- Monday
- November 25th, 2024
சி.ஐ.டி. என்ற இலங்கையின் குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாருக்கு ஆள்கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் உதவிகளை ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரே வழங்கியுள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. போர் காரணமாக இலங்கையிலிருந்து அரசியல் தஞ்சம் கோரி ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் தமிழர்களைத் தடுத்துநிறுத்தும் ஆஸ்திரேலிய அரசின் தந்திரோபயமாகவே இந்தக் கொடூரமான செயலில் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்...
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், அணு ஆராய்ச்சியாளருமான அப்துல் கலாம் அவர்கள் 27.07.2015 அன்று திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் கடந்த மாதம் இலங்கை சென்று வந்தது அனைவரும் அறிந்ததே. இலங்கையின் ஆட்சி அமெரிக்கா சார்பானதும் கூட, இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் அவர்கள் உடனே உயிரிழந்தது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக,...
கடந்த ஆண்டு மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானமான எம்.எச்.370 இந்தியப் பெருங்கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 மாதகாலம் உலகை உலுக்கிய அந்த துயரச் சம்பவத்தின் புதிர் முடிச்சு அவிழ்ந்துள்ளது என்று மலேசியா தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ரீயூனியன் தீவுகளில் கரையில் ஒதுங்கிய விமான பாகம், இறக்கை ஆகியவற்றை பரிசோதித்த போது அது...
இன்றையதினம் சூரியனில் பெரும் வெடிப்பு ஒன்று ஏற்படலாம் என்றும் , அதில் இருந்து தோன்றும் துகள்கள் பூமிக்குள் பிரவேசிக்க இருப்பதால் சில பிரச்சனைகள் தோன்றலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூரியனில் இதுபோன்ற வெடிப்புகள் அவ்வப்போது நிகழ்வது வழக்கம். ஆனால் இது வழமைக்கு மாறாக பெரிய வெடிப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் துகள்கள் பூமியை அடைய இருப்பதனால்...
தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லக்ஷர் இ ஜாங்வி அமைப்பின் தலைவர் மாலிக் இஷாக் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கடந்த வாரம் மாலிக் இஷாக் மற்றும் அவரது இரு மகன்களும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களை பஞ்சாப் மாகாணத்திற்கு ஆயுதங்களை மீட்கும் பொருட்டு அழைத்துச் சென்று பின் செவ்வாய்க்கிழமை திரும்பி வருகையில், ஆயுதம் தாங்கிய குழுவினர் அவர்கள்...
அவுஸ்திரேலியாவின் டார்வின் பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். டார்வினின் நாகரா நகரில் ட்ரவர் வீதியில் இவர்கள் பயணம் செய்த கார் மரத்துடன் மோதியே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலியானவர்கள் கடந்த ஐந்து...
டவுண் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட தனது இரண்டரை வயது மகனை வாஷிங் மெஷினுக்குள் திணித்து, அதைப் புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் தாய் ஒருவர். கர்ட்னி ஸ்டீவர்ட் (21) என்ற பெண்மணி தான் இவ்வாறு பிரச்சினையில் சிக்கியவர். இவருக்கு இரண்டரை வயதில் டவுண் சின்ட்ரோம் பாதிக்கப்பட்ட மகன் ஒருவர் உள்ளார். சமீபத்தில் தனது மகனை...
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் டேவிட் கேனல்ஸ் என்பவரால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பறவைகளில் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் கழுகு, ஒரு கூட்டுக்குள் இருந்த கடல் காகத்தை கொத்தி தூக்கிக் கொண்டு வருகிறது. இதைப் பார்த்து ஆவேசமடைந்த மற்றொரு கடற்காகம் கழுகைக் காயப்படுத்தி அதன் காலில் மாட்டியுள்ள பறவையை விடுவிக்க...
நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் புளூட்டோ கிரகத்துக்கு அருகில் சென்று ஆச்சரியகரமான பல சமிக்ஞைகளை அனுப்பி வருகிறது. தற்போது, புளூட்டோவில் 11,000 அடி உயரமுடைய மலைத்தொடர்கள் இருப்பதை அடையாளம் கண்டுள்ளது. 4.56 பில்லியன் ஆண்டுகள் பழமையான சூரிய குடும்பத்தில் புளூட்டோ 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவானதாக கருதப்படுகிறது. நாசாவின் விண்கலம் தற்போது புளூட்டோவின் மிகப்பெரிய...
மெக்சிக்கோவில் உள்ள அதி உச்ச பாதுகாப்பு மிக்க சிறைச்சாலையில் இருந்து, "டிரக்-லோட்" அதாவது போதை வஸ்த்து கடத்தலின் கடவுள் என்று கூறப்படும் ஈ.ஐ. சப்போஸ் தப்பியுள்ளார். இவர் தப்பிச் செல்ல சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலரை அவரது சகாக்கள் செலவு செய்துள்ளார்கள். 50 மில்லியன் டாலரா என்று வாயைப் பிளக்கவேண்டாம். அது எல்லாம் இவருக்கு...
