LTTE முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களால் பன்படுத்தப்பட்ட தற்கொலை குண்டு உட்பட வெடிபொருட்களை வைத்திருந்தமை தொடர்பில் இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் குறித்த 4 பேருக்கும் எதிராக, சட்ட மா அதிபரால் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த நால்வரும் யாழ் மற்றும் கிளிநொச்சி பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மற்றும் அதனை அண்மித்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றுவளைப்புக்களின் போது கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts