தரவு பாவனை ஒதுக்கீட்டினை ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் நிர்வகிக்கும் சிரமங்களைப் போக்கும் தனித்துவமான வசதி… இலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற 3G வலையமைப்புக்களுள் ஒன்றான Hutch, “Hutch SmartShare” வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. Hutch வாடிக்கையாளர்கள் தாங்கள் உபயோகிக்கும் பல்வேறு வகையான சாதனங்களுக்கு ஒரு பொதுவான தரவு நிலுவையை பேணுவதற்கு இடமளிக்கும் ஒரு புத்தாக்கமான அறிமுகமாக இது அமைந்துள்ளது.
நீங்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் தனித்தனியாக தரவு நிலுவையை நிர்வகிக்கும் போது முகங்கொடுக்கின்ற சிரமங்களைப் போக்கி, ஒரு பொதுவான கையடக்க தரவு கணக்கின் மூலமாக அனைத்து சாதனங்களிலும் தரவுப் பாவனையை மேற்கொள்ள இந்த வசதி இடமளிக்கின்றது.
கடந்த இரு ஆண்டுகளில் சாதனங்கள் மற்றும் தரவு ஆகிய இரண்டினதும் விலைகள் குறைவடைந்துள்ளமை காரணமாக இலங்கையில் 3G புரோட்பான்ட் சாதனங்களின் பாவனை அதிகரித்துள்ளது. டொங்கல்கள், Tab சாதனங்கள், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் தொலைக்காட்சிகள், விளையாட்டு முனையங்கள் (Gaming consoles) போன்றவை அடங்கலாக தற்போது ஒவ்வொருவரும் ஒன்றுக்கு மேற்பட்ட 3G சாதனங்களைக் கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு கையடக்க சாதனத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட சிம் அட்டைகளை உபயோகிக்கின்ற வாடிக்கையாளர்கள், ஒவ்வொரு தடவையும் தமது சாதனத்திற்கு தரவினை மீள்நிரப்பல் செய்யும் போது குறித்த கையடக்க தொலைபேசி இலக்கங்களை நினைவில் வைத்திருப்பது மிகவும் சவாலான ஒரு விடயமாகும். ஒவ்வொரு சாதனத்திலும் தரவு ஒதுக்கீடு காலாவதியாகும் திகதி மற்றும் தரவு அளவு ஆகியவற்றை கண்காணிப்பது அதை விடவும் சவாலானது. இந்த சாதனங்கள் அனைத்திலும் தரவு ஒதுக்கீட்டு அளவை நிர்வகிக்கும் சிரமங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒரு தீர்வாக Hutch SmartShare அமைந்துள்ளது. Hutch SmartShare சேவை முற்றிலும் இலவசமானது. வாடகைகளோ அல்லது செயற்படுத்துவதற்கான கட்டணங்களோ கிடையாது.
Hutch நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா அவர்களின் கருத்திற்கு அமைவாக இந்த சேவைக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளதாகவும், ஏற்கனவே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட Hutch வாடிக்கையாளர்கள் இச்சேவையை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குறிப்பாக டொங்கல் இணைப்புக்களை உபயோகிப்பவர்கள் தமது கையடக்க தொலைபேசி இலக்கத்தை இலகுவில் நினைவு வைத்திருப்பதில் சிரமங்கள் உள்ளமையால் இச்சேவை அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளதெனவும், மேலும் மீள்நிரப்பலுக்கு தரவுத் திட்டங்களை தெரிவுசெய்தல் மற்றும் நிலுவைஃகாலாவதியை சரிபார்த்தல் போன்றவற்றிற்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
முற்கட்டணம் மற்றும் பிற்கட்டணம் ஆகிய இரு திட்டங்களுக்கும் இந்த பெறுமதி சேர் சேவையை முதன்முதலில் அறிமுகப்படுத்திய மொபைல் தொழிற்பாட்டாளர் என்ற பெருமை Hutch இற்கே உரித்தானது. மாற்றமடைந்து வருகின்ற நுகர்வோரின் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப நிறுவனமும் தனது புத்தாக்கங்களை மேம்படுத்தி வருவதை இது தெளிவாக காண்பிக்கின்றது.
SmartShare சேவையின் கீழ் ´பிரதான´ தரவு கணக்கின் மூலமாக ஒதுக்கப்பட்ட அனைத்து பிற சாதனங்களையும் இணைத்துக்கொள்ள முடியும். பிரதான கணக்கிலுள்ள தரவு அளவு ஏனைய பிற சாதனங்கள் அனைத்திலும் இடையறாது உபயோகிக்கக் கூடிய வசதி உள்ளது. இது தமது சாதனங்கள் அனைத்திலும் உபயோகிக்கக்கூடிய வகையில் பணத்திற்கு உரிய பெறுமதியை வழங்கும் பாரிய திட்டங்களை வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்து, சேமிப்பை அனுபவிப்பதற்கும் இடமளிக்கின்றது. வாடிக்கையாளர்கள் தமக்கு தேவைப்படும் நேரங்களில் எந்தவொரு சாதனத்தையும் இலகுவாக ´பிரதான´ கணக்குடன் சேர்த்துக்கொள்ளவோ அல்லது நீக்கிக் கொள்ளவோ இடமளிக்கும் வகையில் ஒரு இலகுவான, USSD அடிப்படையிலான பட்டியலை Hutch உருவாக்கியுள்ளது.
Hutch நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா அவர்கள் விளக்குகையில் ´3 வருடங்களுக்கு முன்னர் நவீன 3G சேவைகளை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து மிக விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற 3G தரவு வாடிக்கையாளர் தளத்துடன், முன்னிலை வகிக்கும் ஒரு 3G சேவை வழங்குனராக Hutch தன்னை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது´ என்று குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில் ´இது வரையில் எமது பெறுபேறுகளையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், இலங்கையில் 3G சந்தை எதிர்கால வளர்ச்சிவாய்ப்புக்களை இன்னமும் மகத்தான அளவில் கொண்டுள்ளது என்றும் உறுதியாக நம்புகின்றோம். மிகச் சிறந்த தரத்திலான 3G சேவை அனுபவத்தை, மிகவும் நியாயமான கட்டணங்களில் தொடர்ந்தும் வழங்கவேண்டும் என்ற எமது இலக்கினை இந்த முன்னெடுப்பு மீளவும் வலுவூட்டுவதாக அமைந்துள்ளது´ என்று குறிப்பிட்டார்.