KFC உணவுகளுடன் இப்போது செல்போன் சார்ஜர் இலவசம்!

வறுக்கப்பட்ட சிக்கன் உணவுகளுக்கு உலகளவில் புகழ் பெற்ற நிறுவனமான கே.எப்.சி வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் பல்வேறு புதிய உத்திகளை கையாண்டு வருகிறது.

kfc2

சிக்கன் உணவுகளுக்கு உலகளவில் புகழ் பெற்ற நிறுவனமான கே.எப்.சி நிறுவனம் “5 in 1” திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. “Watt a Box” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள கே.எப்.சியின் உணவு பெட்டியிலேயே மொபைல் ரீசார்ஜ் செய்யும் வசதியை உருவாக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, மும்பை மற்றும் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி, தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சார்ஜ் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள உணவு பெட்டிகள் வழங்கப்படுகின்றன.

முக்கியமான சமயங்களில் ஸ்மார்ட் போன்கள் சார்ஜ் தீர்ந்து போய்விடும் நிலையில் சாப்பிடும் போதே செல்போன்களை சார்ஜ் செய்யும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

Related Posts