Techstar அமைப்பின் வணிக புத்தாக்குநர்களுக்கான Startup Weekend நிகழ்வு, இலங்கையில் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில், இவ்வாண்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை யாழ்.ரில்கோ விடுதியில் நடாத்தப்பட்டது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இரண்டாவது நிகழ்வு, இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. அடுத்த 3வது நிகழ்வான Startup Weekend Vanni நிகழ்வு கிளிநொச்சியில், இன்று தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி பொறியில் பீட வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்பட்டுள்ள கேள்வி பதில் விளக்கம் வருமாறு.
Startup என்றால்?
புதிதான ஒரு வணிக ரீதியான எண்ணத்துக்குச் செயல் வடிவம் கொடுத்தல்
Startup Weekend என்பது?
Techstars அமைப்பினால் மூன்று நாள் நிகழ்வாக உலகளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படுகின்ற Startup களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு
யார் இந்த Techstar ?
Startup களில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கான நிதிவளங்களை பெறுவதற்கு உதவுதல், அவர்களுக்குத் தேவையான வசதிகள், வல்லுநர் உதவிகளை ஒருங்கிணைத்துக்கொடுத்தல், Startupகளினை மேலும் அபிவிருத்தி செய்தல், முன்னேற்ற வேகத்தினை அதிகரித்தல் ஆகிய செயற்பாடுகளைச் செய்பவர்கள். அவர்கள் Google For Entrepreneurs அமைப்பின் பங்காளிகள்.
Startup Weekend நிகழ்வில் என்ன நடைபெறும் ?
முதலாம் நாள் (மாலை 5.30மணி தொடக்கம் – இரவு 10மணி வரை)
கலந்துகொள்பவர்களிடம் இருந்து வாய்மொழி எண்ண முன்மொழிவுகள் பெறப்படும். பங்குபற்றுபவர்கள் தங்கள் சொந்த மொழியில் கருத்திட்டங்களை முன்மொழியலாம்.
அவற்றில் கலந்து கொண்டுள்ளவர்களின் வாக்குகளுக்கு அமைய சிறந்த 10 தொடக்கம் 15 வரையான Startup முன்மொழிவுகள் தெரிவு செய்யப்படும்.கலந்து கொள்பவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்படுவர். பங்குபற்றுபவர்கள் தங்களுக்கு விரும்பிய குழுக்களில் இணைந்துகொள்ளும் வாய்பினைப் பெறுவர். ஒவ்வொரு குழுவுக்கும் குறைந்தது ஒவ்வொரு நிபுணத்துவம் வாய்ந்த வளவாளர்கள் நியமிக்கப்படுவர். அவர்கள் குழுக்களுக்கான உரிய உதவிகளை வழங்குவார்கள்
இரண்டாம் நாள் (காலை 9 மணி தொடக்கம் – இரவு 10 மணி வரை)
ஒவ்வொரு குழுக்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட Startup முன்மொழிவுகளை எவ்வாறு செயற்படுத்துவது, அபிவிருத்தி செய்வது, செய்து முடிப்பது என்பது தொடர்பில் திட்டங்களைத் தயாரிப்பர்.மிகக்குறைந்த அளவிலான நிலை வரை Startup மூலம் கொண்டுவரப்படவுள்ள வெளியீடு குறித்த மாதிரியைத் தயாரிப்பர். அதன்போது குழுவில் உள்ள ஒவ்வொரு தரப்பட்டவர்களும் தங்கள் தங்கள் உதவியினை வழங்குவர் 3ம் நாள் மாலை வரை அது தொடரும்
மூன்றாம் நாள் மாலை (காலை 9 மணி தொடக்கம் – இரவு 9 மணி வரை)
அனைத்து குழுவினரும் தங்கள் Startup திட்டங்கள் தொடர்பில் 3 பேர் கொண்ட நடுவர்கள் மத்தியில் Presentation வழங்குவார்கள். இவர்களில் 3 குழுக்கள் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்படும்.மேலதிக உதவிகள் Techstarஇனால் வழங்கப்படும். விருது பெறும் Startupகள் Startup Acceleration திட்டத்துக்கு தகுதிபெறும். ஏனையவை மேம்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்
யார் கலந்துகொள்கின்றார்கள்?
இலங்கையின் சகல பாகங்களில் இருந்து வரும் முன்னணி தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோர், ஏனைய துறை தொழில் முனைவோர் முதலீட்டாளர், தொழில்நுட்பவியலாளர் மாணவர் என சகலதுறைகளில் இருந்தும் 100 பேர் வரையில் கலந்துகொள்வர்.முக்கியமாக பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் கலந்துகொள்வர். வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் மூன்று தொழில் முனைவோர் வல்லுநர்களின் பேச்சுக்களும் இடம்பெறும் .
நீ்ங்களும் கலந்து கொள்ளலாமா?
ஆம். புதிய வணிக சிந்தனைகள் உங்கள் மனத்தில் ஓடுகின்றதா? அதற்கு செயல் வடிவம் கொடுக்கவேண்டும் என்று கருதுகின்றீர்களா? எதிர்காலத்தில் சிறந்த தகவல் தொழில்நுட்பத்துறை தொழில் முனைவோராக விரும்புகின்றீர்களா? ஏற்கெனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலென்ன ஈடுபட்டிராவிட்டாலென்ன தயக்கம் தேவையில்லை கலந்து கொள்ளலாம்.உங்களிடம் கருத்திட்டம் இல்லாவிடினும் ஏனையவர்களின் கருத்திட்டத்தில், ஒரு குழுவில் இணைந்து பங்காற்றும் உங்கள் அனுபவ அறிவை பகிரந்துகொள்ள தயாரானவராயின் தயக்கம் வேணடாம். வெற்றிகரமான Startup ஒன்றின் குழுப்பங்காளராக இருப்பது உங்களுக்கு நன்மையே.
கலந்து கொள்ள கட்டணம் உண்டா?
நிச்சயமாக கட்டணம் உண்டு. மூன்று நாட்கள் விடுதியில் நிகழ்வை சிறப்பான முறையில் நடாத்துவதற்கும் அங்கு அனைவருக்கும் தேனீர், சிற்றுண்டிகள், மதிய, இரவு உணவு வழங்குவதற்கும் செலவு உண்டல்லவா எனவே அவற்றினை கருத்தில் கொண்டு கட்டணம் உண்டு. தங்குமிட வசதி வழங்கப்படும்.
பங்குபற்றுபவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
Startup ஒன்றினை ஆரம்பிக்க சந்தர்ப்பம்.
பல்வேறுதரப்பட்ட துறைசார்தவர்களுடன் குழுவாக பணியாற்றும் அனுபவம்
தொழில்முனைவோருடையான தொடர்புகள்
புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு
உலகளாவிய தொழில்முனைவோர் சமூகத்துடனான தொடர்புகளை ஏற்படுத்தல்
முன்னணி Startup களுக்கு முதலீட்டாளர்களின் முதலீட்டு வசதிகள்
அனுசரணை நிறுவனங்களின் சலுகைகள்
அனுசரணையாளர்கள்
தேசிய பங்காளர் – ICTA
தங்க அனுசரணையாளர் – 99XTechnologies
வங்கிப் பங்காளர் – Seylan Bank
இணை அனுசரணையாளர் – Rotary Club of Colombo west
சமூகப் பங்காளர்கள் – NCIT, SLASSCOM ,FITIS
அச்சு ஊடகப் பங்காளர் – தமிழ்மிரர்
டிஜிட்டல் ஊடகப் பங்காளர் – Readme.lk
தகவல் பரிமாற்றப் பங்காளர் – Shoutout