வடக்கில் செப்டெம்பர் மாதம் தேர்தல் நடத்துவதை உறுதிசெய்ய முடியாது

Electionதேர்தல் நடத்துவதாக இருந்தால் தேர்தல்கள் திணைக்களம் தயாராகுவதற்கு போதுமான கால அவகாசம் தேவை என தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஒன்றுக்கு தயாராகுவதற்கு 10 முதல் 12 கிழமைகள் வரை தேவைப்படும் என தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் விண்ணப்பப்படிவம், பெயர் பட்டியல் தயாரித்தல், தேர்தல் பிரசார நடவடிக்கை எதிர்புக்களை பதிவுசெய்தல் போன்ற நடவடிக்கைகளுக்குத் தேவையான காலம் அவகாசம் அறிவிக்கப்படவேண்டும் என அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாண சபைகளில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தேர்தல் நடத்துவதற்கு இலங்கை சுதந்திரகட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதென அக்கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மைத்ரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறு இருப்பினும் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விசேட சட்டமூலம் மற்றும் புதிய சட்ட திட்டங்களுக்கமைவாக தேர்தல் நடத்துவதாக இருந்தால் வடக்கில் செப்டெம்பர் மாதம் தேர்தலை நடத்துவதை உறுதிசெய்ய முடியாதென தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts