NCIT வணிக வளர்ச்சி மையத்தை (Business Incubation Center) பயன்படுத்தி அதன் பயனை பெறுமாறு கோரப்பட்டுள்ளது

வடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் NCIT வணிக வளர்ச்சி மையத்தை (Business Incubation Center) அனைவரும் பயன்படுத்தி அதன் பயனை பெறுமாறு கோரப்பட்டுள்ளது. அது தொடர்பில் சம்மேளனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

நீங்கள் புதிய தொழில்முயற்சி ஒன்றை ஆரம்பிக்க விரும்புகின்றீர்கள் அல்லது அதன் ஆரம்பக்கட்டத்தில் இருக்கின்றீர்கள் இந்நிலையில் உங்களுக்கு ஒரு அலுவலகம் தேவை அதற்காக முதலீடு செய்வதாயின் நிறைய பணம் தேவை ஆனால் எமது வணிக வளர்ச்சி மையத்தை குறைந்த செலவில் உங்கள் அலுவலகமாக பயன்படுத்த முடியும் ஒரு இருக்கைக்கு சிறுதொகை மட்டுமே மாதத்திற்கு செலுத்த வேண்டியிருக்கும் . ஆனால் உங்களுக்கு குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி பாதுகாப்பு, மின்சாரம் என அனைத்தையும் வணிக வளர்ச்சி மையம் கவனித்துக்கொள்ளும். நீங்கள் நல்லதொரு நிலையினை எட்டிய பின்னர் புதிய அலுவலகத்தினை திறந்து வெளியே போகலாம்

வணிக ரீதியிலான மற்றும் பொது நலன் நோக்கிலான பயிற்சிப்பட்டறைகள் சந்திப்புக்கள் கருத்தரங்குகள். மற்றும் பிரத்தியேக கூட்டங்கள் நடாத்த வேண்டுமாயின் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ”NCIT வணிக வளர்ச்சி மையத்தை” அதற்குரிய கட்டணங்களுடன் பயன்படுத்த முடியும். 40 இருக்கைகள் கொண்ட கருத்தரங்கு மண்டபமும் 11 இருக்கைகள் கொண்ட மாநாட்டு அறையும் உள்ளது

அத்துடன் மாணவர்கள் சுய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் தனியாகவோ குழுவாகவோ இணைந்து வேலை செய்வதற்கான இணைந்து பணியாற்றுவதற்கான இ்டவசதியும் (Co working Space) இந்த நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20 இருக்கைகள் தற்போது  Co working Space இல் உள்ளது.பயிற்சியாளர்களை வைத்து பணிசெய்ய விரும்பும் நிறுவனங்களும் தொடர்பு கொள்ளவும்.

இந்த நிலையம் கடந்த வருடம 2018 யூன் மாதம் தொடக்கம் பொதுப்பாவனைக்கு திறக்கப்பட்டுள்ளது.  நிலையத்தை நடாத்தும் செலவை ஈடு செய்வதற்காக மையத்தின் வசதிகளை பயன்படுத்துவதற்காக சிறு கட்டணம் அறவிடப்படும் .மற்ற இடங்களுடன் ஒப்பிடும்போது மிக மிக குறைந்த கட்டணமாகும். உறுப்பினர்களுக்கு விசேட விலைக்கழிவுகள் உண்டு. கட்டண சலுகை அல்லது கட்டண விலக்கு தேவைப்படுவர்கள் அதற்குரிய வேண்டுகோளை எழுத்து மூலம் சமர்ப்பித்தால் பரிசீலணை செய்யப்படும்.

இந்த நிலையமானது கனடாவின் IENESL அமைப்பின் நிதி அனுசரணையில் வடக்கு தகவல் தொழில் நுட்ப சம்மேமேளத்தினால் (NCIT) நிறுவப்பட்டு இணைந்த செயற்திட்டமாக செயற்படுத்தப்படுகின்றது.

மேலதிக விபரங்களை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். வடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனமானது வடக்குமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப  நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பொது நிறுவனமாக கடந்த 3 வருடங்களாக இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி : 021 222 9600 / 0777 563213 / 0777 563144 / 0773049886 Email: chairman@ncit.lk
முகவரி : 121/1 மின்சாரநிலைய வீதி யாழ்ப்பாணம் (பஸ் நிலையத்தின் பின்புறம்)

http://www.ncit.lk/business-incubation-center/ 

 

Related Posts