புதிய தொழில்முனைவோர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் !

SWJAFFNA_hTechstar அமைப்பின் வணிக புத்தாக்குனர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஜூன் 24ம் திகதி மாலை 5.30 தெடாக்கம் 26ம்திகதி இரவு 9 மணிவரை யாழ் ரில்கோ விடுதியில்  நடாத்தப்படஉள்ளது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இலங்கைக்கான சர்வதேச தொழில்நுட்ப நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடும்பெறுவது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்பட்டுள்ள தமிழ் மொழியிலான கேள்வி பதில் விளக்கம் வருமாறு.

1)Startup என்றால்?
புதிதான ஒரு வணிக ரீதியான எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்தல்
 
2)Startup Weekend என்பது?
Techstars அமைப்பினால் 3 நாள் நிகழ்வாக உலகளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படுகின்ற Startup களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு
 
3)யார் இந்த Techstar ?
Startup களில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கான நிதிவளங்களை பெறுபவதற்கு உதவுதல் , அவர்களுக்கு தேவையான வசதிகள் வல்லுனர் உதவிகளை ஒருங்கிணைத்துக்கொடுத்தல் . Startup களினை மேலும் அபிவிருத்தி செய்தல் முன்னேற்ற வேகத்தினை அதிகரித்தல் ஆகிய செயற்பாடுகளை செய்பவர்கள். அவர்கள் Google For Entrepreneurs அமைப்பின் பங்காளிகள்.
 
4)Startup Weekend நிகழ்வில் என்ன நடைபெறும் ?
1ம் நாள் (5.30pm -10pm)
கலந்துகொள்பவர்களிடம் இருந்து வாய்மொழி எண்ண முன்மொழிவுகள் பெறப்படும். பங்குபற்றுபவர்கள் தங்கள் சொந்த மொழியில் கருத்திடடங்களை முன்மொழியலாம்.
அவற்றில் கலந்து கொண்டுள்ளவர்களின் வாக்குகளுக்கு அமைய 10 Startup முன்மொழிவுகள் தெரிவு செய்யப்படும்.கலந்து கொள்பவர்கள் 10 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்படுவர். பங்குபற்றுபவர்கள் தங்களுக்கு விரும்பிய குழுங்களில் இணைந்துகொள்ளும் வாய்பினை பெறுவர். ஒவ்வொரு குழுவுக்கும் குறைந்தது ஒவ்வொரு நிபுணத்துவம் வாய்ந்த வளவாளர்கள் நியமிக்கப்படுவர். அவர்கள் குழுக்களுக்கான உரிய உதவிகளை வழங்குவார்கள்
 
2ம்நாள் (9am -10pm)
ஒவ்வொரு குழுக்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட Startup முன்மொழிவுகளை எவ்வாறு செயற்படுத்துவது அபிவிருத்தி செய்வது செய்து முடிப்பது என்பது தொடர்பில் திட்டங்களை தயாரிப்பர்.மிகக்குறைந்த அளவிலான நிலை வரை Startup மூலம் கொண்டுவரப்படவுள்ள வெளியீடு குறித்து மாதிரியை தயாரிப்பர். அதன்போது குழுவில் உள்ள ஒவ்வொரு தரப்பட்டவர்களும் தங்கள் தங்கள் உதவியினை வழங்குவர்  3ம் நாள் மாலை வரை அது தொடரும்
 
3ம் நாள் மாலை (9am -9pm)
10 குழுவினரும் தங்கள் Startup திட்டங்கள் தொடர்பில் 3 பேர் கொண்ட நடுவர்கள் மத்தியில் Presentation வழங்குவார்கள். இவர்களில் 3 குழு தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்படும்.மேலதிக உதவிகள் Techstar இனால் வழங்கப்படும். விருது பெறும் Startup கள் Startup Acceleration திட்டத்திற்கு தகுதிபெறும். ஏனைவவை மேம்படுத்தப்படுவதற்கான வாய்புக்கள் கிடைக்கும்
 
5)இலங்கையில் Startup Weekend
முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்டுகின்றது. எதிர்வரும் ஜூன் 24,25.26 திகதிகளில் யாழ் ரில்கோ விடுதியில் நடைபெறுகின்றது . ஜூன் 24 மாலை நிகழ்வு ஆரம்பமாகும்
 
6)யார் கலந்துகொள்கின்றார்கள்?
இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வரும் முன்னணி தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோர் ஏனைய துறை தொழில் முனைவோர் முதலீட்டாளர் தொழில்நுட்பவியலாளர் மாணவர் என சகலதுறைகளில் இருந்தும் 100 பேர்வரையில் கலந்துகொள்வர். வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் 3 தொழில் முனைவோர் வல்லுனர்களின் பேச்சுக்களும் இடம்பெறும் .Techstar சார்பாக அதன் ஆசிய பிராந்திய பிரதிநிதி ”அனுராக்” கலந்துகொள்வார்.
 
7)நீ்ங்களும் கலந்து கொள்ளலாமா?
ஆம் தகவல் புதிய வணிக சிந்தனைகள் உங்கள் மனத்தில் ஓடுகின்றதா? அதற்கு செயல் வடிவம் கொடுக்கவேண்டும் என்று கருதுகின்றீர்களா? எதிர்காலத்தில் சிறந்த தகவல் தொழில்நுட்பத்துறை தொழில் முனைவோராக விரும்புகின்றீர்களா? ஏற்கனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலென்ன ஈடுபட்டிராவிட்டாலென்ன தயக்கம் தேவையில்லை கலந்து கொள்ளலாம்.உங்களிடம் கருத்திட்டம் இல்லா விடினும் ஏனையவர்களின் கருத்திட்டத்தில் ஒரு குழுவில் இணைந்து பங்காற்றும் உங்கள் அனுபவ அறிவை பகிரந்துகொள்ள தயாரானவராயின் தயக்கம் வேணடாம். வெற்றிகரமான Startup ஒன்றின் குழுப்பங்காளராக இருப்பது உங்களுக்கு நன்மையே. 
 
8)கலந்து கொள்ள கட்டணம் உண்டா?
நிச்சயமாக கட்டணம் உண்டு. 3 நாட்கள் விடுதியில் நிகழ்வை சிறப்பான முறையில் நடாத்துவதற்கும் அங்கு அனைவருக்கும் தேனீர் , சிற்றுண்டிகள், மதிய , இரவு உணவு வழங்குவதற்கும் செலவு உண்டல்லவா எனவே அவற்றினை கருத்தில் கட்டணம் உண்டு. தங்குமிட வசதி உங்களை பொறுத்தது. விடுதியில் தங்குவதாயின் சலுகை விலை உண்டு
 
9) கட்டணம் எவ்வளவு?
தற்போதைய கட்டணவிபரம் 50$ ஆகும் (இலங்கை ரூபா ~7500/- ). இக்கட்டணங்கள் எதிர்வரும் நாட்களில் மாறுபடலாம்(அதிகரிக்கும்). மாணவர்களுக்கு 50% கழிவுடன் விசேட சலுகை விலை உண்டு .இறுதி நாள் நிகழ்வுக்கு மட்டும் கலந்து கொள்ள கட்டணம் 20$. அமைப்பு ரீதியான குழுக்கொள்வனவுக்கு சலுகை உண்டு.ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளவும்
10)பங்குபற்றுபவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
  1. Startup ஒன்றினை  ஆரம்பிக்க சந்தர்ப்பம்.
    பல்வேறுதரப்பட்ட துறைசார்தவர்களுடன் குழுவாக பணியாற்றும் அனுபவம்
    தொழில்முனைவோருடையான தொடர்புகள்
  2. புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு
  3. உலகளாவிய தொழில்முனைவோர் சமூகத்துடனான தொடர்புகளை ஏற்படுத்தல்
  4. முன்னணி Startup களுக்கு முதலீட்டாளர்களின் முதலீட்டு வசதிகள்
  5. அனுசரணை நிறுவனங்களின் சலுகைகள்
    – LK Domain Registry ஒருவருடத்திற்கான இணையத்தளபதிவு  Hosting ஆகியவற்றை இலவசமாக வழங்கும்
    – நிகழ்வின்போது SLT நிறுவனம் பங்குபெறுபவர்களுக்கு Free Wifi வசதியை வழங்கும்
    – பங்குபற்றும் அனைவருக்கும் Google Cloud Platform இன் $300 பெறுமதியான சேவைகளை  பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம்
    – பங்குபற்றுபவர்களுக்கு இலவச .Co டொமைன் பெறும் சந்தர்ப்பம்
    இன்னும்பல
 
11) நிகழ்வன்று பதிவு செய்து வரலாமா?
இல்லை. 100 பேருக்குத்தான் இட ஒதுக்கீடு செய்யப்படமுடியும் எனவே முன்கூட்டியே உங்கள் நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்
 
12)எங்கே நுழைவுச்சீட்டினை பெறுவது?
2) ஏற்பாட்டாளர்களிடம் நேரடியாகவும் பெறலாம்
 
13)மேலும் தகவல்களை எங்கு பெறலாம்
 
14)அனுசரணையாளர்கள் உதவிகள்
ICTA. SLASSCOM, FITTIS, README ,ISOC LK ,LK Domain Registry, SRILANKA TELECOM ,NCIT இன்னும் பல

Related Posts