர்வதேச விசாரணை...
சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழுவின் சர்வதேச விசாரணை கோரும் கையெழுத்து போராட்டம் கிழக்கிற்கும் நகர்ந்துள்ளது. 4 வது நாளான இன்று கிளிநொச்சி மற்றும் திருகோணமலைக்கும் விஸ்தரிக்கப்பட்டது. திருகோணமலையில் இன்று மாலை 3 மணியளவில் மறைமாவட்ட முன்னாள் ஆயர் வணக்கத்திற்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தார் இதேவேளை யாழ்பாணத்திலும் போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது...
சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றின் ஊடாகவே விசாரணை நடாத்தப்படல் வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், எந்த வடிவிலானதொரு உள்ளக பொறிமுறை மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை என்பதனை வெளிப்படுத்தியும் இவற்றினை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்...
தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச விசாரணை பொறிமுறை ஊடாகவே நீதி கிடைக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குற்றம் செய்தவர்களே குற்றம் குறித்து விசாரணை செய்ய வேண்டியதில்லை. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். தமிழ் மக்கள்...
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையின் முற்பிரதி அடுத்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கை கிடைத்தவுடன் அதற்குப் பதிலளிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அரசாங்கத்தினால் இரண்டு குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா விசாரணை...
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை மீது வட மாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக தேர்தல் அறிக்கைக்கு மாறான கருத்தையே தெரிவித்திருந்தார் என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தோற்கடிக்கப்படவேண்டும் என்ற வகையில் அவரின் கருத்து அமைந்திருந்தது என்றும் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன் அவரை...
இந்த நாட்டில் ஒரு மாற்றம் வரவேண்டுமாக இருந்தால் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சர்வதேச பொறிமுறையுடன் கூடிய விசாரணை அவசியம் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா பிராந்திய சுகாதார பணிமனையின் கட்டடத்தை நேற்று முன்தினம் வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்....
தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் எனக்கோரி சர்வதேச பொறுப்புகூறல் பொறிமுறைக்கான செயற்பாட்டு குழுவின் ஒழுங்கமைப்பில் இரண்டாவது நாளாக இன்று யாழ். மாவட்டத்தில் 5 இடங்களில் கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக யாழ்.நகர்ப்பகுதி, திருநெல்வேலி, பருத்தித்துறை நகர், பொன்னாலை மற்றும் நல்லூர் ஆகிய இடங்களில் குறித்த கையெழுத்து...
மனித உரிமை சட்ட மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்துவதாக, தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழுவின் தலைவர் வி.பி.சிவநாதன் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை யாழ். கந்தர்மடம் - மணற்றரை ஒழுங்கையில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முண்னணியின்...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறையினை வலியுறுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பொது வேலைத்திட்டம் சம்பந்தமாக வெகுஜன அமைப்புகள் மக்கள் பிரதிநிதிகள் பல்கலைக்கழக சமூகம் ,ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களிடையேயான கலந்துரையாடல் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் திருநெல்வேலியில் இன்று (2) மாலை இடம்பெற்றது. கலந்துகொண்டவர்களிடமிருந்து பெறப்பட்ட...
இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்தொடர்பாக சர்வதேசவிசாரணை தேவை எனக்கூறி கையெழுத்துப் போராட்டம் நேற்றயதினம் புதன்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது. இதனை கூட்டமைப்பின் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்சிவசக்திஆனந்தன் கையொப்பமிட்டு ஆரம்பித்துவைத்தார். வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்திஆனந்தன் மற்றும் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு வவுனியா, முத்தையாமண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்திற்கு...
இன அழிப்பு தொடர்பிலான சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றினை கோரி வடமாகாணசபை தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. இறுதி போரின் போது இலங்கை அரச படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறலுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை காலை முன்னெடுத்திருந்தார். வடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை...
இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை நடைபெற்றிருப்பதாகவும், அந்த அறிக்கை சில நாட்களில் வெளிவரும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று ஞாயிறன்று கொழும்பில் கூடிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் (டெலோ,...
இலங்கையின் இறுதிப்போரில் அடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் போராட்டங்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்புவிடுத்துள்ளது. இந்த தொடர்ச்சியான போராட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகைளையும் பொதுஜன அமைப்புக்களையும் மக்களையும் இணந்து கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நாளை(2) முக்கிய கூட்டம் ஒன்றை அனைத்து தரப்பினருடனும் ஏற்பாடு செய்துள்ளனர்...
உள் விசாரணை தமிழர்களுக்கு நியாயமான தீர்வைத் தராது. ஏனெனில், உள் விசாரணை பொலிஸிடம் வந்து நிற்கும். இதுவே இலங்கையின் சட்டம். இலங்கையில் போர்க்குற்றங்களை விசாரிக்கக்கூடியளவுக்கு சட்டங்கள் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஞாயிற்றுக்கிழமை (30) தெரிவித்தார். 'உள் விசாரணை மேற்கொள்ளாது,...
Loading posts...
All posts loaded
No more posts