Ad Widget

புதிய அரசு அமைந்த பின் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது!

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்த விவாதம் நேற்றய தினம் ஜெனிவா அமர்வில் இடம்பெற்று வருகின்றது. இதன்போது மனித உரிமைகள் ஆணையாளர் சைட் ராத் அல் ஹூசைன் அறிக்கை தொடர்பில் உரையாற்றிய காணொளி ஔிபரப்பட்டது. இலங்கையில் 2015ம் ஆண்டுக்குப் பின் கருத்துச் சுதந்திரத்திற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் வடக்கு...

உலக சிறுவர் தினம் இன்று

உலக சிறுவர் தினமாகும் இன்றாகும். உலக நாடுகளில் வாழ்கின்ற சிறுவர்களிடையே புரிந்துணர்வையும், தூரநோக்கான பொது நல திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக 1954 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாண்டு சிறுவர் தினத்தின் தொனிப்பொருளானது ´சிறுவருக்கு நட்புறவான சூழல்- உலகை மிளிரச் செய்யும் அழகிய தேசம்´...
Ad Widget

செவ்வாய் கிரகத்தில் நீரோட்டங்கள் கண்டுபிடிப்பு !

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் ஓடுவதைக் காட்டும் புதிய தரவுகளை நாசா வெளியிட்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சுற்றுகலன் அனுப்பி வைத்திருக்கும் புதிய படங்களில் பள்ளத்தாக்குகளிலும், சரிவுகளிலும் நீண்ட நீரோடைகள் இருப்பதைக் காட்டும் தெளிவான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இன்றுவரை மேற்பரப்பில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நீரானது உப்புக்கரிக்கும் தன்மைகொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. வாஷிங்க்டனில் நேற்று...

சர்வதேச விசாரணையின் மூலமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்! – லீ ஸ்கொட்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சர்வதேச விசாரணையின் மூலமே நியாயம் கிடைக்குமென பிரித்தானியாவின் இல்பேர்ட் வடக்கு தொகுதிக்கான கொன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினரான நான் கடந்த 10 வருடங்களாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துவருவதுடன்...

நீதியை வழங்குவதற்குப் பாதையமைக்கும் அமெரிக்கத் தீர்மானம்! – ஜோன் கெரி

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைபானது உண்மை, நீதி, இழப்பீடு என்பவற்றை வழங்குவதற்கான ஒரு பாதையை அமைத்துக்கொடுக்கும்'' என்று அமெரிக்கா வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் இரவு...

இந்தியா தலையிட்டிருந்தால் இறுதிப் போரில் 40 ஆயிரம் மக்களைக் காப்பாற்றியிருக்கலாம்!

இந்தியா உரிய நேரத்தில் தலையிட்டிருந்தால் இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொது மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் சர்வதேச நீதிப் பொறிமுறைகைளைத் தொடர்ச்சியாக...

புதிய தீர்மான வரைவை ஜெனிவாவில் முன்வைத்தது அமெரிக்கா! – வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனேயே விசாரணை

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை கோரும் அமெரிக்காவின் தீர்மான வரைவு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை தொடர்பான தீர்மானத்திற்குப் பிரதான அனுசரணையாளரான அமெரிக்காவுடன் பிரிட்டன், மஸிடோனியா, மொன்டிநிக்ரோ மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளும் இணை அனுசரணை வழங்கியுள்ளன. விரைவாக...

இலங்கை மீதான தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்ய முயற்சி

ஜெனிவாவில் இலங்கை மீதான நகல் தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யும் புதிய தீர்மானமொன்றை வழமை போல 'ஆக்கபூர்வமான செயற்பாடு' எனும் போர்வையின் கீழ் சீனாவும் ரஷ்யாவும், கியூபாவும் ஆதரவளிக்கின்றன என்று அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை காப்பகம் கூறியுள்ளது. இந்த தீர்மான வரைவின் மீது மனித உரிமை பேரவையில் இலங்கை தூதுக்குழு தொடர்ச்சியாக பல...

பூமியை கடக்கவுள்ள விண்கல் – மனித குலமே அழியுமா?

இராட்சத விண்கல் ஒன்று இன்று பூமியை கடக்க உள்ளது. இதனால் மனிதகுலமே அழியும் என்ற பீதி கிளம்பி உள்ளது. ஆனால், இதனை நாசா மறுத்துள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள தகவலில், சுமார் 270 மீட்டர் சுற்றளவுடைய இராட்சத விண்கல் பூமியில் இருந்து 50 இலட்சம் மைல் தொலைவில் கடக்க உள்ளது உண்மை தான். ஆனால்...

மக்கா கூட்ட நெரிசல் பலி 700 பேராக உயர்வு

ஆண்டுதோறும் நடக்கும் ஹஜ் யாத்திரையின்போது புனித நகரான மக்காவுக்கு அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியானவர்களின் எண்ணிக்கை 700க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 800க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். ஹஜ் யாத்திரையின் இறுதிக் கடமையான சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வுக்காக மினாவில் யாத்ரீகர்கள் திரண்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து மீட்புப் பணிகளுக்காக நான்காயிரம் பேர் அனுப்பப்பட்டிருப்பதாக...

