முகப்புத்தக கணக்கு (Facebook) வைத்திருப்பவர் இறந்ததன் பின்னர் அக்கணக்குக்கு என்ன நடக்கும்? இது யாரும் எதிர்பார்க்காத பிரச்சினையாகும்.
எனினும், முகப்புத்தக (Facebook) நிறுவனம் இந்த பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.
அதன் பிரகாரம் முகப்புத்தக (Facebook) கணக்கு உரிமையாளர் மரணமடைந்ததன் பின்னர் அக்கணக்குக்கு என்ன நடக்கும் என்பதை அக்கணக்கின் உரிமையாளர் உயிருடன் இருக்கும் போதே தீர்மானித்துகொள்ள முடியும்.
அந்த அம்சத்தை Facebook’s legacy contact features என்றே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் முகப்புத்தகக் கணக்கு வைத்திருப்பவர் மரணமடைந்து விட்டதன் பின்னர் அக்கணக்கை முழுமையாக அழித்துவிட (Delete) முடியும்.
இல்லாவிட்டால் அக்கணக்கை தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்காக மற்றொருவருக்கு அக்கணக்கையே மாற்றுவதற்கு கணக்கு வைத்திருப்பவருக்கு சந்தர்ப்பம் உண்டு.
முகப்புத்தக கணக்கு வைத்திருப்பவர் அக்கணக்கை மற்றொருவருக்கு மாற்றினால்,
கணக்கு உரிமையாளர் மரணமடைந்ததன் பின்னர் அவரின் நினைவாக பதிவுகளை ஏற்றுவதற்கு புதிய நண்பர்களுக்கு அழைப்பு விடுவதற்கு, பதிலளிப்பதற்கு சுயவிபரகுறிப்பு படத்தை மாற்றுவதற்கு (profile picture) மற்றும் அட்டைப்படத்தை மாற்றுவதற்கு (cover photo) கணக்கை செயற்படுத்துபவருக்கு சந்தர்ப்பம் உண்டு.
எனினும், கணக்கை ஆரம்பத்தவரின் messages களை, அக்கணக்கை செயற்படுத்துபவரினால் வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்காது.
இதன் ஆரம்ப அம்சம் அமெரிக்காவில் மட்டுமே செயற்படுத்தப்படும். இதனை உலகளாவிய ரீதியில் வியாபிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கபடும் என்று முகப்புத்தக (Facebook) நிறுவனம் அறிவித்துள்ளது.