- Friday
- November 22nd, 2024
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் 65வருட கோரிக்கைகளையும், அவர்களின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நியாயமான தீர்வு கிடைக்குமா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ மக்கள் பேரணியின் பொதுக்கூட்டம் நேற்று...
இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றும் அவர்களுக்கு சமஷ்டியை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு-கிழக்கு மக்களை வந்தேறுகுடிகள் என்று கூறுபவர்கள் சரித்திரபூர்வமாக வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயக பூமி இல்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்பார்களானால் வடக்கு, கிழக்கு இணைப்பு கோரிக்கையினை இப்போதே கைவிட்டு விடுகின்றோம் என்றும்...
தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ எழுச்சி பேரணி வடக்கு கிழக்கில் இருந்து திரண்டு வந்து இருந்த சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்களின் பங்கு பற்றுதலுடன் நிறைவடைந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) காலை 9.00 மணியளவில் நல்லூர் முன்றல் மற்றும் யாழ். பல்கலைக்கழக முன்றல் ஆகிய...
இன்று காலை ஆரம்பித்துள்ள எழுக தமிழ் பேரணியை எம் புலம்பெயர் சமூகமும், சர்வதேசமும் பார்ப்பதற்காக நேரடி ஒளிபரப்ப மேற்கொள்ளப்படுகின்றது. காணொளிகள் : Tamilkingdom ,Vanavil , Alex
எழுக தமிழ் பேரணியின் ஊர்வலம் நிறைவடைந்த நிலையில் தற்போது முற்றவெளியை சென்றடைந்துள்ளது. இந்த பேரணியில் மக்கள் அலையாக திரண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். மக்கள் தமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். 'எழுக தமிழ்' மாபெரும் பேரணி இன்று காலை...
தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'எழுக தமிழ்' பேரணிக்கு, யாழ். நகர முழுவதிலும் உள்ள கடைகள் பூட்டப்பட்டு, மக்கள் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர். இதன்படி யாழ் நகரபகுதியில் உள்ள வர்த்தக மற்றும் வியாபார நிலையங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், சந்தைகள் என அனைத்தும் பூட்டப்பட்டப்பட்டுள்ளன. யாழ் நகர் தவிர்ந்த வலிகாம்...
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான எழுக தமிழ் பேரணி நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக முன்றலில் மற்றொரு பேரணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது். இவ் பேரணியானது, யாழ் நல்லூர் கோயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ் முதலாம் குருக்கு வீதி, பலாலிவீதி, யாழ் அஸ்பத்திரி வீதியூடாக சென்று யாழ் திறந்த வெளியில்யில் மக்கள் பொதுக்கூட்டம்...
வடமராட்சிக் கிழக்கு பகுதிகளில் விசமிகள் சிலர் ஒரு வெள்ளை நிற முச்சக்கர வண்டியில் ஒலிபெருக்கி மூலம் நாளை(24 ) நடைபெறவுள்ள எழுக தமிழ் எழுச்சி பேரணியை குழப்பும் வகையில் வீட்டிற்கு ஒருவர் வா.எழுந்து வா தமிழீழம் அமைப்போம் போன்ற பல கருத்துக்களை முன்வைத்து ஒலிபெருக்கி கொண்டு தற்போது சென்று கொண்டிருக்கிறார்கள்
.
தமிழ் மக்கள் பேரவையின் பேரணியைக் குழப்பும் பொருட்டு ஒரு சில ஊடகங்கள் தவறான செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றன என எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளதுடன், பேரணிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சட்டபூர்வமாகச் செய்யப்பட்டிருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்...
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மக்கள் மயப்பட வேண்டும். அது தனி நபர்களிலோ, குழுக்களிலோ தங்கியிருக்க முடியாது என்பதில் தமிழ் சிவில் சமூக அமையம் பூரண நம்பிக்கை கொண்டுள்ளது. எமக்கான தீர்வை நாங்களே தான் பெற்றுக்கொள்ள முடியும், வேண்டும். அதை வேறு யாரும் பெற்றுத்தர முடியாது. தெளிவான அரசியல் நோக்கோடு எதிர் நோக்குப் பார்வையும் மக்கள்...
நாளை 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணிக்கு உலகத் தமிழர்கள் பேராதரவு வழங்கியுள்ள நிலையில், தங்களது கடற்றொழிலாளர் சங்கமும் முழு ஆதரவை வழங்கவுள்ளதாக யாழ். கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் வேலுப்பிள்ளை தவச்செல்வம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்....
யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள 'எழுக தமிழ்' மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. எந்த வித அரசியல் சார்பும் இன்றி, தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னுரிமைப்படுத்தி நடாத்தப்படும் இந்த பேரணியானது, நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்தும் - யாழ். பல்கலைக்கழக...
எதிர்வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு ரெலோ இயக்கம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. அத்துடன் கட்சியின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம், சிறீக்காந்தா, கென்றி மகேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளனர். தமிழினத்தின் இன்றைய நிலையைக் கருத்திற்கொண்டும், குறுகிய அரசியல் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...
இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல் இன அழிப்புக்கு முகங்கொடுத்த எம் தமிழ்ச் சொந்தங்களே! வணக்கம். 2009 மே மாதம் மௌனிக்கப்பட்டது ஆயுதங்களை தான், எங்கள் ஜனநாயக போராட்டத்தை அல்ல என்பது உலகச் சமூகத்திற்கு எடுத்துச் செல்ல நமக்கு கிடைத்திருக்கின்ற ஒரு வாய்ப்பு தான் 'எழுக தமிழ்' போராட்டம். இனப்படு கொலையாக்கப்பட்டவர்களுக்காக நியாயம் கேட்போம். சுயநிர்ணய உரிமைக்காக...
எதிர் வரும் சனிக்கிழமை 24-09-2016 அன்று நடைபெறவுள்ள 'எழுக தமிழ்' பேரணிக்கு வடக்கின் சகல கிராம மட்ட அமைப்புகள், பொதுமக்கள், நலன்புரி சங்கங்கள் அனைவரும் பூரண ஆதரவு வழங்கி எமது உரிமைகளுக்கு உயிரூட்டும் வண்ணம் பேரணியில் கலந்துகொண்டு "எழுக தமிழ்" எழுச்சி பெற அனைவரும் ஒன்றுதிரள்வோமென வடமகாணசபை அமைச்சர் டெனிஸ்வரன் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார். குறித்த...
எழுக தமிழ் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்பல்கலை மாணவர் பீடங்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. யாழ்ப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 2015-16 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய 2016-17 ஆண்டுக்கான ஒன்றியம் இன்னும் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் கலைப்பீடம் விஞ்ஞான பீடம் மருத்துவபீடம் ஆகியவற்றின் மாணவர் ஒன்றியங்கள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றினை வௌியிட்டுள்ளன. அதில் பேதங்களை மறந்து எழுகதமிழ்...
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் எழுக தமிழ் பேரணிக்கு யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்துக் கடைகளையும் பூட்டி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சிகையலங்கார சங்கம் அறிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண நகரின் கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சிகையலங்கார சங்கத்தின் பிரதிநிதி தமிழ் மக்கள் பிரதிநிதிகளின்...
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் சனிக்கிழமை (24-09-2016) நடைபெற இருக்கும் எழுக தமிழ் மாபெரும் பேரணி யில் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் வர்த்தக நிலையங்கள், சந்தைகள் மற்றும் நிறுவனங்களைப் பூட்டி பேரணிக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவை அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது. இவ்வாறு தமிழ் மக்கள் பேரவையினரால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
பொதுமக்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்ற செயற்பாடுகளை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சி முக்கியஸ்தருமான எம்.ஏ.சுமந்திரன் முக்கியமாக காணி விடுவிப்பு அரசியல் கைதிகள் விடுவிப்பு போன்றவிடையங்களில்அரசு தாமதமாக செயற்படுவது தொடர்பில் அரசின் மீது மக்களிற்கு அதிருப்தி இருப்பதாகவும் தங்களிடமும் அந்த அதிருப்திநிலை காணப்படுவதாகவும் அதனை பாராளுமன்றின் ஊடாக தாம் வெளிப்படுத்தியிரப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த...
எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் எழுக தமிழ் பேரணிக்கு ஆசிரியர் சங்கமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் தமது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ஆசிரியர் சங்கமும் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. அதில் நாங்கள் பௌத்தர்களையும் சிங்களச் சகோதரர்களையும் வெறுக்கும் இனவாதிகளல்ல. மாறாக எமது இனத்துக்கான அடையாளத்தை நாமாகவே தீர்மானிக்கக்கூடிய...
Loading posts...
All posts loaded
No more posts