இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரியான முகுந்தன் கனகே, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டதற்கிணங்கவே தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் கூறியுள்ளார்.
தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை, இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ சபையிடம் கையளித்துள்ளார்.
இலங்கையின் டிஜிட்டல் கட்டமைப்பு துறையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதுவித ஊழல், மோசடியில் அல்லது அதற்கு துணை நிற்கும் விடயங்களில் தான் ஈடுபடவில்லை என்று அவர் தனது இராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளார்.