உலகின் மிகவும் பிரபலமான பல்கலைக்கழங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று தொடங்கப்படவுள்ளது. ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்தத் துறை ஹார்வர்டில் ஆரம்பிக்கபடவுள்ளது என இந்த முன்னெடுப்பைச் செய்தவர்களில் ஒருவரான டொக்டர் விஜயராகவன் ஜானகிராமன் தெரிவித்தார். அவரும் அவரது நண்பரும் சக மருத்துவருமான திருஞானசம்பந்தனும் ஆளுக்கு அரை மில்லியன் டொலர்களை இதற்காக...
உலக அழிவின் ஆறாம் கட்ட காலம் தொடங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. உலகின் மிகப்பெரிய உயிரினமாக காணப்பட்ட டைனோசர் இனம் அழிவடைய ஆரம்பித்த காலத்தில் இருந்தே, உலகின் அழிவு காலம் ஆரம்பமானது. இதன் பல்வேறுகட்டங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன. இதன்படி தற்போது அதன்...
கனடாவின் புதிய குடிவரவு, குடியகல்வு சட்டத்தினால் பல இலங்கையர்கள் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். இதன்படி ஒரு இலட்சத்து 40,000 இலங்கையர்கள் கனேடிய குடியுரிமையை இழக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சட்டத்தின் பிரகாரம் கனடாவில் பிறந்தவர்கள் தவிர, ஏனையவர்களுக்கான குடியுரிமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர்கள் இரண்டாம் நிலை பிரஜைகளாக நடத்தப்படுவர். கனேடிய மக்களை பாதுகாப்பதே இந்த புதிய சட்டத்தின் நோக்கம்...
ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்ற 54 இலங்கையர்கள் உட்பட 65 பேரை ஏற்றிச்சென்ற படகை திருப்பியனுப்ப அதிலிருந்த ஆள் கடத்தல்காரர்களுக்கு 5 ஆயிரம் டொலர்கள் வழங்கப்பட்டதை இந்தோனேசியா நிரூபித்துள்ளதாக 'சிட்னி மோர்னிங் ஹெரால்ட்' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த செய்திக்கு ஆதாரமாக ஆள் கடத்தல்காரர்களுக்கு ஆஸ்திரேலிய அதிகாரகள் வழங்கினர் எனக் கூறப்படும் அமெரிக்க...
மலேஷிய எயார் லைனுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று, ஆஸ்திரேலியாவின் மெல்போன் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் தீப்பற்றியமையே இதற்குக் காரணம் என வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. 300 பயணிகளுடன் சென்ற குறித்த விமானம் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.20 மணிக்கு மெல்போன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக, விமான நிலைய அதிகாரி...
மலேசியாவின் போர்னியோ தீவிலுள்ள சபா மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6.0 ரிச்டர் அளவுகோலில் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான கினபாலு மலையில் சுமார் 160 பேர் தத்தளித்துக்கொண்டிருப்பதாகவும் இவர்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ச(ன்)னத்தின் சுவடுகள் , மற்றும் நாங்களும் மனிதர்களே என்ற இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 10 – 05 – 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உணர்வுபுர்வமாக நடைபெற்றுள்ளது. தமிழர்களின் வலிசுமந்த காலத்தின் பதிவாக மாலை 4.20 மணிக்கு யாழ் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 200 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இளையசமூக...
பாகிஸ்தானில் இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில் சுமார் 41 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர் என்று அந்த நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இஸ்மைலி ஷியா முஸ்லிம்களை பஸ் வண்டியொன்று ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது, கராச்சி நகரில் அப்பஸ் வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் 06 துப்பாக்கிதாரிகள், மேற்படி பஸ்...
'தேர்தலுக்கு முன் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறாது, தொழிலாளர் கட்சியே முன்னிலை பெறும்' என்று கூறப்பட்ட நிலையில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோனின் கன்சவேட்டிவ் கட்சி, 327 இடங்களில் வெற்றிகொண்டு ஆட்சியமைப்பதுக்கு தேவையான 326 ஆசனங்களை விட ஒரு ஆசனம் கூடுதலாகப் பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதேவேளை, 232 ஆசனங்களை மட்டுமே வென்று தோல்வியை தழுவியுள்ள...
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான உமா குமரன், ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். சற்று முன்னர் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவி்ன் படி, ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளர் பொப் பிளக்மன் 24,668 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவர் மீண்டும் இந்த தொகுதியில் இருந்து தெரிவாகியுள்ளார்....
Loading posts...
All posts loaded
No more posts