- Friday
- November 22nd, 2024
தமிழ் மக்களின் பிரச்சினைகளான அரசியல் கைதிகளின் விடுதலை, காணி உரிமை மற்றும் காணாமல் போனோர் ஆகிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார். கட்சியின் உள்ளூராட்சி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடும் , வேட்பாளர் அறிமுகமும் நேற்றய தினம் (வெள்ளிக்கிழமை) யாழில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும்...
நாட்டின் அபிவிருத்தி செயற்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு நல்லொழுக்கமுள்ள மக்கள் பிரதிநிதிகளை உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்ய வேண்டு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிங்குராங்கொட பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எமது நாட்டின் அரசியல் கலாசாரத்தில் உள்ள தவறுகளை சரி செய்யும் ஊழல் மோசடியற்ற மக்கள் சார்பு...
தமிழ் தேசிய பேரவை வேட்பாளர்கள் சிலருக்கு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை நடத்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வளாகத்தை வழங்கியமை , தேர்தல்கள் ஆணைக்குழுவின் விதிமுறைகளை மீறும் செயற்பாடு என அந்த ஆலயத்தின் குருக்களுக்கு மல்லாகம் நீதிமன்றால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை மத வழிபாட்டுத் தலங்களில் நடத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என உள்ளூராட்சி மன்றத்...
திறமையான பெண்களுக்கு தேர்தலில் களமிறங்க வாய்ப்புக் கிடைக்கவில்லை எனவும், பலர் விகிதாசாரப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது என, பஃவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை வேட்பாளர்களான பெண்களுக்கு எதிராக 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், வேட்பாளர்களான பெண்கள் பாதிப்புக்குள்ளான 06 சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதில் அனுராதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெண்...
பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் நாகராசா பகிரதன் இன்று (வியாழக்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அயல்வீட்டு குடும்பத்தினருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் அயல்வீட்டு பெண்ணை வேட்பாளர் தாக்கியதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான பெண் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்திருந்த...
தேர்தல் விதிமீறல் தொடர்பில், யாழ்ப்பாணத்தில் இதுவரை 17 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் இரண்டு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக தனியாருக்குச் சொந்தமான இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியமை, பதாதைகளை வைத்தமை தொடர்பாகவே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன....
தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, பருத்தித்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசியல்வாதியொருவரின் பெயர் அச்சிடப்பட்ட மாத்திரை உறைகள் வைத்தியசாலையொன்றுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு, அதில் மருந்து விநியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு...
தேர்தல் பரப்புரைக்காக, வீடுகளுக்குச் சென்ற வேட்பாளரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு உள்ளது. சாவகச்சேரி பிரதேச சபையின் கைதடி தெற்கு வட்டாரத்தில் போட்டியிடும் செல்லையா ஜெயபாலன் என்பவர், கடந்த வாரம் கைதடி தெற்கில் தான் போட்டியிடும் வட்டாரத்தில் உள்ள வீடுகளுக்கு தேர்தல் பரப்புரைக்காக சென்றிருந்தபோது, வட்டார எல்லையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, கால்நடையாக ஒவ்வொரு...
யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகிறார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ்ப்பாண நகரில் இடம்பெறும் பரப்புரைக்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையினர் நேற்று 08.01.2018 ஞாயிற்றுக்கிழமை வவுனியா வடக்கில் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை- மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டனர். நெடுங்கேணி ஒலுமடு, நெடுங்கேணி சூடுவெந்தான் கிராமம், வவுனியா வடக்கு, பரந்தன், புளியங்குளம் முத்துமாரி நகர், கனகராயன்குளம் பெரியகுளம், வவுனியா வடக்கு...
வழிபாட்டுத்தலங்களில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்த விதிமுறைகள் குறித்து தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கட்சி அலவலகங்களை தவிர்ந்த எனைய இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை காட்சிபடுத்த முடியாது. தகுதியற்ற வேட்பாளர்களை இனங்காணும் நடவடிக்கைகள்...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செயற்பாடுகளால் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் அதிருப்தி கொண்டுள்ளது. இதனால் இனிவரும் தேர்தல்களில் தமிழ் அரசுக் கட்சிக்கு யாழ்ப்பாணம் வர்த்தகர்கள் ஆதரவளிக்கமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. “யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தால் முன்மொழியப்பட்ட வர்த்தகர்களின் பெயர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்பு மனுவில் உள்வாங்கப்படவில்லை. முஸ்லிம் வர்த்தகர்கள் நால்வர் தமிழ்...
நடைபெறவுள்ள தேர்தலின் மூலம் தென்பகுதி அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா, கிடாய்ச்சூரியில் நடைபெற்ற தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘வடக்குக் கிழக்கினைப் பொறுத்தவரையில் தமிழ்பேசும் மக்களாகிய நாம் ஒரு திருப்பு முனையில்...
யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் முஸ்லிம் பிரதிநிதிகளை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மேற்படி நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை யாழ். உஸ்மானிய கல்லூரி வீதியில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் யாழ். மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான, எம்.ஏ. சுமந்திரன், சீ.வீ.கே. சிவஞானம், ஜெயசேகரம்...
யாழ்.நகரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தயாரிக்கப்பட்டுள்ள “யாழ் 2020 - நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்” செயற்றிட்டம் தொடர்பான வரைபடம் இன்று (06.01.2018) சனிக்கிழமை நண்பகல் வேளையில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ் நகரிலுள்ள விருந்தினர் தங்ககம் ஒன்றில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் குறித்த “யாழ் 2020” செயற்றிட்ட வரைபடத்தை வெளியிட்ட தமிழ்த்தேசிய...
சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ஒரு மீது தாக்குதல் நடத்தப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி சிவன் கோயில் பகுதியில் இன்று காலை 10.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் கா.சற்குணதேவன் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலில் படுகாயமடைந்த சற்குணதேவன் சிகிச்சைக்காக சாவகச்சேரி...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், யாழ். மாவட்டத்தில் 17 ஆயிரத்து 273 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 22 ஆம் மற்றும் 25, 26 ஆம் திகதிகளில் தமது வாக்குகளை அளிக்கமுடியும் என யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதி...
தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் யாழ் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந் 116 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் வழக்கொன்றில் யாழ் நீதவான் நீதிமன்றினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். குறித்த வழக்கு விசாரணை நேற்று (04.01.2017) வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது சுதர்சிங் விஜயகாந்தை குற்றவாளி என...
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மதவாதத்தைக் கிளப்புகின்ற செயற்பாடு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் மதவாதத்துக்கு இடமில்லை என தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார். அங்கு மேலும் குறிப்பிட்ட அவர், யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மதவாதத்தைக் கிளப்புகின்ற...
தங்களுடைய உயிரைத் துச்சமாக நினைத்து எங்களின் இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்களை நாங்கள் தூக்கி வீசிவிட முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts