Ad Widget

வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து காப்பாற்றுங்கள் – பல்கலை மாணவன் மன்றாட்டாம்

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கடுமையான தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (05.2.2024) திங்கட்கிழமை காலை நடைபெற்றதாக பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை பொலிஸார் கொன்றாலும் என்ற பயத்திலேயே அங்கிருந்து ஓடி வந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்தேன் என பாதிக்கப்பட்ட...

வட்டுக்கோட்டை இளைஞன் விவகாரம் : “மனித ஆட்கொலை” யாழ்.நீதவான் நீதிமன்றம்!!

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் “மனித ஆட்கொலை” என யாழ்.நீதவான் நீதிமன்றம் நேற்று கட்டளை வழங்கியுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான்...
Ad Widget

வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு விவகாரம் : யாழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

வட்டுக்கோட்டை இளைஞன் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண விசாரணை தொடர்பான கட்டளை எதிர்வரும் ஜனவரி 2ம் திகதி வழங்கப்படவுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன், பொலிஸாரின் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் திகதி உயிரிழந்தார். இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாணம்...

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் ; அடையாள அணிவகுப்பு இன்று!!

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் தொடர்பான வழக்கு நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், அடையாள அணிவகுப்பு நடத்தப்படவுள்ளதுடன், பொலிஸ் பொறுப்பதிகாரியின் சாட்சியங்களும் பதிவு செய்யப்படவுள்ளன. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான்...

வட்டுக்கோட்டை இளைஞனின் உயிரிழப்பு : அடையாள அணிவகுப்புத் திகதியில் மாற்றம்!

பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞனின் வழக்கு விசாரணையின் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 08ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்தார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று...

சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் நாகராசா அலெக்ஸிற்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழை கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் வீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு வீதித் தடைகள் அமைக்கப்பட்டிருந்தன. உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரியும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் சட்ட...

சித்திரவதை நடத்தப்பட்ட இடங்கள் நேரில் ஆராய்வு!!

வட்டுக்கோட்டை பொலிஸாரால் சித்திரவதைக்குள்ளான நிலையில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சித்திரவதைக்குள்ளான மற்றைய இளைஞனை சட்டத்தரணிகளின் துணையுடன் கூட்டிச் சென்று உயிரிழந்த இளைஞனை பொலிஸார் சித்திரவதைக்குள்ளாக்கிய இடங்களில் விஞ்ஞான ரீதியான தடயவியல் சோதனைகளை மேற்கொள்ள யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி வட்டுக்கோட்டை...

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கு : மேலும் சாட்சியங்களை பதிவுசெய்த ஐவர்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் மேலும் ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். அதன்படி உயிரிழந்த இளைஞனின் சகோதரன் , தந்தை , இளைஞனை பொலிஸார் கைது செய்யும் போது , நேரில் கண்ட இளைஞன் உள்ளிட்ட ஐவர் சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். சாட்சி பதிவுகளை அடுத்து வழக்கினை எதிர்வரும் 1ஆம்...

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் இதயத்தை வருத்துகிறது!

”கடுமையான குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகள் கூட நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் சிறையிருந்து வெளியே வருகின்ற நிலையில், சந்தேகத்தின் பேரில் கைதான சித்தங்கேணி இளைஞன் ‘நாகராஜா அலெக்ஸ்‘ மரணமான செய்தி எல்லோர் இதயங்களையும் வருத்துகின்றது” என ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள...

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கொண்டு செல்லப்படவுள்ள அலெக்ஸின் மரணம் தொடர்பான முறைப்பாடு!

அலெக்ஸின் மரணத்திற்கு காரணமாக இருந்த பொலிஸாருக்கு உடனடியாக உரிய தண்டனை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்காது போனால் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இவ்விடயத்தை உடனடியாக அறியப்படுத்தி, மேலதிக நடடிவக்கைகளை துரிதப்படுத்தி கொலையாளிகளுக்கு எதிராக உரிய நடடிவக்கைகளை எடுப்போம் என ஐரோப்பா வாழ் சித்தங்கேணி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த இளைஞனின் மரணம் குறித்தான கண்ணீர்...

நீதியான விசாரணை இடம்பெறும்!! – பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு சிலரால் விரும்பத்தகாத செயற்பாடு தொடர்பில் மூன்று உயர் அதிகாரிகள் அடங்கிய விசாரணை குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள ஜெனரத் தெரிவித்தார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகந்தர்கள் சிலரால் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கைது...

யாழில் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனுக்குப் பிணை!

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞனை கடந்த 08ஆம் திகதி திருட்டுச் சம்பவம் ஒன்றின் விசாரணைக்காக வட்டுக்கோட்டை பொலிஸார் அழைத்துள்ளனர். இந்நிலையில் தனது நண்பனுடன் குறித்த இளைஞன் பொலிஸ் நிலையம் சென்றிருந்த நிலையில் இருவரையும்...

யாழ் வட்டுக்கோட்டையில் இன்னொரு இளைஞன் மீதும் பொலிசார் கொடூரத் தாக்குதல்!!

சட்டவிரோதமாக பொலிஸாரால் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. காட்டுமிராண்டித்தனமான கொலை ஒன்று அரங்கேறியிருப்பதை என்னால் உணர முடிகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் நிலவரங்களை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உயிரிழந்த இளைஞனையும் அவரது...

பொறுப்பதிகாரி உட்பட சம்மந்தப்பட்ட சகல பொலிஸாரும் கைது செய்யப்படவேண்டும் – அங்கஜன்

மனித உரிமைகளை மதிக்காது மிருகத்தனமாக செயற்பட்ட யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்-பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார். வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் அது தொடர்பாக வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே அவர் மேற்படி...

இடமாற்றமும் – விசாரணை குழு அமைப்பும் வெறும் கண்துடைப்பு! கைது செய்யுங்கள் – மணிவண்ணன்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் என்ற 23 வயது இளைஞன் உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும், சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாநகர...

கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார் – உடற்கூற்று பரிசோதனையில் வெளியான பரபரப்பு தகவல் !

அலெக்ஸ் என்ற 26 வயதான நபர் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டு 10ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதன்போது கடுமையாக தாக்கப்பட்ட அவர் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மதியம் யாழ் போதன வைத்தியசாலையில், சட்டவைத்திய அதிகாரி உ. மயூரதனால் உடற்கூறு...

வட்டுக்கோட்டை பொலிஸாரை மீண்டும் கொலைக்குற்றச்சாட்டில் சந்தேகிக்கும் மக்கள்!!

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை சந்தியில் இருந்து 100 மீற்றர்கள் தூரத்தில் உள்ள புதர் ஒன்றினுள் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றுமுன்தினம் (18.11.2023) மீட்க்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் ஆனைக்கோட்டை - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சேகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த 14ஆம் திகதி...

யாழில் தடுப்பு கைதி உயிரிழப்பு விவகாரம் : விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் அதிகாரிகள் குழு நியமனம்

திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமது மகன் சந்தேகத்தின் பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 4 நாள்களுக்கு மேல் தடுத்துவைத்து விசாரணை செய்த பின்னரே...