- Monday
- December 23rd, 2024
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உதயசிறியை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே உதயசிறி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். “யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வைத்து வேட்பாளர் உதயசிறி தாக்கப்பட்டார் என்று முறைப்பாடு...
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற பெண்வேட்பாளர் ஒருவர் சட்டவிரோத போலி வாக்குச் சீட்டுடன் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கரைச்சி பிரதேச சபைக்கு பரந்தன் வட்டாரத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான கிருஸ்வேணி விக்ரர்லோகநாதன் ( விக்கரர்சாந்தி) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். பரந்தன்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூலம் 120 வாக்காளர்கள் நேற்று தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இதன்போது மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களும், தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்களும், பொலிஸ் உத்தியோகத்தர்களும் தபால் மூலம் வாக்களித்தனர். குறித்த மாவட்டத்தில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 122 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவற்றுள் 26 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 96...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை 4ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு எதிராகவே நேற்று முன்தினம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வேட்பாளர் முகநூலில் தன்னை விமர்சித்ததாக குற்றஞ்சாட்டியே அவருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இதனையடுத்து...
காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரங்களில் அரசு மெத்தனமாக இருந்தாலும், தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதி நாங்கள் பொறுமை காக்கின்றோம் என புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியா திருநாவற்குளத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் எஸ்.காண்டீபனின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு...
தேர்தல் காலத்தில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கான பிணை விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டதுடன் தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவர்களையும் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள ஒருவரின் பிணை மனு மீதான விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்ற போது...
முப்பது ஆண்டுகளாக எந்தவொரு அரசியல் கட்சிகளும் அபிவிருத்தியை முன்னெடுக்காததால், சுயேட்சையாக எமது மண்ணை அபிவிருத்தி செய்வோம் என கேடயம் சின்னத்தினை கொண்ட சுயேட்சைக் குழுவின் முதன்மை வேட்பாளர் க.கேதீஸ்வரநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பாடி விருந்தினர் விடுதியில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். . மேலும் அவர் கூறுகையில், “கடந்த காலங்களில்...
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மாற்று அரசியல் தலைமை தேவை என்னும் அவசியம் தற்போது உணரப்பட்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா, பெரியார்குளத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் கௌதமனை ஆதரித்து மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், “கடந்த காலத்தில் தமிழ்த்தலைமைகளை நம்பி வாக்களித்த மக்களின்...
கூட்டமைப்பின் தலைமையை ‘உங்களால் முடியாவிட்டால் அரசியலை விட்டுப் போங்கள்’ என அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆவேசமாக உரையாற்றியுள்ளார். வவுனியா, பாவற்குளம் ஆறாம் வட்டாரத்தில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரசின் செட்டிக்குளம் பிரதேச சபைக்கான பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு உரையாற்றியுள்ளார். இது குறித்து அவர்...
ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. குறித்த நிகழ்வு, சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தலைமையில், யாழ். கந்தர்மடம் பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கூடாக தென்னிலங்கைக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்குமிடையேயான சந்திப்பொன்று நேற்று (வியாழக்கிழமை) பகல் பாலையடிவட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது ஜனநாயக போராளிகள்...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் கட்டப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் உருவப்படம் தாங்கிய விளம்பர பதாதை ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு 9 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள வேட்பாளரின் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து...
எமது பிரதேச வேட்பாளர்களின் வெற்றி இப்பொழுதே உறுதி செய்யப்பட்டு விட்டதெனவும் நீங்கள் அளிக்கும் வாக்குகள் எமது வாக்குறுதிகளை உறுதியாக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். வலி தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சுதுமலை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதேச செயற்பாட்டு அலுவலகத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்து...
மக்கள் மாற்றத்தினையே விரும்புகின்றார்கள் எனவே நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெறும், என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது...
தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (17.01.2018) புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் வெளியிட்டுவைக்கப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு உரைகளையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகரசபை முதன்மை வேட்பாளளுமான சட்டத்தரணி மணிவண்ணன் ஆகியோர் தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை...
வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய விடயங்களைப் பயன்படுத்த வேண்டாம் என, அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் குழுவொன்று, முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கிட்டுவின் 25வது நினைவு தினத்தை அனுஷ்டித்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, தெரியவந்துள்ளது. இதில்...
வடக்கு மக்களின் குரலாக ஒலிப்பதற்கு, தமிழ் மக்கள் எமக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க கோரியுள்ளார். யாழில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இந்த...
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை (17.01.2018) புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது. நாளை முற்பகல் 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசிய...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டதிட்டங்களை மீறியமை மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட நபர்களுள் 19 வேட்பாளர்களும் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 57 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 120 பேரில்...
வடக்கு தேர்தலில் இம்முறை இராணுவ தலையீடுகள் தொடர்பில் முறைபாடுகள் கிடைக்க பெறவில்லை என கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். நேற்றயதினம் யாழில் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட திருத்தங்கள் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது...
Loading posts...
All posts loaded
No more posts