- Sunday
- November 24th, 2024
இ-ரீடர்ஸ் (E-Readers) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மின்படிகளை உறங்கச் செல்வதற்கு முன்னர் படுக்கையில் படிக்கும் பழக்கத்தால் ஒருவரின் தூக்கம் கெடுவதாகவும், அதனால் அவரது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும் என்றும் அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். புத்தகம் என்றால் அது காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தக வடிவில் மட்டுமே இருந்த நிலைமை மாறி இன்று மின்படிகளிலும் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. ஆங்கிலத்தில்...
ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்தியுள்ளத் தாக்குதல்களில், திவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தானியப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் முதல் தாக்குதல் வடக்கு வாசிரிஸ்தான் பகுதியிலுள்ள குண்ட் கிராமத்திலுள்ள பஞ்சாபித் தாலிபான்கள் இருந்த வளாகத்தின் மீது நடத்தப்பட்டது. அதில் நால்வர் கொல்லப்பட்டனர். பின்னர் அதே பகுதியில் உஸ்பெக் தீவிரவாதிகள்...
ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் சிக்கிய, யாஸிடி சிறுபான்மையின பெண்களை, அந்த பயங்கரவாதிகள், பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியுள்ளனர். அதற்கு அஞ்சி, ஏராளமான சிறுமியரும், பெண்களும் தற்கொலை செய்து கொண்ட தகவல் வௌியாகியுள்ளது. மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கிறிஸ்தவர்கள், ஷியா பிரிவு முஸ்லிம்கள், யாஸிடி இனத்தவர் போன்ற...
பாகிஸ்தானில் இருந்து இயங்கும் அனைத்து தீவிரவாத அமைப்புக்களும் அழிக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். சீன உயர்மட்ட குழுவுடனான சந்திப்பின்போது ஷெரீப் கூறியதாக பாகிஸ்தான் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரிவித்த பிரதமர் பாகிஸ்தான் மண்ணில் இருந்து இயங்கும் தீவிரவாத அனைத்து அமைப்புகளும் அழிக்கப்படும். அவற்றின் கொள்கை எத்தகையதாக இருந்தாலும்...
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது பாகிஸ்தானில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பாடசாலை ஒன்றினுள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 139 மாணவர்கள் உள்ளிட்ட 149 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அந்த நாட்டில் மீண்டும் மரண தண்டனையை அமுலுக்கு கொண்டுவந்தனர். இதன்படி தண்டனை...
பாகிஸ்தானின் பெஷாவரில் நடைபெற்ற மோசமான தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் ஏற்கெனவே வேறு வழக்குகளில் தண்டிக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ராவல்பிண்டி நகரில் அமைந்துள்ள பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமையகத்தில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் கடந்த 2011ஆம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட டாக்டர் ஒஸ்மான் மற்றும் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பை...
ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாண்டில் உள்ள கெய்ன்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எட்டு குழந்தைகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது. 34 வயதுப் பெண்மணி ஒருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அந்தப் பெண்மணிக்கும் குழந்தைகளுக்கும் என்ன தொடர்பு, எப்படி இந்தச் சம்பவம் நடந்த்து என்ற விவரங்கள் இதுவரை தெளிவாகவில்லை....
அமெரிக்காவும் க்யூபாவும் தமது இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள வழிசெய்யும் முகமாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவுள்ளன. கடந்த ஐம்பது வருடங்களாக இரு நாட்டுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் இல்லாத நிலையே இருந்து வருகிறது. ஐந்து ஆண்டுகளாக க்யூபாவின் சிறைச்சாலை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க அரசின் ஒப்பந்ததாரரான ஆலன் கிராஸ் விடுவிக்கப்பட்டவுடன், அமெரிக்கா இராஜதந்திர உறவுகளை...
பாகிஸ்தானின் வடமேற்கே பெஷாவர் நகரில் தாலிபான் நடத்தியத் தாக்குதலில் குறைந்தது 132 பள்ளிக் குழந்தைகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாக்குதல்கள் செவ்வாய் கிழமை மாலை முடிவுக்கு வந்தது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரையும் தாம் கொன்றுவிட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. பள்ளி வளாகத்தில் குண்டுகள் ஏதாவது இருக்கின்றதா என்பதை ஆராயும்...
பாகிஸ்தான் இராணுவ கல்லூரியில் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 25 மாணவர்கள் காயமுற்றதாகவும், 4 பேர் பலியானதாகவும் தெரிகிறது. பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பெஷாவரில் உள்ள இராணுவ கல்லூரியில் பயங்கரவாதிகள் 500 மாணவர்களை பிணைக்கைதிகளாக...
இந்த வருடத்தின் மிகப் பெரிய எரிகல் மழை என்று எதிர்பார்க்கப்படும் எரிகல் தோன்றும் நிகழ்வுக்காக உலகெங்கும் வான அவதான ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர். ஆங்கிலத்தில் ஜெமினிட்ஸ் என்று சொல்லப்படும் இந்த எரிகல் மழை உச்சத்தை அடையும் சமயத்தில் ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான எரிகற்களை நாம் காண முடியும். விண்கற்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தவுடன் எரிந்து...
அமெரிக்காவின் பென்சிலிவேனியா மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரை சுட்டுக்கொன்ற துப்பாக்கிதாரியை போலிசார் தேடி வருகின்றனர். பென்சில்வேனியா மாநிலத்தின் மாண்ட்கோமரி பகுதியில் 35 வயதான பிராட்லி வில்லியம் ஸ்டோன் என்பவர் தனது உறவினர்கள் 6 பேரை வெவ்வேறு ஊர்களில் சுட்டுக்கொன்று தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. வேறு மூன்று பேர் காயமடைந்திருக்கின்றனர். அவர் ஆயுதந்தாங்கியிருக்கிறார், ஆபத்தானவர் என்று கூறிய...
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மத்தியில் உணவு கஃபே ஒன்றில் ஆயுததாரி ஒருவர் பணயக் கைதிகளாக மக்களை பிடித்து வைத்திருந்த சம்பவம் பொலிஸாரின் அதிரடி தாக்குதல் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. ஆட்களைப் பிடித்து வைத்திருந்த ஆயுததாரி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன. 49 வயதான இரானிய அகதியான இந்த ஆயுததாரியின் பெயர் மான் ஹரோன்...
சிட்னி காபி ஹோட்டலில் சிறை பிடிக்கப்பட்டிருந்தவர்களி்ல் 3 பேர் தப்பி வந்துள்ள நிலையில் தற்போது மேலும் 2 பேர் வெளியேறியுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 5 பேர் மீண்டு வந்துள்ளனர். சிட்னி லின்ட் சாக்கலேட் கேஃப் ஹோட்டலை சிறை பிடித்துள்ளான் ஒரு தீவிரவாதி. கடந்த 7 மணி நேரமாக இந்த சிறைபிடிப்பு நீடிக்கிறது. ஹோட்டலுக்கு வெளியே...
அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல் உள்ள விடுதியில் 20 பொது மக்கள் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் சிட்னியில் ஆயுதம் தாங்கியவர்களால் 20 பொதுமக்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். மேல்...
ஃபிலிப்பைன்ஸ் நாட்டை நெருங்கிவரும் ஹகுபிட் புயலை எதிர்கொள்ள அந்நாட்டு மக்கள் தயாராகிவருகின்றனர். ஞாயிற்றுக் கிழமையன்று இந்தப் புயல் கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பசிபிக் கடலில் தற்போது நிலை கொண்டிருக்கும் ஹகுபிட், கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று ஃபிலிப்பைன்ஸை நெருங்கிவருகிறது. கடந்த ஆண்டுதான் இந்தப் பிரதேசம் ஹையான் புயலால் சூறையாடப்பட்டது. இது நான்காம் நிலை புயலாக கடந்த சனிக்கிழமை...
இலங்கைக்கு செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் இந்த எச்சரிக்கையை நேற்று விடுத்துள்ளது. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் தேர்தல் பிரசாரங்கள் என்பவற்றில் இருந்து விலகி இருக்குமாறு பிரித்தானிய பிரஜைகள் கோரப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது...
நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரான கானோவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்தியுள்ளனர். [caption id="attachment_36351" align="aligncenter" width="534"] தாக்குதல் இடம்பெற்ற கானோ பள்ளிவாசல்[/caption] அங்குள்ள மத்தியப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின்னர் மூன்று குண்டு வெடிப்புகளும் இடம்பெற்றன என்று சம்பவத்தை...
இணையத்தில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாகக் கூறும் பிரிட்டிஷ் வர்த்தகர் ஒருவர், கூகுள் நிறுவனத்துக்கு எதிரான தனது சட்டப் பிணக்கைத் தீர்த்துக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts