Google’s balloon அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்தது!!

Project Loon என அழைக்கப்படும் அதிவேக இன்ரநெட் வழங்கும் கூகிள் பலூன் Google’s balloon ஒன்று நேற்றைய தினம் அமெரிக்காவினால் வான்வெளியில் செலுத்தப்பட்டு இலங்கைக்கு வந்துள்ளது.

Google -Project Loon-balloon

இதையடுத்து நேற்றைய தினம் பரிசோதனைகள் மேற்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்
மேலும் மூன்று பலூன்கள் சில வாரங்களில் இலங்கையை நோக்கி வரும் எனவும் ICTA (nformation and Communication Technology Agency of Sri Lanka) அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தெரிவி்த்தார்.

இதன் மூலம் சகல இடங்களிலும் உள்ள மக்கள் இலகுவாக இணையத்தை பெற்றுக்கொள்ளும் முகமாக இத்திட்டத்தை விஸ்தரிப்பதே நோக்கமாகும்.

இந்த பலூன் விமானங்கள் பறப்பதை விட இரண்டு மடங்கு உயரமான வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத ஆகாயத்தில் இந்த பலூன்கள் நிலைகொண்டிருக்கும். 180 நாட்கள் வாழ்தகவுடையவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts