பயந்து தப்பியோடும் ரஷ்ய படை வீரர்கள்!!

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 15 மாதங்களைக் கடந்த நிலையில், பாக்முட் அருகே முன்னணி பகுதியிலிருந்து ரஷ்ய படைப்பிரிவுகள் பின்வாங்கியுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது. இது குறித்து உக்ரைன் தரைப்படை பிரிவு தளபதி தெரிவிக்கையில், ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாக்முட்டின் சில பகுதிகளில் உக்ரைனின் எதிர்த்தாக்குதல்களை சமாளிக்க முடியாமல்...

F-16 ரக போர் விமானத்தினால் காத்திருக்கும் ஆபத்து! பெரும் குழப்பத்தில் ஐரோப்பிய நாடுகள்

உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானத்தை நெதர்லாந்து அரசு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறான ஆயுத உதவியினால் உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே, உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானத்தை வழங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் டென்மார்க் ஆகிய...
Ad Widget

இராணுவத்தளங்களை குறிவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்!

உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் உள்ள இராணுவத்தளங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், 60 ஆளில்லா விமானங்களை கொண்டு ரஷ்யா கடுமையாக தாக்கியுள்ளது. உக்ரைனின் தலைநகர் கீவ், கருங்கடல் நகரான ஒடிசா மற்றும் பிற நகரங்களை இலக்காக கொண்டு, ரஷ்யா இன்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட 60 கமிகேஜ் ஆளில்லா விமானங்களை கொண்டு...

தீவிரமடையும் ரஷ்யாவின் வான்வழி தாக்குதல்! தீப்பற்றி எரிந்த உணவு சேமிப்பு கிடங்கு

உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரான ஒடேசாவில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் உணவு சேமிப்பு கிடங்கொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் கிர்கிவ், கெர்சன், மைகோலே , மற்றும் ஒடேசாவில் ரஷ்யா 16 ஏவுகணைகள் மூலம் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒடேசாவில் உள்ள...

உக்ரைன் மீதான போர் தந்திரோபாயங்களில் மாற்றம்: ரஷ்யாவின் பயங்கர திட்டம் அம்பலம்

உக்ரைன் மீதான ரஷ்ய போர் ஓராண்டை கடந்து இன்று 433 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில் உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதல் தந்திரோபாயங்களை ரஷ்யா மாற்றி உள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா சமீபத்தில் ஏவிய 18 ஏவுகணைகளில் 15-ஐ உக்ரைனிய...

அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியில் தீவிரமடைந்த போரில் டிசெம்பர் மாதம் தொடக்கம் தற்போது வரை 100,000 ரஷ்யர்கள் பாதிக்கப்படடுள்ளனர் எனவும் அவர்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர் என வெள்ளை மாளிகையின் மதிப்பீட்டின்படி என மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி நேற்று (01.05.2023) இந்த...

புடினை கொல்ல உக்ரைன் அனுப்பிய இரகசிய ட்ரோன் விமானம்: அம்பலப்படுத்திய ஜேர்மன்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை படுகொலை செய்ய உக்ரைன் உளவுத்துறை ட்ரோன் விமானமொன்றினை அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. இருப்பினும் இந்த ட்ரோன் விமானம் பாதி வழியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஜேர்மன் ஊடகமொன்று அம்பலப்படுத்தியுள்ளது. உக்ரைன் உளவுத்துறை 17 கிலோ வெடிப்பொருட்களுடன் UJ-22 ரக ட்ரோன் விமானத்தை கடந்த ஞாயிறன்று அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. ரஷ்யாவின் தொழிற்பேட்டைக்கு புடின் வருகை...

பிரித்தானியாவை தாக்க தயாராகும் ரஷ்யா!! பிரித்தானியா வெளியிட்ட அவசர எச்சரிக்கை!!

பிரித்தானியா மீது ரஷ்யா தாக்குதலை நடத்தப்போகிறது என்கின்ற செய்திகள் கடந்த சில நாட்களாகவே உலகின் பிரதான ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. அச்சத்தில் ஆழ்த்தக்கூடிய இதுபோன்ற செய்திகள் ஒருபக்கம் சர்வதேச ஊடகங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் அதேவேளை பிரித்தானிய அரசாங்கம் விடுத்திருந்த ஒரு அவசர அறிவிப்பும் மேலும் பிரித்தானிய மக்களை கலக்கத்தில் ஆழ்த்திருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (23.04.2023)...

ரஷ்ய ஜனாதிபதியை கைது செய்ய பிடிவிராந்து!!

தென்னாப்பிரிக்காவில் மாநாடு நடைபெற உள்ள நிலையில், அங்கு சென்றால், தான் கைது செய்யப்படலாம் என புடின் அஞ்சுவதாக கூறப்படுகின்றது. உக்ரைனில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்காக புடினைக் கைது செய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியானை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒப்பந்தத்தின் கீழ் நாட்டில் கால் வைத்தால், அவரை அந்த நாடு கைது செய்து...

உக்ரைனில் தீவிரமடையும் பதற்றம்! இரு நாட்டு படைகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை!!

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனில் போரின் முன்வரிசையில் ரஷ்ய துருப்புகளுக்கும் வாக்னர் கூலிப்படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் ஸ்டானிட்சியாவில் ரஷ்ய இராணுவ வீரர்களுக்கும், வாக்னர் குழுவின் கூலிப்படையினருக்கும் இடையே இவ்வாறு சண்டை வெடித்துள்ளது. மேலும் இந்த...

நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள் பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் சுமார் 7.2 ரிக்டர் அளவில் இன்று காலை பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள், உயிர்சேதங்கள் குறித்து இதுவரையில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை...

ரஷ்யாவுக்கு எதிராக மூர்க்கமாக களமிறங்கும் மற்றொரு நாடு!!

உக்ரைன் - ரஷ்ய யுத்தக் காட்சிக்குள் மிகவும் மூர்க்கமாக நின்று செயலாற்றிக்கொண்டிருக்கின்ற ஒரு நாடு போலந்து. உக்ரைனுக்கு நிகராக ரஷ்யா மீது மூர்க்கத் தனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு நாடு என்றும் போலந்தை குறிப்பிடலாம். உக்ரைனுக்கான மேற்குலகின் ஆயுத வழங்கல்கள் அத்தனையுமே போலந்து வழியாகவே உக்ரைனுக்குள் கொண்டு செல்லப்படுகின்றன. உக்ரைன் படையினருக்கான மேற்குலகின் பயிற்சிகளில் அனேகமானவை...

உக்ரைன் வான்வெளியில் திடீரென வெடித்துச் சிதறிய மர்ம பொருள்!

உக்ரைன் தலைநகரில் திடீரென்று தோன்றிய மர்ம பொருள் ஒன்று சில நிமிடங்களில் நெருப்பு கோளமாக வெடித்துச் சிதறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகரின் வான்வெளியில் மர்ம பொருள் தோன்றியதும், வான் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள் நகரம் முழுவதும் விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தொடர்பில் சந்தேகம் எழுந்ததால், வான் தாக்குதல் எச்சரிக்கையும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி விடுக்கப்பட்டது. ஆனால் மக்கள்,...

ரஷ்ய விமானத்தை உக்ரைனுக்கு வழங்கும் கனடா! கடும் கோபத்தில் புடின்

கனடா- ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சரக்கு விமானமொன்றை உக்ரைனுக்கு வழங்க கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து கனடாவின் வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்க ட்ரூடோ நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் 2022 பெப்ரவரி மாதம் முதல் ரொறன்ரோவின்...

திடீரென உக்ரைனுக்கு சென்ற புடின்!

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் கெர்சன் மற்றும் லுகான்ஸ்க் மாகாணங்களுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது புடினின் உதவியாளர்களில் ஒருவர் அணு ஆயுத சூட்கேஸை சுமந்துவரும் வரும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள ரஷ்ய இராணுவ தலைமையகத்திற்கு சென்ற புடின், கள நிலவரம் குறித்து படைத் தளபதிகளிடம் கேட்டறிந்ததாக...

எதிர்க்கட்சி ஆர்வலர் விளாடிமிர் காரா-முர்சாவுக்கு ரஷ்யாவில் 25 ஆண்டுகள் சிறை

உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளைக் எதிரித்து விமர்சித்த குற்றச்சாட்டில் எதிர்க்கட்சி ஆர்வலர் விளாடிமிர் காரா-முர்சாவுக்கு ரஷ்யாவில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ரஷ்ய இராணுவத்தைப் பற்றிய "தவறான" தகவல்களைப் பரப்பி, "விரும்பத்தகாத அமைப்புடன்" இணைந்திருந்த தேசத் துரோகத்தின் குற்றவாளியாக கருதப்படுகின்றார். தேசத்துரோகம் மற்றும் ரஷ்ய இராணுவத்தை அவதூறு செய்த குற்றச்சாட்டின் கீழ் கிரெம்ளின் எதிர்ப்பாளர்...

உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்பு!!

உக்ரைனில் இருந்து தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போலந்தும் ஹங்கேரியும் தடை விதித்துள்ளன. போலந்து பிரதம மந்திரி அலுவலகம் இந்த நடவடிக்கை "போலந்து விவசாய சந்தையை ஸ்திரமின்மைக்கு எதிராக பாதுகாக்க" என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து, போலந்து நாட்டின் முடிவு குறித்து உக்ரைன் வருத்தம் தெரிவித்துள்ளது. "ஒருதலைப்பட்சமான கடுமையான நடவடிக்கைகளால் பல்வேறு சிக்கல்களைத்...

ரஷ்யாவிற்கு இரகசியமாக உதவி செய்ய திட்டம்!மேற்குலகிற்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய நாடு

கடந்த வார இறுதியில்,மிகவும் இரகசியமான அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் இணையத்தில் கசிந்து உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரகசிய ஆவணங்களில் இருந்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளன. பெப்ரவரி 17 ஆம் திகதியிட்ட ஆவணத்தின் ஒற்றை பகுதி, ஜனாதிபதி அல்-சிசி மற்றும் மூத்த எகிப்திய இராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்ததாக கூறப்படும் உரையாடல்களை...

ரஷ்யாவின் மிகக் கொடூரமான தாக்குதல்கள்! முற்றிலுமாக அகற்றப்படும் மரியுபோல் தொடருந்து நிலையம்

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள தொடருந்து நிலையத்தை ரஷ்ய படைகள் முற்றிலுமாக அகற்றி வருவதாக நாடுகடத்தப்பட்ட மரியுபோல் நகரத்தின் மேயரின் ஆலோசகர் பெட்ரோ ஆண்ட்ரியுஷ்செங்கோ(Petro Andriushchenko) தெரிவித்துள்ளார். போரின் தொடக்க நாட்களில் ரஷ்ய இராணுவ படையின் தொடர் தாக்குதலுக்கு உள்ளான மரியுபோல் நகரம், கடந்த ஆண்டு மே மாதம் முற்றிலுமாக ரஷ்ய இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது....

இரவோடு இரவாக உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல்!

இரவோடு இரவாக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட 17 ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் முறியடித்துள்ளதாக உக்ரைனின் விமானப்படை கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யா, ஈரானில் தயாரிக்கப்பட்ட 17 ஷாஹெட் ட்ரோன்களை அனுப்பி இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கருங் கடலின் கிழக்கு கடற்கரையில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கருதுவதாகவும் குறித்த ட்ரோன்கள் அனைத்தும் தென்மேற்கில் உள்ள ஒடிசா...
Loading posts...

All posts loaded

No more posts