போரின் போது இலங்கைக்கு வடகொரியா மூலம் உதவி வழங்கிய சீனா!! தற்பொழுது ரஷ்யாவிற்கு!!

இலங்கையில் போர் நடைபெற்ற போது சீனா நேரடியாக இலங்கைக்கு ஆயுதங்களை வழங்காது தனது முகவர் ஊடாக வடகொரியா மூலம் ஆயுதங்களை வழங்கியதாக சிரேஸ்ட விரிவுரையாளரான கலாநிதி மகிந்த பத்திரண தெரிவித்துள்ளார். வடகொரிய ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடகொரிய ஜனாதிபதி கிம்...

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உள்ளிட்டோரின் சொத்துக்களை ஏலம் விட ரஷ்யா முடிவு

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உட்பட நூற்றுக்கணக்கான உக்ரைனியர்களுக்கு சொந்தமாக கிரீமியாவில் உள்ள சொத்துகளை விற்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அவற்றில் கிரீமியா தன்னாட்சிக் குடியரசிலுள்ள 100 சொத்துக்களை விற்க திட்டமிட்டு வருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, கிரீமியாவிலுள்ள, தேசிய மயமாக்கப்பட்டுள்ள சொத்துக்களை விரைவில் விற்பனை செய்ய இருப்பதாக கிரிமியாவின் நாடாளுமன்ற சபாநாயகரான Vladimir Konstantinov தெரிவித்துள்ளார்....
Ad Widget

வட கொரியாவுடன் இராணுவ ஒத்துழைப்புக்கு திட்டமிடும் ரஷ்யா

ரஷியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் சில வரம்புகள் இருந்தாலும், இப்போது உள்ள கட்டமைப்புகளைக் கொண்டே இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அணு ஆயுத சோதனைகளை நடத்தியதன் மூலமும் ஐ.நா. தடையையும் மீறி நீண்ட தொலைவு பாய்ந்து செல்லும் பலிஸ்டிக்...

ரஷ்யாவின் புனித போரை ஆதரிப்பதாக வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு!

மேற்குலகம் உடனான ரஷ்யாவின் புனிதப்போரை ஆதரிப்பதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியாவிலிருந்து தொடருந்து பயணமாக ரஷ்யா வந்தடைந்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு, பிரிமோர்ஸ்கி க்ராய் தொடருந்து நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தொடருந்து நிலையத்திலிருந்து வோஸ்டோச்னி சென்ற கிம் ஜாங் உன்னை ரஷ்ய ஜனாதிபதி புதின் வரவேற்றுள்ளார். இதன் பின்னர்...

வடகொரிய ஜனாதிபதியை சந்திக்கும் புடின்: அச்சத்தில் முக்கிய நாடுகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அழைப்பை ஏற்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதியை எதிர்வரும் நாட்களில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரஷ்யாவின் அதிகாரபூர்வ செய்தி தளமான கிரெம்ளின் இணையதளமும், வட கொரியாவின் அதிகாரபூர்வ கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. தற்போது வரை இச்சந்திப்பு எங்கு நடைபெறும்...

புடினின் சர்வதேச பிடியாணை தொடர்பில் பிரேசில் தகவல்!!

அடுத்த வருடம் பிரேசில் தலைநகரில் இடம்பெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்துகொண்டால் அவர் கைதுசெய்யப்படமாட்டார் என பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தெரிவித்துள்ளார். அடுத்த ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு புடினிற்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர் புடினால் பிரச்சினைகள் இன்றி பிரேசில் வரமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்....

உக்ரைனுக்கு சர்ச்சைக்குரிய குண்டுகளை வழங்கும் அமெரிக்கா: ரஷ்யா கடும் கண்டனம்

உக்ரைனுக்கு சா்ச்சைக்குரிய ‘யுரேனிய சக்கை’யைக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை அளிக்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் திடீா் சுற்றுப் பயணமாக உக்ரைனுக்கு வருகைதந்த போது, யுரேனியச் சக்கையைக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை உக்ரைனுக்கு அளிக்கவிருப்பதாக அவா் அறிவித்தாா். ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு புதிதாக அளிக்கவிருக்கும் இராணுவ உதவிகளின்...

வாக்னர் கூலிப்படையை பயங்கரவாத குழுவாக அறிவிக்க பிரித்தானியா அரசு திட்டம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மறைமுக கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் வாக்னர் கூலிப்படையை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்போவதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன், சிரியா, மாலி போன்ற நாடுகளில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் வாக்னர் கூலிப்படை மீது கொடூர கொலைகள், கைதிகளை சித்திரவதை செய்தல், சூறையாடுதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்நிலையில்,...

உக்ரைனுடன் மீண்டும் தானிய ஒப்பந்தம் கிடையாது: புடின் திட்டவட்டம்

தங்களது வேளாண் பொருள்களின் ஏற்றுமதியை மேற்கத்திய நாடுகள் அனுமதிக்காத வரை, உக்ரைனுடனான தானிய ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். உணவுப் பற்றாக்குறை நிலவி வரும் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு உக்ரைனிலிருந்து கருங்கடல் வழியாக தானியங்களைக் கொண்டு செல்வதற்கான அந்த ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக ரஷ்யா கடந்த ஜூலை மாதம்...

பதவியிலிருந்து நீக்கப்பட்ட உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர்!!

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸி ரெஸ்னிகோவ் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதிய பாதுகாப்பு அமைச்சராக உயர் பதவியிலிருந்த ரஸ்டெம் உமெரோவ் ஐ நியமித்துள்ளார். புதிய நியமனத்தை அறிவித்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போருக்கு புதிய போர்வையை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 57 வயதான ரெஸ்னிகோவ்,...

மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல்: நகரை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ள விமானங்கள்!!

உக்ரைன் - ரஷ்யா போர் 18 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீண்டும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ரஷ்ய நிலப்பரப்பு மீதான தாக்குதல் போரில் தவிர்க்க முடியாதது என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன்,சுமார் 100 மேற்பட்ட விமானங்கள்...

மோசமான இரவை எதிர்கொள்ளும் புடின்! ட்ரோன் தாக்குதலினால் திணறும் ரஷ்யா!!

உக்ரைன் மீதான படையெடுப்பின் பின்னர் நான்கு இராணுவ விமானங்கள் சேதமடைந்துள்ளமை ரஷ்யா எதிர்கொள்ளும் மிக மோசமான தாக்குதல் சம்பவம் என தகவல் வெளியாகியுள்ளது. 10 முதல் 20 வரையிலான ட்ரோன்கள் பிஸ்கோவ் பகுதியில் உள்ள விமான தளத்தை தாக்கியதாக கூறப்படுகின்றது. எஸ்டோனியா மற்றும் லாட்வியாவின் எல்லைக்கு அருகில் இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த...

ஜி20 மாநாட்டுக்கு அழைப்பு: மோடிக்கு பதில் வழங்கிய புடின்

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இயலாதது குறித்து பிரதமா் நரேந்திர மோடியிடம் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதின் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக ரஷ்ய தரப்பில் வெளியுறவு அமைச்சர் சொ்கேய் லாவ்ரோவ் பங்கேற்பாா் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா தலைமை வகிக்கும் நிகழாண்டுக்கான ஜி20 உச்சி மாநாடு, வரும்...

வாக்னர் கூலிப்படையினருக்கு புடின் பிறப்பித்துள்ள உத்தரவு!!

பிரிகோஜின் மரணத்திற்குப் பின்னர் ரஷ்யாவின் விசுவாச பிரமாணத்தில் கையெழுத்திட வாக்னர் கூலிப்படையினருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவின் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலியான நிலையில், கூலிப்படையினரை தன்னிடம் விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு இருக்குமாறும் உறுதிமொழி எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க சேனல் NBAC-ன் அறிக்கையின்படி, புடின் வெள்ளிக்கிழமை உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்....

தலைவரின் உயிரிழப்பிற்கு ரஷ்யா தான் காரணம்: புடினுக்கு மிரட்டல் விடுக்கும் வாக்னர்குழு

வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரை ரஷ்ய அரசு திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்னர் படை குற்றம்சாட்டியுள்ளது. மாஸ்கோவில் இருந்து சென்ற தனியார் வர்த்தக விமானம், புறப்பட்டு 100 கிலோ மீட்டரில் வானில் இருந்து புகையுடன் கீழே விழுந்து நொறுங்கியது. 3 விமானிகளுடன் பயணம் செய்த 7...

புடினுக்கு எதிராக களமிறங்கிய வாக்னர் படை தலைவர் உயிரிழப்பு

புடினுக்கு எதிராக ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை மேற்கொண்ட வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்துள்ளார். விமான விபத்தொன்றில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்வெர் பிராந்தியத்தில் உள்ள குசென்கினோ கிராமத்திற்கு அருகே விமானம் விபத்துக்குள்ளானதாக ரஷ்ய அவசர சேவைகள் தெரிவித்துள்ளன. இதேவேளை விபத்து நடந்த இடத்தில் எட்டு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில்...

ரஷ்யாவில் தீவிரமடையும் ட்ரோன் தாக்குதல்!!

உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் சக்தி வாய்ந்த போர் விமானமொன்று தீக்கிரையானதாக தகவல் வெளியாகியுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் தெற்கே Soltsy-2 இராணுவ விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த Tupolev Tu-22 போர் விமானமே இவ்வாறு தீக்கிரையானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. Tu-22 போர் விமானமானது ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடியது மற்றும் உக்ரைனில் உள்ள நகரங்களை...

ரஷ்யா தோற்றால் மேற்கு நாடுகள் அழிந்துவிடும் – முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை

உக்ரைன் - ரஷ்யா போரில் ரஷ்யா தோற்றால் மேற்கு நாடுகளும் அழிந்துவிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'ரஷ்யாவுக்கு இந்தப் போராட்டத்தில் நிலைத்திருப்பதைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் காணவில்லை. போரின் முடிவு...

உக்ரைனுக்கு F-16 போர் விமானங்கள்: கூட்டிணையும் இரு நாடுகள்

நெதர்லாந்தில் இருந்து F-16 போர் விமானங்களை பெற்றுக்கொள்வதற்காக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டேவை சந்தித்துள்ளார். உக்ரைன் இராணுவத்திற்காக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அதிநவீன போர் விமானம் அமெரிக்காவின் ஒப்புதலுடன் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறித்த சந்திப்பின்போது ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் உக்ரைனுக்கு F -16 விமானங்களை வழங்க...

புடினின் இரகசியங்களை அறிந்தவர் மர்மமான முறையில் திடீர் மரணம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய இரகசியங்கள் பல அறிந்த இராணுவ தளபதி மர்மமான முறையில் திடீரென்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புடினுக்கு சொந்தமான 1 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அரண்மனை தொடர்பிலான இரகசியங்களை அறிந்த இராணுவ தளபதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவினை சேர்ந்த 69 வயதான ஜெனடி லோபிரேவ் என்ற இராணுவ...
Loading posts...

All posts loaded

No more posts