DRS-இல் LBW விதிகளில் மாற்றம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தின் (DRS) மூலம் வழங்கப்படும் LBW தீர்ப்புகள் தொடர்பாக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, அதிக தடவைகள் LBW முறையில் ஆட்டமிழப்பதற்கான நிலை, துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

InoldlbwrukshdICC-1

இதற்கு முன்னர் காணப்பட்ட விதிகளின்படி, LBW தொடர்பாக நடுவர் வழங்கிய தீர்ப்பை மாற்ற வேண்டுமாயின், இரு புறங்களிலும் காணப்படும் விக்கெட்டொன்றின் நடுப் பகுதியில், பந்தின் அரைவாசிக்கும் அதிகமானது, தாக்க வேண்டும்.

ஆட்டமிழப்பு இல்லை என நடுவர் தீர்ப்பு வழங்கிய பின்னர், அதை பந்துவீசும் அணி மறுபரிசீலனைக்குக் கோரினால், இரு புறத்திலுமுள்ள ஏதாவது விக்கெட்டைப் பந்து தாக்குமாயின், அந்த விக்கெட்டின் நடுப்பகுதியில், பந்தினுடைய அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதி தாக்கினால் மாத்திரமே ஆட்டமிழப்பு வழங்கப்படும்.

InnewideebsjICC-2

ஆனால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதியின்படி, பந்தின் அரைவாசி தாக்க வேண்டிய பகுதியாக, விக்கெட்டின் ஓரம் மாற்றப்பட்டுள்ளது. இதனால், அதிகளவிலான ஆட்டமிழப்புக் கோரிக்கைகள், மாற்றப்பட்டு வழங்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்த மாற்றம், ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அல்லது அதற்குச் சற்று முன்னர் ஆரம்பிக்கும் தொடர்களில் அமுல்படுத்தப்படும். ஆனால், நடுவர் மீள்பரிசீலனைத் திட்டமென்பது, அனைத்துத் தொடர்களுக்கும் இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts