SAITM துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான உண்மை வெளியானது!

மாலபே SAITM தனியார் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

பொலிஸார் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றின் மூலம் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

SAITM தனியார் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக போலியாக காட்டுவதற்கே மேற்படி துப்பாக்கி சூட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் அம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவத்தை திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரையும் உள்ளூராட்சி மன்ற நிறுவன சாரதி ஒருவரையும் கைது செய்ய விசரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts