- Wednesday
- January 22nd, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச வேட்பாளர் மு.கிருஸ்ணபகவான் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காடையர் கூட்டம் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் அவர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை வேளையில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிருஸ்ணபகவான் தனது இல்லத்தில் இருந்த சமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...
"உள்ளுராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பில் வாக்காளர்கள் அனைவரும் முடிந்தளவு நேரகாலத்துடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்களிப்பு இன்று(10) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், வாக்களார்கள் அனைவரும் மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும். இறுதி நேரம்வரையில் காத்திருக்காமல் நேரகாலத்துடன் வாக்களித்து தேர்தல்...
நடைபெற்றுவரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி வரை 22.05 வீத வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளுராட்சி சபைகளில் நடைபெற்று வரும் இந்த வாக்களிப்பில் மக்கள் ஆர்வமாக தமது வாக்குகளைப் பதிவுசெய்துவருகின்றனர். அந்தவகையில் வலி.மேற்குப்பிரதேச சபையில் மக்கள் தமது வாக்ககுளை...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர் ஒருவரும் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சின்ன துண்டறிக்கைகளை வீடுகளில் கையளித்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள். இவ்இருவரையும் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக மானிப்பாய் பொலிஸார்...
முல்லைத்தீவில் தேர்தல்கடமையில் ஈடுபட்ட மாவட்ட செயலக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நந்திக்கடலுக்கு அண்மையாக மூன்றாம்கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர் மற்றும் இரண்டு பொலிஸார் படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை...
யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைக்கான தேர்தலில் மக்கள் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் வாக்களித்துவருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இதன்படி யாழ்மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் காலை ஏழு மணியில் இருந்து வயோதிபர்கள், இளைஞர்கள் யுவதிகள், என பல்வேறு தரப்பினர் தமது வாக்குகளை பதிவுசெய்து வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை, வாக்குச் சாவடியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாக்களிக்க வருபவர்கள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் தேவையற்ற விதத்தில் இருப்பவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொலிஸ் ஊடக பேச்சாளரும், பொலிஸ் அத்தியகட்சருமான ருவன் குணசேகர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பொலிஸ் அதிகாரிகள், அனைத்து...
நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றதேர்தல் வாக்களிப்பு நிலையத்தினுள் வாக்காளர்கள் பின்பற்றவேண்டிய ஒழுங்குமுறைகள் பின்வருமாறு,
புகைப்படத்துடனான அடையாளம் காணக்கூடிய ஏற்றுகொள்ளப்பட்ட ஆள் அடையாள அட்டையின்றி எந்தவொரு நபருக்கும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தேசிய அடையாள அட்டை , அங்கீகரிக்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப்பத்திரம் , உறுதி செய்யப்பட்ட செல்லுபடியான கடவுச்சீட்டு ,அரச ஊழியர் அடையாள அட்டை , ஓய்வூதிய அடையாள அட்டை,...
340 உள்ளுராட்சிமன்றங்களுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தல் பெறுபேறு இரவு 7.00 அளவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விகிதாசார மற்றும் தொகுதி கலப்புமுறையில் நடைபெறும் இந்த தேர்தலில் தெரிவாகவுள்ள இந்த உறுப்பினர்கள் ஒரு உள்ளுராட்சி மன்றங்களுக்கா அளிக்கப்படும் வாக்குகளிலேயே தங்கியுள்ளது. உள்ளுராட்சி மன்றத்திற்குட்பட்ட ஒரு வட்டாரத்திற்கான வாக்குகள் வட்டார வாக்களிப்பு நிலையத்திலேயே எண்ணப்படும். பல வாக்களிப்பு நிலையங்கள்...
உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்லும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்றுவருகின்றன. யாழ். மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் நிலையமாக விளங்கும் யாழ். மத்திய கல்லூரியிலிருந்து வாக்குப் பெட்டிகள் பகிர்தளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வவுனியா மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில்...
ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பது என்ன தவறு? என்ற தமீழீழ விடுதலைப்புலிகளின் வசனத்தையும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடை நாமத்தினாலும் நல்லூர் கிட்டுப்பூங்கா கரகோசத்தால் அதிர்ந்தது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கனகரட்ணம் சுகாஸ் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு உரையாற்றியுள்ளார். இவ்வளவு காலமும் நாங்கள் கஷ்டப்படது...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்களில் கையடக்கத்தொலைபேசிப் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்லுக்கான வாக்களிப்பு இடம்பெறும் பகுதியில் கையடக்கத்தொலைபேசியை பயன்படுத்தல் , காணொளி எடுத்தல், புகைப்படம் எடுத்தல், புகைத்தல் மதுபானம், அருந்துதல் போன்ற செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் நாளை...
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிற்கான கடமையில் 6 ஆயிரத்து 500 அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் வாக்களிப்பு நிலைய ஏற்பாடுகள் தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...
தூய அரசியலுக்கான ஆரோக்கியமான சந்ததியினரின் சபதம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சுதந்திர கட்சியின் கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி மாபெரும் பரப்புரை பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார். கரவெட்டி பிரதேச சபைக்கான இறுதி மாபெரும் பரப்புரை பிரசார கூட்டம் மக்களின்...
நான் ரவி கருணாநாயக்கவிற்கு காக்கா பிடித்து எனது வாகனத்தை வரியின்றி இறக்குமாதி செய்ததாக சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நான் சுமந்திரனுக்கு சவால் விடுகின்றேன் எனது வாகன இறக்குமதி தொடர்பில் நான் ரவி கருணாநாயக்கவிடமோ அல்லது யாரேனும் அமைச்சரிடமோ தொடர்புகொண்டிருந்ததாக ஒரு மாத காலத்துக்குள் சுமந்திரனால் நிரூபிக்க முடியுமா? அவ்வாறு அவர் நிரூபித்தால் நான் இந்த அரசியலில் இருந்து...
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் துரோக கூட்டமைப்பை மக்கள் தூக்கியெறிய வேண்டும் என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ், தமிழ்தேசம் பாதுகாக்கப்பட தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சைக்கிள் சின்னத்தில் போட்டயிடுகின்ற தமிழ்த்தேசிய பேரவையின் தேர்தல் பிரச்சார கூட்டம் நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே...
தமிழ் மக்களின் தேசியம்,சுயநிர்ணயம்,இறைமைக்கு வலுச்சேர்ப்பவர்களிற்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பினில் அனைத்து பீட மாணவர் ஒன்றியங்களதும் சந்திப்பு அதன் தொடர்ச்சியாக மேற்கொண்ட பேச்சுக்களின் அடிப்படையில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் எமது எமது இனம் ,கலாச்சாரம்,பண்பாடு திட்டமிட்டு அழிக்கப்படுவதன் மூலம் எமது இருப்பு அழிக்கப்பட்டுவருவதாகவும் மாணவர்...
“தமிழ் மக்களை பலப்படுத்தும் ஒரே தலைமைத்துவம் எம்மிடமே உள்ளது. தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதால் மட்டுமே உறுதியான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்” என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் சாவகச்சேரியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்....
மக்களாகிய உங்களைக் கொன்றுகுவித்த, நீங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட கறைபடிந்த கரங்களோடு உங்கள் முன் வந்து நிற்கின்றவர்களுக்கு நீங்கள் வாக்களிக்கப்போகின்றீர்களா ? அல்லது இந்த இனத்தின் விடுதலைக்காக விலைகொடுத்ததவர்களின் வழியிலே சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் மகனான கஜேந்திரகுமார் பொன்னம்பத்தின் தலைமையை ஏற்று தூய கரங்களோடு உங்கள் முன் வந்துநிற்கின்ற எங்களுக்கு வாக்களிக்கப்போகின்றீர்களா என்பதை நீங்களே...
Loading posts...
All posts loaded
No more posts