- Sunday
- November 24th, 2024
தமிழ் மக்கள் பேரவையால் நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியின் இரண்டாவது பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வைத்தியக் கலாந்தி லக்ஸ்மன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் நேற்றைய தினம் கொழும்பில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடன் கைது செய்து சிறையில் அடைக்குமாறு வலியுறுத்தி ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தலைமையில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. கொழும்பு புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை 4 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுமார் 100 பேர் அளவில்...
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாக வெளியாகியிருந்த பல விடயங்களை அவர் குறிப்பிடவே இல்லையென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென நாடாளுமன்றில் தெரிவித்தார். எழுக தமிழ் நிகழ்வின் போது பௌத்த சாசனத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணான வகையில் விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்ததாக குறிப்பிட்டு, அதற்கு அரசாங்கத்திடம் பதிலை கோரி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச்...
யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி நடத்துவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் ‘சண்டே ஒப்சேவர்’ ஊடகம் மேற்கொண்ட நேர்காணல்- கேள்வி: வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ்மக்களால் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு சமஸ்டி மட்டுமே சாத்தியமான ஒரேயொரு தீர்வு என தாங்கள் நம்புவதற்கான காரணம் என்ன? பதில்:...
அண்மையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் சாசனத்தை மீறியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சிகள் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை அரசு தரப்பு நேற்று நாடாளுமன்றத்தில்நிராகரித்துள்ளது. நேற்று நாடாளுமன்றம் கூடிய போது, இது குறித்து கருத்து தெரிவித்த கூட்டு எதிர்க் கட்சியின் உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன, அண்மையில் யாழ் நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்,...
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் அதிக தூரம் பயணிக்கமுடியாது என பீல்ட் மார்ஷலும் தற்போதைய அமைச்சருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். வடக்கில் எழுக தமிழ் பேரணியை நடாத்திய அவர், இணைந்த வடக்குக் கிழக்கில் சுயாட்சியை கோரியுள்ளார். இது தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு...
இலங்கையின் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்டியிருப்பதாகத் தெரிவித்து அவருக்கு எதிராகக் கண்டனப் பேரணியொன்று நேற்று வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெற்றுள்ளது. வவுனியா மாவட்டத்தின் எல்லைப்புறமாகிய போகஸ்வௌ பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிங்கள மக்களுடன், பொதுபலசேனா, இராவணா பலய உள்ளிட்ட பௌத்த கடும்போக்கு அமைப்புக்களைச் சேர்ந்த பௌத்த மதக் குருக்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்....
வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அம்பாறை பிரதேச விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்து அவர், அரசியலமைப்பு என்ற...
கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி எமது வரலாற்றின் ஒரு பதிவாக அமைந்துள்ளது. வரலாற்றுப்புகழ் மிக்க நல்லூர் முற்றத்தில், மீண்டும் ஒரு முறை, அதுவும் 2009 இன அழிப்பின் பின் மக்கள் அலைகடல் என இந்நாட்களில் பெரு மக்கள்...
வடக்கு மாகாணத்தில் நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியின்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானதே எனவும் இதற்கு வடக்குக் கிழக்கிலுள்ள அனைத்துத் தமிழ் மக்களும் மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களும் எந்தவித வேறுபாடுகளும் காட்டாது பூரண ஆதரவை வழங்கவேண்டுமெனவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவர் செந்தில் தொண்டமான்...
வடக்கிலிருந்து பௌத்த விகாரைகளை அகற்றுமாறு கோருவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எவ்விதமான உரிமைகளும் இல்லையென, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரிப் பிரதியமைச்சர் ரஞ்சன் இராமநாயக்க, நேற்று (26) கூறினார். நாட்டின் வேறு பகுதிகளில் உள்ளது போன்று, வடக்கிலும் வழிபாட்டுச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இதனால், வடக்கிலுள்ள பௌத்த விகாரைகளை அகற்ற வேண்டிய தேவையில்லை என,...
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து, பிணையில் வௌிவரமுடியாத படி, விளக்கமறியலில் வைக்கும் வரை தான் காத்திருப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தலைமையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ´எழுக தமிழ்´ நிகழ்வுக்கு முதல்வர் உத்தியோகபூர்வமாக மக்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அவர் கூறியுள்ளார். மேலும், இந்தப் போராட்டத்திற்கு அரச சொத்துக்களை பயன்படுத்தியதாகவும்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடும்போக்குவாத்தை அனுமதிக்கின்றார் என பிரபல கல்வியியலாளர் கலாநிதி ராஜன் ஹூல் குற்றம் சுமத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யாழ் பல்கலைக்கழக துணை வேந்தரின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என அவர் தெரிவித்துள்ள அவர் மாணவர்கள் கடும்போக்குவாத போராட்டங்களை நடாத்த அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக...
எழுக தமிழ் கூட்டமைப்புக்கு எதிரானது!! கூட்டமைப்புக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!! சுமந்திரன்
சனிக்கிழமை நடைபெற்ற எழுக தமிழ் கூட்டமைப்புக்கு எதிரானது எனவும், அதற்கும் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும், அதில் தாம் கலந்துகொள்ளவில்லையெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் நாட்டின் நல்லிணக்கத்திற்குப் பாதகம் விளைவிக்கும் எனவும் குற்றம் சுமத்தினார். நாட்டில் தற்போது புதிய...
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழில் நேற்று சனிக்கிழமை (24) இடம்பெற்ற 'எழுக தமிழ்' பேரணியில் கலந்துகொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, 'தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவன்', 'தமிழரின் தலைவன்' என விழித்துக் கோசமிட்டனர். யாழ். பல்கலைக்கழகம் மற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து இரு பிரிவுகளாக ஆரம்பமான பேரணியினை வடக்கு மாகாண...
வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற எழுக தமிழ் எதிர்ப்பு பேரணியானது, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு இடையூறை விளைவிக்கும் என்று, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். ரத்டெம்பேயில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,...
“‘எழுக தமிழ்’ பேரணியில் பங்குபற்றாமை எதிர்ப்பு அல்ல. தமிழரசுக் கட்சியைத் தாக்குவதை ஏற்கவும் முடியாது” என, தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் வடமாகாண சபை அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்தார். சனிக்கிழமை (24) இடம்பெற்ற “எழுக தமிழ்” பேரணியில் கலந்துகொள்ளாமை குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
எனதருமைத் தமிழ் பேசும் சகோதர சகோதரிகளே, 'எழுக_தமிழ்' பேரணியில் பெருந்திரளாக கலந்துகொண்டு தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக எமது உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் எமது அரசியல் ரீதியான எதிர்பார்ப்புக்களை உலகறிய விளம்புவதற்கும் இங்கே கூடியிருக்கின்ற எனதருமை மக்களே! இந்தப் பேரணி வரலாறு காணாத பேரணி!...
தமிழ் மக்கள் பேரவையினால் நடத்தப்படுகின்ற இந்தப் பேரணிக்கு குறைந்தது 500 பேராவது வருவார்களா? என்ற பலரது கேள்விக்கு ஒன்று திரண்ட மக்களே இன்று பதிலாவார்கள். இது ஒரு மாபெரும் பேரணி. மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க ஒருங்கிணைத்த பேரணி என முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று...
'எழுக தமிழ் 2016!' -- தமிழ் மக்களின் பேரவையின் ஏற்பாட்டில், பொது மக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்படும் ஒரு தமிழ் தேசிய அரசியல் நிகழ்வாகும். சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ் தேசமானது - தனது அடிப்படையான அரசியல் உரிமைகளில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சிங்கள...
Loading posts...
All posts loaded
No more posts