- Tuesday
- December 24th, 2024
மரங்களை நடுகை செய்வது சூழலியல் நோக்கில் ஓர் அறிவார்ந்த செயற்பாடு. அதேசமயம் தழிழ்ப் பண்பாட்டில் மரங்களை நடுகை செய்வது ஒரு உணர்வுபூர்வமான செயற்பாடாகவும் உள்ளது. அந்தவகையில், மண்ணுக்காக மரணித்த எமது உறவுகள் அத்தனைபேரையும் நாம் கூட்டாக நினைவு கொள்ளும் இந்தக் கார்த்திகை மாதத்தில் அவர்களின் நினைவாக மரங்களை நடுகை செய்வது எமது பண்பாட்டு உரிமை என்று...
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவைபற்றி மாகாணசபை உறுப்பினர்கள் பேசத் தேவையில்லை. இவர்கள் அபிவிருத்தியில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதுமானது என்று சிலரால் தொடர்;ச்சியாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர்...
சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கென இராணுவம் உல்லாச விடுதியொன்றை நடத்தி வருகிறது. இராணுவம் இதனை வடக்கு மாகாண சுற்றுலாத்துறையிடம் கையளிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார்;. உலக வலசைப் பறவைகள் தினத்தைக் கொண்டாடும் முகமாக வடமாகாண சுற்றாடல் அமைச்சு மாகாணக் கல்வி அமைச்சுடன் இணைந்து மாணவர்களுக்கான...
கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் காரணமாக, இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் இந்த மண்ணை விட்டு இடம் பெயர்ந்துள்ளார்கள். யுத்த அகதிகளாகவும் அரசியல் அகதிகளாகவும் இடம்பெயர்ந்த நாம் வருங்காலத்தில் சூழலியல் அகதிகளாகவும் இடம் பெயர வேண்டிய அவலம் நேர்ந்துவிடக் கூடாது என்று வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு...
யாழ். மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.3௦ மணியளவில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெரும் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. வடமாகாணசபை ஆளுங்கட்சியினருக்கும் , எதிர்கட்சியினருக்கும் இடையே இடம்பெற்ற கருத்து மோதலையடுத்து தண்ணீர் போத்தல்களால் இருதரப்பினரும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசனுக்கு இரத்தக்காயம் ஏற்பட்டதை...
சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ள விவகாரம் தொடர்பாக வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (28.11.2014) வலிதெற்குப் பிரதேசசபை மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், பா.கஜதீபன்,வலிதெற்குப் பிரதேசசபைத் தவிசாளர் தி.பிரகாஷ், மத்திய சுற்றாடல் அதிகாரசபைப் பிரதிப் பணிப்பாளர் விஜிதா சத்தியகுமார்,...