ஹஜ் யாத்திரை சனநெரிசலில் 150 பேர் பலி

வருடாந்த ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட சனநெரிசலில் நூறுபேர் கொல்லப்பட்டதாக சவுதி அரேபியாவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மேலும் 400 பேர் காயமடைந்ததாக கூறப்படுகின்றது.தற்போது மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது. புனித ஹஜ் கடமைகளுக்காக மில்லியன் கணக்கான மக்கள் அங்கு திரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய படையினரால் பாலஸ்தீன மாணவி மனிதாபிமானமற்ற முறையில் சுட்டுக்கொலை (படங்கள் இணைப்பு)

பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் எல்லைப் பகுதியில் 18 வயது முஸ்லீம் மாணவி ஒருவர் எல்லையைக் கடக்க முற்பட்டுள்ளார். அவரை முதலில் துப்பாக்கியால் குறிவைத்த இஸ்ரேலிய ராணுவத்தினர் குறித்த மாணவியை சுட எத்தணித்துள்ளார்கள். அருகில் உள்ள ராணுவ வீரர் ஒருவர் சுடவேண்டாம் என்று சைகை காட்டுகிறார். மாணவியின் பாடசாலைப் பைக்குள் என்ன இருக்கிறது என்று அவர்கள் கேட்டவேளை...

ஜப்பானில் 105 வயது இளைஞர் கின்னஸ் சாதனை

ஜப்பானில் 105 வயதுடையவர்களுக்கான ஓட்டபந்தயப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 100 மீ துாரத்தை 42.22 விநாடிகளில் கடந்து ஜப்பானை சேர்ந்த ஹிடோகிசி மியாஸாகி(105) புதிய கின்னஸ் சாதனை படைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் , கூடுதல் பயிற்சி செய்து, 'மின்னல் மனிதன்' உசைன் போல்ட்டுடன் போட்டியிடுவதே தனது லட்சியம் எனக் கூறினார். முன்னதாக தனது...

அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து யோசனை

இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து, மனித உரிமைகள் பேரவையில் யோசனையொன்றை முன்வைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யுத்தத்தின் இறுதியின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடியறிவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தேசிய வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்படவிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவித்தன. அமெரிக்காவினால்...

ஐ.நா. அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்றது ‘இனப்படுகொலை’ எனக் குறிப்பிடாதது ஏன்?

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்றவை 'இனப்படுகொலை' எனக் குறிப்பிடாமல் 'அமைதி' காத்தமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விடயம் குறித்து இந்தியாவின் 'தி இந்து' நாளிதழ் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலிடம் கேள்வி எழுப்பியது. அந்தக் கேள்விக்கு ஆணையாளரின் பேச்சாளர் ரவீனா சம்தாசினி அளித்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்...

சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தல் ஜெனீவாவில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பேரணி

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி, ஜெனீவா நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. இதற்கிடையே, அமெரிக்க வரைவு தீர்மானத்தின் மீது ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் விவாதம் தொடங்கியது. இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்திய இறுதிக்கட்ட போரின்...

இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் சித்ரவதை செய்து சுட்டுக்கொன்றது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றச்சாட்டு

விடுதலைப்புலிகள் இயக்க தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் சித்ரவதை செய்து சுட்டுக்கொன்றதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றம்சாட்டி உள்ளது. இலங்கையில் 2009–ம் ஆண்டு மே மாதம் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்டப்போரில் ராணுவத்தால் 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இறுதிக்கட்ட போரின்போது இலங்கை ராணுவம் நடத்திய மனித...

சர்வதேச பங்களிப்புடன் உள்நாட்டு விசாரணை! – நிஷா பிஸ்வால்

இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பதிலளிக்கும் வலுவான நோக்கத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ள, மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பதிலளிக்க சர்வதேச சமூகத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்புடன் கூடிய நம்பிக்கையான உள்நாட்டு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் புதிய அரசாங்கத்திடம் மிகவும்...

இலங்கையின் நீதிக்கான தேடல்: மக்ரேயின் ஆவணப்படத்தால் கண்ணீர்க்குளமானது ஐ.நா. சபை!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆவணப்படம் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30ஆவது கூட்டத் தொடர் நடைபெறும் கட்டடத்தில் இந்த ஆவணப்படம் நேற்றுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் நீதிக்கான தேடல் என்ற சனல் 4இன் கெலும் மக்ரேயின் ஆவணப்படமே...

இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து ஜெனிவாவில் ஆராய்வு! – எக்னெலிகொடவின் மனைவியும் பங்கேற்பு

இலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்கள் உள்ளன என்றும், அவை தொடர்பான இரகசியங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன என்றும் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு சார்பாக இடம்பெற்ற சிறிய கூட்டங்களின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற கடத்தப்பட்டு காணாமல்போனோர் விவகாரம் தொடர்பாக Forum Asia, Franisans Intenational ஆகிய அமைப்புகள் நடத்திய சிறிய கூட்டங்களின்போது இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து...
Loading posts...

All posts loaded

No more posts