Ad Widget

சிறுவன் இறந்து கிடந்தது போலவே கடற்கரையில் படுத்து கண்ணீர் அஞ்சலி

துருக்கி நாட்டு கடற்கரையில் இறந்து கிடந்த அகதி சிறுவன் அய்லானுக்கு பிரபல நடிகை உட்பட சமூக ஆர்வலர்கள் அய்லான் இறந்து கிடந்தது போலவே கடற்கரையில் படுத்து அஞ்சலி செலுத்தியுள்ளமை உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அய்லானுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காசாவில் உள்ள கடற்கரை ஒன்றில் 30 நபர்கள் கொண்ட சமூக நல அமைப்பினர் கடந்த திங்கட்கிழமை கூடியுள்ளனர்....

2 நாட்கள் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு!

கணணி வீடியோ கேம் ஐ தொடர்ந்து 22 நாட்களாக விளையாடிக் கொண்டிருந்த ரஷ்யாவைச் சேர்ந்த பதின்ம வயது சிறுவன் ருஸ்டம் (Rustam) திடீரென உயிரிழந்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த 17 வயதுடைய ருஸ்டம் (Rustam) - கம்ப்யூட்டர் கேமில் மிகவும் ஆர்வம் மிக்கவன், வீட்டில் தனிமையில் இருந்ததால் அவருக்கு விருப்பமான 'டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ்' (Defence of...
Ad Widget

கடலில் பலியான பிஞ்சுக் குழந்தை விவகாரம்: ஆட்டம் காணும் கனடா அரசு

கடலில் பலியாகி கரை ஒதுங்கி கிடந்த பிஞ்சுக் குழந்தை விவகாரத்தால் கனடா அரசு ஆட்டம் கண்டு உள்ளது. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குலுக்கு பயந்து சிரியாவின் கொம்பானி நகரில் இருந்து கடந்த ஆண்டு துருக்கி சென்ற அப்துல்லா குர்தி என்பவர், தனது மனைவி ரெஹான், மூத்த மகன்...

ஒரே நாளில், ஒரே மருத்துவமனையில் குழந்தைகள் பெற்ற ஐரிஷ் சகோதரிகள்!

அயர்லாந்தை சேர்ந்த மூன்று சகோதரிகளுக்கு ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்துள்ளன. நான்காவது சகோதரி கர்ப்பமாக இருப்பதுடன் அவருக்கும் விரைவில் குழுந்தை பிறக்கவுள்ளது. இம்முன்று சகோதரிகளுக்கும் கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி மாயோ நகரிலுள்ள காஸ்ட்லேபர் பிரதேசத்தின் மாயோ பொது மருத்துவமனையில் குழந்தைகளை பெற்றுள்ளனர். குறித்த பிரதேசத்தில் அருகருகே வசித்த குறித்த சகோதரிகள்...

உலகின் மனசாட்சியை உலுக்கும் குழந்தையின் புகைப்படம்

ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரே ஒரு புகைப்படம் சொல்லிவிடும். விட்நாமில் அமெரிக்கா நடத்திய கொடூராத்தை உலகுக்கு காட்டியது ஒரு புகைப்படம் தான், ஆப்ரிக்காவில் நிலவிய கொடிய வறுமையை சரியாக உணர்த்தியது ஒரே ஒரு புகைப்படம் தான். தாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பது கூட அறியாத நிலையில் போரில் ஒவ்வொரு நாளும் பல குழந்தைகள் பலியாகிவருகிறார்கள்....

மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் சர்வதேச தலையீடு தேவை

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச உதவியுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச அழுத்தக் குழுவான இன்டர் நேஷனல் க்ரைசிஸ் க்ரூப்பின் இலங்கைத் திட்ட இயக்குனர் ஆலன் கீனன் கூறியிருக்கிறார். பிபிசிக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கையுடன் இணைந்து...

ஒசாமா பின்லேடன் உயிருடன் உள்ளார் – எட்ர்வர்டு ஸ்னோடன்

அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் எட்வர்டு ஸ்னோடன். ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ள அவர் அண்மையில் மாஸ்கோ டிரிபியூன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்படவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறார். பஹாமாஸில் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். ஒசாமா தற்போதும் அமெரிக்காவின் சிஐஏ ஊழியர்கள் பட்டியலில்...

தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டவரை மன்னித்த அக்ரம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற இராணுவ மேஜரை மன்னித்து விட்டதாக தெரிவித்துள்ளார். கராச்சி நகரில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்ற அதிவேக பந்துவீச்சு பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்காக கடந்த 5ம் திகதி கர்சாஸ் பகுதி வழியாக வசிம் அக்ரம் தனது காரை ஓட்டிச் சென்றார்....

ஆஸ்திரியாவில் நின்றுகொண்டிருந்த லாரியில் குடியேறிகளின் சடலங்கள்

ஆஸ்திரியாவின் பேர்கன்லேன்ட் மாகாணத்திற்குக் கிழக்கே, ஹங்கேரி எல்லையை அண்மித்த பகுதியில் கைவிடப்பட்ட லாரியொன்றிலிருந்து, குடியேறிகள் பலரது சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதை ஆஸ்திரிய நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேற்படி லாரியின் குளிரூட்டப்பட்ட பகுதிக்குள், 20 முதல் 50 வரையிலான சடலங்கள் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் குடியேறிகளை பாதுகாப்பது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியம் முழுமைக்குமான பொதுக்கொள்கையின்...

விசாரணை அறிக்கையுடன் கொழும்பு வருகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை கைளிப்பதற்காக விரைவில் கொழும்பு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நாவின் 30வது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில், அதற்கு முன்னர் அதனை இலங்கை ஜனாதிபதியிடம் கைளிப்பதற்காக அவர் வருகை...

ஜப்பானையும், பிலிப்பைன்ஸையும் உலுக்கிப் போட்ட “டைப்பூன் கோனி”

ஜப்பானையும், பிலிப்பைன்ஸ் நாட்டையும் தாக்கிய புயலான "டைப்பூன் கோனி" புயலுக்கு ஜப்பானில் இதுவரையில் 13 பேரும், பிலிப்பைன்ஸில் 36 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புயலால் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இரண்டு நாடுகளும் உருக்குலைந்து போயுள்ளது. கோனி புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானில் கடந்த சில...

தண்ணீரை சுத்திகரிக்கும் புத்தகம் அறிமுகம்!

வழமையாக புத்தகங்கள் மனிதர்களுக்கான அறிவூட்டல்களையே வழங்குகிறது. மனிதனும் புத்தகங்களிலிருந்து வேறுபட்ட அறிவுகளையே பெற்றுக் கொள்கிறான். ஆனால் தற்போது அமெரிக்காவிலுள்ள ஆய்வாளர்கள் புத்தகமானது நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்த உதவும் என தெரிவித்துள்ளனர். குடிக்கக்கூடிய புத்தகம் (‘Drinkable book’) என்ற பெயரிலான இந்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமும் வௌ்ளி, செப்பு மற்றும் நனோ துகள்களால் ஆக்கப்பட்டுள்ளது. கழிவு...

இரண்டு குடியிருப்பு மாடிகளிடையே பாலம் போல் அமைக்கப்படும் நீச்சல் தடாகம்!

இலண்டன் நகரில் 10 அடுக்குமாடி குடியிருப்புக்கள் இரண்டினை இணைக்கும் முகமாகவும், இரண்டு குடியிருப்புக்களிடையே பாலம் போல் செயற்படும் வகையிலும் 25 மீற்றர் நீளமுள்ள நீச்சல் தடாகமொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 25 மீற்றர் நீளமும் 3 மீற்றர் ஆழமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ள இந்த நீச்சல் தடாகம் ஸ்கை பூல் "Sky Pool" என அழைக்கப்படுகிறது. அத்துடன்...

உலகின் இளம் பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஜூகெர்பெர்க் முதலிடம்

உலகின் இளம் பணக்காரர்கள் பட்டியலில் முகநூல் நிறுவனரான மார்க் ஜூகெர்பெர்க் முதலிடம் பெற்றுள்ளார். உலக அளவில் 35 வயதுக்கு உள்பட்ட பணக்காரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேஸ்புக் நிறுவனர்களில் ஒருவரான மார்க் ஜூகெர்பெர்க் முதலிடம் பெற்றுள்ளார். "வெல்த்-எக்ஸ்" என்ற பன்னாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் அவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 41.6 பில்லியன்...

போர்க்குற்றவாளி மகிந்தவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துக

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துவிட்ட மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றத்துக்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இதுவே சரியான தருணம் என்று ஆஸ்திரேலியா எம்.பி. லீ ரியன்னோன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிட்டார். எப்படியும் பிரதராகிவிடுவோம்.. தம் மீதான போர்க்குற்றவிசாரணையில் இருந்து தப்பித்துவிடுவோம் என்று அவர் கனவு கண்டார். ஆனால் மகிந்த...

மாயமான இந்தோனேஷிய விமானம் விபத்து

இந்தோனேஷியாவில் 54 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. பப்புவா மாகாணத்தின் வான்பகுதியில் சென்றபோது குறித்த விமானம் திடிரென காணாமல் போன நிலையில், இதனைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தன. இந்நிலையில், இந்த விமானம் இந்தோனேஷியாவின் பப்புவாவில் ஒக்டேப் என்ற மாவட்டத்தில் விபத்திற்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறைக்குள் வடக்கு மாகாணசபை அவசியம்! – ஐ.நா. மீண்டும் வலியுறுத்து

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவது தொடர்பான பொறிமுறை உருவாக்கும் கலந்துரையாடல்களில், வடக்கு மாகாணசபையும் உள்ளடக்கப்படுவது கட்டாயம்' என்று ஐக்கிய நாடுகள் சபை நம்புவதாக ஐ.நா. பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் மீண்டும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு கேட்டுக்கொண்டதற்கு அமைய, எல்லாப் பங்காளர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தி, பரந்தளவிலான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்க ஐ.நா. முன்வந்தது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த...

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலின் 70ஆம் ஆண்டு நிறைவு

ஜப்பானிய நகரான ஹிரோஷிமா மீது அமெரிக்க அணுகுண்டு தாக்குதல் நடத்தி இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 140, 000 உயிர்களை காவு கொண்ட இவ்வணுகுண்டு தாக்குதலுடன் முதலாம் உலக மகா யுத்தம் நிறைவுக்கு வந்ததுள்ளது. உயிரிழந்த சொந்தங்களை நினைவு கூர்ந்து ஹிரோஷிமா ஞாபகார்த்த பூங்காவுக்கருகில் கூடிய ஆயிரக்கணக்கான ஜப்பானியர்கள் இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்தனர். அத்துடன்...

மயிரிழையில் உயிர் தப்பினார் வசீம் அக்ரம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சளருமான வாசிம் அக்ரமின் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் நிவுகிறது. இந்த சம்பவத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வாசிம் அக்ரம் கராச்சியில் உள்ள தேசிய விளையாட்டு மைதானத்துக்கு பயிற்சி அளிப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச்சென்றார் அப்போது வாசிம்...

இலங்கைப் பணிப்பெண்ணை ஏலத்துக்கு விற்கிறார் சவூதி எஜமானர்!

இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை 25000 சவூதி ரியாலுக்கு விற்பனை செய்வதாக அவரது எஜமானர் விளம்பரம் செய்துள்ளார். சவூதிநாட்டு ஏல விற்பனை இணைய தளமொன்றில் இந்த விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 30 வயதான இலங்கைப் பணிப் பெண்ணை விற்பனை செய்ய விரும்புவதாகவும், ஒப்பந்தம் முடிவுறுத்திக் கொண்டுள்ளதாகவும் எஜமானர் தெரிவித்துள்ளார். குறித்த பெண்ணிற்கு இன்னும் ஒரு ஆண்டு காலம் சேவையாற்ற...
Loading posts...

All posts loaded

No more posts