- Sunday
- December 22nd, 2024
யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு தமிழரசுக் கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என கூட்டமைப்பில் அங்கம் வசிக்கும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். எனினும் கடந்த காலங்களை விட தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு சூழல் தற்போது உருவாகியுள்ள நிலையில் பொறுத்துப் பார்ப்போம் என்பதே எமது நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்....
எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள “எழுக தமிழ்“ நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு எமது அபிலாசைகளை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்தியம்புவோம் என அறைகூவல் விடுத்துள்ளார் கௌரவ முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் அவர்கள். அவர் தனது அறிக்கையில் என் அன்பார்ந்த தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே! அரசியல் யாப்பொன்றை எமக்குச் சாதகமாகத் தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கம் அதே நேரத்தில் எமது வடக்கு,...
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்களின் எழுக தமிழ் நிகழ்விற்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தி! பாறையைப் பிளந்து கொண்டு விதை முளைப்பது போல், தமிழின ஒடுக்குமுறைகளைப் பிளந்து கொண்டு 'தமிழ் மக்கள் பேரவை' உருவாகியிருப்பது, உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சம் குளிரும் செய்தியாகும். பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும் வெகு மக்களை ஒருங்கிணைத்துக் கொண்டு...
எழுக தமிழ் நிகழ்விற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளளர் வைகோ அவர்கள் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தி
மக்களது எழுச்சியை தென்பகுதியிலே வேறு விதமாக சித்தரிப்பவர்களும் இருக்கின்றார்கள். தற்போதும் அவர்கள் தென்பகுதியிலே தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதமெடுக்கும் சாத்தியங்கள் உள்ளன போன்ற பிரசாரங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் செயற்பாடுகள் வெற்றிபெறவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் வடக்கில் மக்களைத் திரட்டி அரசிற்கு எதிராக எழுச்சியைஏற்படுத்த முனைவதானது இப்படியான நிகழ்வுகளை காண்பித்து பிரசாரம் செய்வதற்கு அவர்களுக்கு கருவியாக...
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு யாழ்மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச வணிகர் கழகங்களும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பேரணிக்கு ஆதரவு வழங்குவதா வேண்டாமா என முடிவெடுக்கமுடியாமல் யாழ்.நகர் வணிகர் கழகத் தலைவர் திணறிவருவதாக தெரியவருகின்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஊடகவியலாளர்கள் இருவரின் உதவியோடு சுரேஸ் பிரேமச்சந்திரனை...
உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு எழுக தமிழ் பேரணியை வெற்றி பெறச்செய்வோம் என்று முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் 'எழுக தமிழ்' பேரணி தொடர்பாக, அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை எதிர்வரும்...
நல்லாட்சி எனப்படும் அரசாங்கத்துக்கு மூன்று முகங்கள் இருக்கின்றன. அவற்றைக் காட்டி அந்த அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது. இதனை உலகுக்கு காட்டவே எழுக தமிழ் பேரணி நடத்தப்படவுள்ளதாக யாழ்.மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் அருட்திரு மங்களராஜா தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணி...
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள 'எழுக தமிழ்' பேரணிக்கு, இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் என்பன ஆதரவு வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளன. தமிழர் தாயகத்தில் சிங்கள, பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழர் தேசம் தனித்துவமான இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஸ்டித்...
எழுகதமிழால் பேரெழுச்சி கொண்டு தமிழர்தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித்தீர்வை அடைய வரலாற்றில் இன்னொரு சந்தர்பம் தமிழ் மக்களே தவறவிடாதீர்கள் எனவும் இலட்சமாய் முற்றவெளி நோக்கி அணிதிரளுங்கள் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எழுக தமிழ் நிகழ்வு தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதன் முழு வடிவம்..
எழுக தமிழ் பேரணி குறித்து பேராசிரியர் ஓவியர் புகழேந்தி. கருத்து எனது அன்பான ஈழத்தமிழ் உறவுகழே வணக்கம். இந்த அறிக்கையின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்று கூறமுடியாத சூழலிலும் மனநிலையிலும் கனத்த இதயத்தோடு பல்வேறு நினைவுகளைச் சுமந்து இதை எழுதுகின்றேன். இலங்கையில் தமிழினம் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு துன்பங்களை துயரங்களை இழப்புகளை...
“எழுக தமிழ்!” பேரணிக்கு தமது கட்சியின் ஆதரவு இல்லையென்றும், தாம் அதில் பங்குபற்ற மாட்டோம் என்றும் அந்தப் பேரணியை நடத்தாது நிறுத்திவிடும்படியும் தமிழரசுக் கட்சியினர் தெரிவித்தனர். தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் “எழுக தமிழ்!” பேரணியில் தம்மால் பங்குபற்ற முடியாது என்று தமிழரசுக் கட்சி தரப்பு தெரிவித்திருப்பதாக...
தமிழகத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்களின் வாழ்த்துச் செய்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை. இராசேந்திரன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடத்தப்படவுள்ள எழுக தமிழ் எனும் தொனிப்பொருளிலான மக்கள் பேரணி பாரிய எழுச்சியுடன் அமைய வேண்டும் என தெரிவித்துள்ள த.தே. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இதில் அனைத்து தமிழ் மக்களும் பங்கேற்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே...
தமிழர் தாயகத்தில் சிங்கள – பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழ் தேசியத்தின் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும் யுத்தக் குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்குமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் உலகின் கவனத்தை ஈர்ப்பதற்கான மாபெரும் பேரணி ! செப்ரெம்பர் 24, 2016 (சனிக்கிழமை) அன்று யாழ் நகரில் !! வடக்கு...