- Wednesday
- January 22nd, 2025
1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மக்களின் ஆணையினைப் பெற்றபின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எந்த ஒரு இடத்திலும் சிங்கள தேசத்தை அங்கீகரித்ததும் இல்லை சிங்கக் கொடியை கையில் தூக்கிப் பிடித்து கொண்டாடிதும் இல்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசிய மக்களி முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சம்பந்தனும் சுமந்திரனுமே சிங்களவர்களுடன் இணைந்து...
உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் நாளை (பெப்ரவரி 07) நள்ளிரவுடன், முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மொகமட், “எதிர்வரும் 10ஆம் நாள் 341 உள்ளூராட்சி சபைகளுக்கு, 8, 356 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் 43 அரசியல் கட்சிகள்...
“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் இந்த நாட்டில் எங்கும் ஒழித்துவைக்கப்படவில்லை. அந்த இடங்களில் எல்லாம் தேடிப்பார்த்த பின்னரே இதனைத் தெரிவிக்கின்றேன். எனவே காணாமற்போனோரின் உறவினர்களுக்கு நிதியுதவி வழங்கவேண்டுமாயின் அதனை நான் ஏற்பாடு செய்வேன்”இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் இன்று அறிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்று...
யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டமானது இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. மேலும் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, யாழ். மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள்...
யாழ்ப்பாணம் றக்கா வீதி மருதடிப் பிரதேசத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் மீது குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் (03.02.2018) மாலை மக்கள் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது தாம் ஈபிடிபியினர் என கூறியவாறு ஈபிடிபியின் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த சில இளைஞர்கள் இப்பகுதியில் வேறு கட்சிகள் கூட்டங்கள் நடத்த...
யாழ் மாநகரசபையில் ஈபிடிபியின் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்தப் பேவதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தமிழ்த் தேசியப் பேரவை யாழ் மாநகரசபையினைக் கைப்பற்றினால் அப்போதைய முதல்வராக இருந்த யோகேஸ்வரி பற்குணராஜாவால் கோடிக்கணக்கான நிதியினைச் செலவிட்டு தனது பயன்பாட்டிற்கு என...
எங்கள் சகோதரிகளின் கற்புக்களை சூறையாட காரணமான பேரினவாத கட்சிகளுடன் இணைந்து போட்டியிட வெட்கமில்லையா என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் செ. மயூரன் கேள்வியெழுப்பியுள்ளார். நெடுங்கேணியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், இசைப்பிரியா என்ற சகோதரியின் கற்பு சூறையாடப்பட்டதுதான் தெரியும்...
முட்கம்பிகளுக்குள்ளே இருந்த எமது இனத்தின் பலம் விடுதலைப் புலிகளின் காலத்திலேயே உச்ச நிலையில் இருந்தது என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நற்பட்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில்...
வடக்கு கிழக்கில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை என்பதையும் 1000 விகாரைகள் அமைப்பது என்பதையும் அனுமதிக்க முடியாது என தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் யாழ். மாநகர வேட்பாளர் விசுவலிங்கம் மணிவண்ணண் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு பதிலளிக்கும் முகமாக நேற்றயதினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்...
நீதிமன்ற நடவடிக்கை தொடர்பில் பொய்களை கூறியுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பனர் ரட்ணஜீவன் கூல் நீதிமன்ற நீயாயாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளார் என யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் கு.குருபரன் குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்து கொண்டு கருத்து வெளியிடும்...
உள்ளூர் அதிகாரசபை தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரையில் 373 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 09 ஆம் திகதி முதல் நேற்று காலை 06.00 மணிவரை 559 தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவை நாட்டின் வெவ்வேறு பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன. அதன்படி தேர்தல்...
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க செல்லிடத் தொலைபேசி மற்றும் குறுஞ் செய்தி வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இந்த சேவைகளை பயன்படுத்தி தேர்தல் வன்முறை தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் குறுஞ் செய்தி வசதி தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது....
நிலையான ஓர் அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும், கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார். கல்முனையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த...
உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து விட்டு வாக்களிக்காதவர்களிடம், அதற்கான செலவுத் தொகையை அறவிடுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார். தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து, அதற்கு தகைமை பெற்ற 4 ஆயிரம்...
வவுனியாவில் ஈ.பி.டி.பி.யின் வட்டார தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பதாதைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி.யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் திலீபன் தெரிவித்தார். வவுனியா ஏ-9 வீதியில் அமைக்கப்பட்டிருந்த ஈ.பி.டி.பி வேட்பாளரின் தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக அமைக்கப்படிருந்த பதாதைகளே இவ்வாறு தீ வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை குறித்த வேட்பாளர் அலுவலகத்தை...
தென்னிலங்கைச் சிங்களப் பெருந்தேசியவாதக் கட்சிகள் எல்லாம் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கெல்லாம் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளில் போட்டியிடுபவர்கள் எல்லோரும் எமது அயலவர்கள், நண்பர்கள் அல்லது உறவினர்களாக உள்ளார்கள். தங்கள் வேலை வாய்ப்பு மற்றும் இதர சலுகைகளை எதிர்பார்த்தே இவர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது வெள்ளிடைமலை. தெரிந்த முகம் என்பதற்காக இவர்களுக்கு நாங்கள் வாக்களித்தால், நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலையை...
“உள்ளூராட்சி சபைகள் தேர்தலின் போது வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது, தண்டனை சட்டக் கோவையில் உள்ளவாறு ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தும் வரையில் துப்பாக்கிச் சூடு நடத்த முடியுமான சூழ் நிலைகள் ஏற்படுமாயின் அந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்” இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தின் ஊடகப்...
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனியார் துறைகளில் பணியாற்றும் வாக்காளர்களுக்கு விஷேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அல்லது தனிப்பட்ட விடுமுறையில் இழப்பின்றி இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது...
ரணில் எதை விரும்புகின்றாரோ அதையே சம்பந்தன் செய்வார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றய தினம் வியாழக்கிழமை ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு...
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. ஆனால் ஒரு பக்க நியாயத்தை கேட்டு , நீதிமன்றம் தீர்ப்பளித்தது அநீதியானது. என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான றட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார். யாழில். வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல்...
Loading posts...
All posts loaded
No more posts