உயர்தரப் பரீட்சை முடிவு! யாழ். இந்துக் கல்லூரியில் 29 பேருக்கு 3ஏ!

இன்று வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 29 மாணவர்கள் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். அதன் மூலம் இம்முறை யாழ்மாவட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முன்னணி வகிக்கின்றது.

இப்பாடசாலையின் உயிரியல் பிரிவு மாணவனான ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ பெறுபேற்றைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இதுவரை பாடசாலைக்குக் கிடைக்கப்பெற்ற பரீட்சை முடிவுகளின் பிரகாரம் கணிதப் பிரிவில் 18 மாணவர்களும் உயிரியல் பிரிவில் 6 மாணவர்களும் வர்த்தகபிரிவில் 3 மாணவர்களும் கலைப் பிரிவில் 1 மாணவரும் தொழில்நுட்ப பிரிவில் 1 மாணவருமாக 29 பேர் வரை 3ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

இதேவேளை,கணிதப்பிரிவில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் கலாமணி மதனாகரன் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 22ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

 வர்த்தக பரிவில் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் மாணிக்கவாசகர் லஜீபன் 3ஏ பெற்று மாவட்டமட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 62 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். கலைப்பிரிவில் அச்சுவேலி இடைக்காடு மகாவித்தியாலய மாணவி குணபாலசிங்கம் நிதர்சனா 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 46ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

தொழில்நுட்ப  பிரிவில் சென்ஜோன்ஸ் கல்லூரி ரவிகரன் கருணைநாயகம்  3ஏ பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 2 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

Related Posts