Ad Widget

திருமணமாகாத ஜோடிகள் மோட்டார் பைக்கில் பயணம் செய்ய தடை

திருமணமாகாத ஜோடிகள் இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக பயணம் செய்வதற்கு தடைவிதிப்பதற்கு ,இந்தோனேசியாவின் அச்சே மாகணத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் அரசியல்வாதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு அச்சே பகுதியில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த புதிய சட்டம், உள்ளூர் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. இந்த சட்டம் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வருகிறது....

நில அதிர்வுகளால் அதிரும் காத்மாண்டு: பலியானோர் எண்ணிக்கை 3,000 ஆக உயர்வு

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தொட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை காலை 11.56 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டுவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பழமைவாய்ந்த கட்டிடங்கள், குடியிருப்புகள் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 3...
Ad Widget

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்

நேபாளத்தில் மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. நேபாளம் தெற்கு கோடாரி எனுமிடத்திலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதேவேளை, நேபாளம், காத்மண்டிலிருந்து 50 மைல் தூரத்தில் ஆறுமைல் ஆழத்துக்கு அடியில் 7.9 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுமார் 2,000 க்கும் மேற்பட்டவர்கள்...

நிலநடுக்கத்தில் புதையுண்டது காத்மண்டுவின் 19-ம் நூற்றாண்டு “தரகரா” கட்டிடம்!

காத்மாண்டு: நேபாளத்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மண்டுவில் இருந்த19-ஆம் நூற்றாண்டு பழமையான 9 மாடிக் கட்டிடமான "தரகரா" டவர் முழுமையாக இடிந்து விழுந்தது. அக்கட்டிடத்தில் இருந்த 50 பேர் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 80 கி.மீ., தொலைவில் இன்று முற்பகல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்...

நேபாளத்தில் 7.5 ரிச்டர் நிலநடுக்கம் பதிவு! இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது

நேபாளத்தின் தலை நகரான காத்மண்டுவிலிருந்து 50 மைல் தூரத்திலுள்ள பகுதியில் 7.5 ரிச்டர் அளவிவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இந்த நில அதிர்வு டெல்லி, சிக்கிம், லக்னோ, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டெல்லி புறநகர் பகுதியான நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் சுமார்...

நவுறுவிலுள்ள இலங்கை அகதிகள் கம்போடியாவில் குடியேற்றப்படுவர்

அவுஸ்திரேலியாவினால் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கையர் உட்பட பல்நாட்டு அகதிகள் நவுறு தீவிலிருந்து கம்போடியாவில் குடியமர்த்துவதற்காக அங்கு அனுப்பப்படவுள்ளனர் என அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் கூறியது. கம்போடிய தலைநகரான 'நொம்பென்' இல் குடியேற்றப்படுவதற்காக முதல் தொகுதி அகதிகள் விசேட விமானத்தின் மூலமாக திங்கட்கிழமை அழைத்து செல்லப்படவுள்ளனர். இதற்கான கம்போடியாவும் அவுஸ்திரேலியாவும் இருபக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. கம்போடியாவுக்கு அனுப்பப்படவுள்ளவர்களில்...

புருணேயில் இடம்பெற்ற ஆடம்பர திருமணம்!

புருணே சுல்தான் ஹசன் அல் போல்கியாவின் இளைய மகனும் பட்டத்து இளவரசருமான அப்துல் மாலிக்கின் திருமணம் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ஆடம்பரமாக தங்கங்களை கொட்டி நடைபெற்றது. மணமக்கள் இருவரும் தங்கம், வைர நகைகளில் ஜொலித்தனர். புதுமண தம்பதிகளை காண தலைநகர் பண்டர் செரி பெகவனில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ஒரு கோடியில் இருந்து பார்த்தால்...

பேர்ள் ஹார்பர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை அடையாளம் காண முயற்சி

பேர்ள் ஹார்பர் தாக்குதலில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமது படையினரின் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டியெடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. [caption id="attachment_43229" align="aligncenter" width="624"] யுஎஸ்எஸ் ஒக்லஹோமா கடற்படைக் கப்பலில் இருந்த படையினர் ஹவாயில் புதைக்கப்பட்டுள்ள இடம் [/caption] இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா தலையிட பேர்ள் ஹார்பர் மீது ஜப்பான் நடத்தியத் தாக்குதல் முக்கியமான காரணமாக...

படகு கவிழ்ந்து விபத்து – 400 பேர் நீரில் மூழ்கி பலி

லிபியா அருகே நிகழ்ந்த படகு விபத்தில் சுமார் 400 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. ஆப்ரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு சண்டையை அடுத்து திருட்டு தனமாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லிபியா பகுதியில் இருந்து புறப்பட்ட படகு ஒன்றில்...

தென் ஆப்ரிக்காவில் காந்தி சிலை மீது பெயிண்ட் ஊற்றப்பட்டது

தென் ஆப்ரிக்காவில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தபட்டுள்ளது தொடர்பில் ஒருவர் வழக்கை எதிர்கொள்ளவுள்ளார். தீய எண்ணத்துடன் அவர் காந்தியின் சிலையை சேதப்படுத்தினார் எனக் கூறப்படுகிறது. ஜொகனஸ்பர்க் நகரிலுள்ள அவரது சிலையின் மீது கடந்த சனிக்கிழமை வெள்ளை பெயிண்ட் ஊற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் ஐந்து லிட்டர் பெயிண்ட் வாளியும், 'காந்தி போக...

உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை

ரஷ்யாவில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அடுத்த ஆண்டு, உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வசிக்கும் வேலேரி ஸ்ரிடோனோவ் சிறு வயதில் மரபணு குறைபாடு காரணமாக, தசைகள் வளர்ச்சியற்று வேர்டிங் ஹாப்மேன் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரின் தலை பகுதி மட்டுமே ஆரோக்கியமாக உள்ளது. மற்ற உடல்...

66 நாட்கள் கடலில் தவித்தவர் உயிருடன் மீட்பு

சுமார் இரண்டு மாதங்களாக கடலில் தன்னந்தனியாகத் தவித்துவந்த ஒருவர் தற்போது மீட்கப்பட்டுள்ளார். மீன்களை உண்டும் மழை நீரைக் குடித்தும் அவர் உயிரைத் தக்கவைத்திருந்தார். வியாழக்கிழமையன்று நார்த் கரோலினாவுக்கு 200 மைல் தொலைவில் தவித்துக்கொண்டிருந்த லூயிஸ் ஜோடர்ன் என்ற 37 வயது நபரை அந்த வழியாகச் சென்ற ஜெர்மன் நாட்டு டேங்கர் கப்பல் ஒன்று பார்த்தது. அவர்...

கென்ய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிதாரிகள் தாக்குதல்; உள்ளே பணயக் கைதிகள்

கென்யாவின் வடகிழக்கே முகமூடியணிந்த துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்திய பல்கலைக்கழக மாணவர் விடுதியை பாதுகாப்புப் படைகள் சூழ்ந்துள்ளன. கரிஸ்ஸா என்ற ஊரிலுள்ள பல்கலைக்கழகத்திற்குள் எத்தனை பணயக் கைதிகள் பிடித்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பது இன்னும் தெரியவில்லை என பொலிசார் கூறுகின்றனர். நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர்...

கணினி தாக்குதல்களை நடத்துபவர்கள் மீது பொருளாதாரத் தடை – ஒபாமா

அமெரிக்க இலக்குகள் மீது சைபர் தாக்குதல்களை நடத்துபவர்கள் மீதும், அந்தத் தாக்குதல்களால் பலன் அடைபவர்களையும், தண்டிக்க உள்ள பொருளாதாரத் தடைகளை பிரயோகிப்பதை, அந்நாட்டின் அதிபர் ஒபாமா அங்கீகரித்துள்ளார். அதிகரித்துவரும் இத்தகைய சைபர் தாக்குதல்களை, தேசிய அவசர நிலையாக விவரித்துள்ளார். அமெரிக்கவை எதிர்நோக்கியிருக்கும் மிக மோசமான பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு சவால்களுள், இந்த சைபர் தாக்குதல்களும்...

விமானிக்கு பயணி எழுதிய உருக்கமான கடிதம்

இங்கிலாந்தில் இருந்து ஸ்பெயினுக்கு விமானத்தில் சென்ற பெண் ஒருவர் தன்னை பத்திரமாக அழைத்துச் சென்றதற்கு நன்றி தெரிவித்து விமானிக்கு எழுதிய கடிதம் ட்விட்டரில் தீயாக பரவியுள்ளது. பெத்தனி என்ற பெண் இங்கிலாந்தில் இருந்து ஸ்பெயினுக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். விமானம் ஸ்பெயினில் பத்திரமாக தரையிறங்கியதும் பெத்தனி ஒரு பேப்பரை எடுத்து விமானிக்கு நன்றி தெரிவித்து கடிதம்...

மஹிந்த கூட்டத்தால் நாடு பாதாளத்தில் – சந்திரிகா

போரை வெற்றி கொண்டதாகத் தம்பட்டமடித்த முன்னைய அரசு அதன் பலாபயனை மக்களுக்குப் பெற்றுத்தரவில்லை. நாட்டை பெரும் கடனில் மூழ்கடித்துச் சென்றுள்ளது இவ்வாறு குற்றஞ்சாட்டினார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. "போர் நிறைவுபெற்று ஆறு ஆண்டுகளின் பின்னர் தேர்தல் தோல்வியையடுத்து வீடு சென்ற முன்னைய ஆட்சியாளர்கள் திறைசேரியை வங்குரோத்து நிலையில் விட்டுச்சென்றுள்ளனர். அத்துடன் நாட்டைப் பத்தாயிரம்...

தற்கொலையை தடுக்க புதிய வழி

அன்றாட வாழ்வில் சிக்கலை சந்திக்கும் பெரும்பாலானோர், அதிலிருந்து மீள வழி தெரியாத போது தற்கொலையை தான் தங்களின் ஒரே தீர்வாக தேர்ந்தெடுக்கிறார்கள். இதை தடுக்க கவுன்சிலிங், சேவை மையங்கள் என பல வழிகளை அரசுகள் பயன்படுத்தி வந்தாலும், தற்கொலையை கட்டுப்படுத்த முடியவில்லை. தென்கொரியாவில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலை சம்பவங்கள், அரசுக்கும், பெற்றோருக்கும் பெரும்...

‘ஜெர்மன்விங்ஸ் விமானம் இரண்டாம் விமானியால் வேண்டுமென்றே வீழ்த்தப்பட்டது ‘

பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் இரண்டாம் விமானி " வேண்டுமென்றே விமானத்தை அழிக்க" விரும்பியதாக பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். [caption id="attachment_42430" align="aligncenter" width="625"] டுவிட்டரில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டாம் விமானி அந்த்ரேயாஸ் லுபிட்ஸ் புகைப்படம். படம் உறுதிசெய்யப்படவில்லை. [/caption] கீழே விழுந்த விமானத்தின் விமானியறை ஒலிப்பதிவுக் கருவியில் இருந்து கிடைக்கப்பெற்ற...

148பேருடன் பயணித்த விமானம் வீழ்ந்து நொருங்கியது

ஆறு விமான ஊழியர்கள் மற்றும் 142 பயணிகள் அடங்கலாக 148பேருடன் பயணித்த விமானம் தெற்கு பிரான்ஸில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பிரான்ஸின் ஐ டெலி செய்தி வெளியிட்டுள்ளது. பார்ஸிலோனாவிலிருந்து டுசெல்டோர்ஃப்க்கு சென்ற லுஃப்தான்ஸா விமான சேவையின் இணை நிறுவனமான ஜேர்மன்விங்க்ஸ் விமான சேவையின் ஏ 320 ரக பயணிகள் விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. தெற்கு பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையிலேயே இந்த...

சிங்கப்பூரின் தேசத் தந்தை லீ குவான் யூ காலமானார்!

சிங்கப்பூரின் தேசத் தந்தை எனப் புகழப்படும் லீ குவான் யூ இன்று திங்கட்கிழமை அதிகாலை மரணமானார் என அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் அறிவித்தது. 91 வயதான லீ குவான் யூ கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் அவர் இறந்தார் என அந்நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி...
Loading posts...

All posts loaded

No more posts