விபத்துக்குள்ளான மலேசிய விமானம் எம்.எச்.370 மாயமானதாக மலேசிய ஏர்லைன்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பேருடன் பயணித்த எம்.எச்.370 பயணிகள் விமானம் காணாமல் போய் 8 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலேயே மலேசிய ஏர்லைன்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
விமானம் காணாமல் போனது முதல் விமானத்தின் பாகங்களை இந்திய பெருங்கடலில் தேடும் பணி தீவிரமாக இடம்பெற்றது. இப்பணியில் அவுஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஈடுபட்டன. இருந்தும் விமானத்தின் பாகங்களோ அல்லது விபத்தில் இறந்தவர்களின் உடலோ கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது விபத்துக்குள்ளான விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரபூர்வமான அறிவிப்பை மலேசிய ஏர்லைன்ஸ் மூத்த அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர்.
இதை அறிந்ததும் அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பயணிகளின் குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.