கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சையில் நாளைய தினத்திற்குரிய பரீட்சையை வேறு ஒரு தினத்தில் நடத்துமாறு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக பல துறைகளின் பணிகள் முடங்கக்கூடும் என ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக நாளைய தினத்திற்குரிய பரீட்சை பிறிதொரு நாளில் நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.