T20 போட்டியில் வென்ற இலங்கையணிக்கு 2.5 மில்லியன் அன்பளிப்பு!

ஐ.சி.சி உலக T20 போட்டியில் சம்பியன் கிண்ணத்தினை வென்று சாதனை படைத்த இலங்கையணிக்கு சுமார் 2.5 மில்லியன் அன்பளிப்புத் தொகையினை திரு, திருமதி ஆனந்தா பெனான்டோ மற்றும் அவர்களது குடும்பத்தவர் வழங்கி கௌரவித்துள்ளனர்.

cfdd5a405c4219cee687ce0dc889719c_XL

நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வில் அன்பளிப்பு வழங்கும் வைபவமானது எரோல் வீரசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்ட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் மோகன் டி சில்வா இலங்கையணிக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்ததுடன் ஆனந்தா பெனான்டோ குடும்பத்தினருக்கும் தமது சபையின் சார்பாக நன்றிகளை தெரிவித்தார்.

T20_donation1

இதற்கு பதிலளித்த ஆனந்தா பெனான்டோ எமது நாட்டிற்கு பெருமையினை தேடித்தந்த அணியின் வீரர்கள் அனைவருக்கும் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.

T20_donation2

Related Posts