LTTE முன்னாள் உறுப்பினர் இந்தியாவில் கைது

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து போலிக்கடவுச்சீட்டை பயன்படுத்தி சுவிட்ஸர்லாந்துக்கு தப்பிச்செல்ல முயற்சித்த தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை, இந்திய பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், குறித்த நபர் தப்பிச்செல்வதற்கு போலி கடவுச்சீட்டை தயாரித்துக் கொடுத்தார்கள் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் இருவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் சென்னை மற்றும் இராமநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று இனங்காணப்பட்டுள்ளார்கள்.

Related Posts