- Monday
- November 25th, 2024
பின்லேடன் கொலையில் ஒபாமாவுக்கு சட்ட வழிமுறைகள் வகுத்து தந்தது 4 வக்கீல்கள்தான் என்பது உள்ளிட்ட இரகசிய தகவல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. அமெரிக்காவில் வாஷிங்டன் பென்டகன் இராணுவ தலைமையகம் மீதும், நியூயோர்க் உலக வர்த்தக மையம் மீதும் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகதி விமானங்களை மோதி அல்கொய்தா தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்கள் நடத்தி 3,000 பேரை...
2015ஆம் ஆண்டு தாய்லாந்தில் இடம்பெற்ற அழகிப் போட்டியில் கிரீடம் சூடிய இளம் பெண் குறித்து இந்நாட்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Miss Uncensored எனும் பெயரில் தாய்லாந்தில் இடம்பெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றவர், தாய்லாந்தின் ஏழைக் குடும்பம் ஒன்றில் பிறந்த மின்ற் கனிஸ்டா என்பவராவார். இவரது தாய், பாதையிலுள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் தொழிலில்...
தாய்லாந்து, போத்ரம் பகுதியில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்று, பள்ளமொன்றில் தலைகீழாக விழுந்து விபத்துக்குள்ளானதில் 22 இலங்கை சுற்றுலாப்பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக பித்யாதேவி பண்டாரி (Bidhya Devi Bhandari) தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தில் புதிய அரசியல் சட்டம் ஏற்படுத்தப்பட்ட பிறகு நடந்த தேர்தலில் புதிய அதிபராக 54 வயதுடைய பித்யா தேவி பண்டாரி வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் (United Marxist Leninist) துணைத் தலைவரான இவர் 327 வாக்குகள்...
வியட்நாம் போரின்போது தென் வியட்நாமில் உள்ள சய்கோன் நகருக்கு அருகிலிருந்த ட்ராங் பேங் கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் தவறுதலாக வீசப்பட்ட நாபாம் குண்டினால் காயமடைந்த சிறுமி உடைகளை கழற்றியெறிந்து கதறியபடி ஓடி வந்த காட்சி அனைவரது மனதையும் பதைபதைக்கச் செய்தது. உலகில் நீண்ட நாட்கள் நடைபெற்ற வியட்நாம் போரில் 1955-ம் ஆண்டு முதல் 1975-ம் ஆண்டு...
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 327 ஆக உயர்ந்தது. இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் மதியம் இந்துகுஷ் மலைப்பகுதியில் பூமிக்கு கீழே 190 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தின் தாக்கம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் கடுமையாக...
பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுவகைகளை உண்பது புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறுகின்ற உலக சுகாதார நிறுவனம், சிவப்பு இறைச்சி வகைகளை உண்பது அந்த ஆபத்தை அதிகரிக்கும் என்று முடிவு செய்துள்ளது. தினமும் 50 கிராம் அளவுக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது குடல் புற்றுநோய் ஆபத்தை 18 வீதத்தால் அதிகரிக்கும் என்றும் அந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் வட கிழக்குப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தொலைதூரப் பகுதியிலுள்ள ஹிந்து குஷ் மலைப் பகுதியிலுள்ள ஃபைசாபாத்துக்கு 80 கிலோ மீட்டருக்கு அப்பால் 7.7 அளவு சக்திகொண்ட இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்தியத் தலைநகர் டில்லியிலும் இந்த நிலநடுக்கம் ஒரு நிமிடத்துக்கு உணரப்பட்டது....
படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 40 அகதிகளின் சடலங்கள் லிபியா நாட்டு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. எனவே, அங்கிருந்தும், பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும், பாகிஸ்தான், சிரியா, மொராக்கோ, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக படகுகளில் செல்கின்றனர். அவ்வாறு அளவுக்கு...
அமெரிக்காவின் பபல்லோ நகரைச் சேர்ந்த பெலிமினா ரோட்டுண்டோ என்ற 100 வயது மூதாட்டி, வாரத்துக்கு ஆறு நாட்கள் இப்பகுதியிலுள்ள ஒரு சலவை நிலையத்தில் சுறுசுறுப்புடன் வேலை செய்து வருகிறார். ஒவ்வொரு நாளும் பதினோறு மணிநேரம் உழைக்கும் பெலிமினா காலையில் எழுந்து, வெளியில் வந்து மக்களிடம் பேசுவது ஒரு நல்ல மாற்றத்தைக் கொடுக்கின்றது. ஆகவே, இந்தப் பணியை...
இலங்கை தொலைக்காட்சிகளில் சனல்-4 ஊடகத்தினால் இலங்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படம் ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டுமென ஊடகவியலாளர் கலெம் மக்ரே கோரியுள்ளார். கூடிய விரைவில் நோ பயர் ஸோன் ஆவணப்படத்தை காட்சிப்படுத்துமாறு கோரியுள்ளார். ஆவணப்படம் தொடர்பில் மெக்ஸ்வெல் பரணகம அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வரவேற்கப்பட வேண்டியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு மட்டுமன்றி...
நோர்வே தலைநகர் ஒஸ்லோவின் புதிய பிரதி மேயராக தொழில் கட்சியை சேர்ந்த கம்ஸாஜினி குணரட்னம் என்ற இலங்கைப் பெண் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாக கென்சவேட்டிவ் கட்சி வசமிருந்த ஒஸ்லோ நகரின் அதிகாரத்தை நோர்வோயின் தொழில் கட்சியும் அதன் கூட்டணியிலுள்ள பசுமை மற்றும் சோசலிச கட்சிகள் மீள கைப்பற்றியிருந்தன இலங்கையை பிறப்பிடமாக கொண்ட கம்ஸாஜினி குணரட்னம்,...
சீனாவின் ஜியாங்க்சி நகரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், வானில் மிதக்கும் நகரத்தை பார்த்துள்ளனர். கடந்த 13-ம் தேதி மேகமூட்டமாக இருந்த வானில், உயர்ந்த கட்டிடங்களை கொண்ட ஒரு மிதக்கும் நகரத்தை மக்கள் பார்த்து ஆச்சிரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். மிதக்கும் நகரத்தை பார்த்த ஒருவர் தனது செல்போனில் அதை படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை இதுவரை...
இஸ்ரேலில் உள்ள பேஸ்புக் தலைமையகம்மீது யூத ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி சேதமாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யூதர்கள் மற்றும் இஸ்ரேலியர்களால் பலஸ்தீனில் மேற்கொள்ளப்படும் அட்டூலியங்கள் குறித்த கருத்துக்கள் அடங்கிய பேஸ்புக் பக்கங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் குறித்த பக்கங்கள் பேஸ்புக் இணையதளத்திலிருந்து அகற்றப்படாததைக் கண்டித்து இஸ்ரேலில் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போதே குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள்...
கனடாவில் நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில் போட்டியிட்ட ஆறு ஈழத் தமிழர்களில் ஹரி ஆனந்தசங்கரி மட்டும் வெற்றிபெற்றுள்ளார். ராதிகா சிற்சபைஈசன் உள்ளிட்ட ஏனைய ஐந்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். அதேவேளை, இம்முறை 189இற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்று லிபரலி் கட்சி ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளது. ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பாகப் போட்டியிட்ட சட்டத்தரணி ஹரி...
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த குய்ன் என்ற பெண்ணுக்கு திங்கள் கிழமை திருமணம் நடப்பதாக இருந்தது. அதற்காக ஒரு 4 ஸ்டார் ஹோட்டலில் அனைத்து ஏற்படுகளும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் போன் பண்ணிய மணமகன், திருமணத்தை நிறுத்தும்படி கூறிவிட்டார். இதனால் மணப்பெண்ணும் அவரது தாயும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பல லட்சம் செலவு செய்து ஏற்பாடு செய்திருந்த...
இந்திய ஆராய்ச்சியாளர்கள் இருவர் உட்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில் நுட்பத்தை அனுமதியின்றி பயன்படுத்திய ஆப்பிள் நிறுவனம், ரூ.1,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைகழகத்தின் கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் குரிந்தர் சோஹி, இந்தியாவிலுள்ள பர்டே பல்கலைகழகத்தின் மின்னணுதுறை பேராசிரியர் டெரனி விஜயகுமார். இந்த இருவரும்...
அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் ஈஸ்ட்லேக்ஸ் பகுதியிலிருந்து ஒரு வாரங்களுக்கு முன்னர் காணாமற்போன இலங்கையரான ராஜா தங்கராஜாவை அவுஸ்திரேலிய பொலிஸார் தேடிவருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 62 வயதான குறித்தநபர், கடந்த வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் வீட்டில் இருந்ததாக அவரது மகள் காயத்திரி தங்கராஜா தெரிவித்துள்ளார். அவர் தனது அலைபேசி, கடனட்டை மற்றும் பணம்...
குவாண்டமாலா என்னும் நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில், அங்கேல் என்னும் 12 வயதுச் சிறுவன் தாய் தந்தையோடு வசித்து வந்தான். அவனது தந்தையார் பஸ் ஓட்டுனர். சிறுவன் பாடசாலைக்கு நடந்து சென்று பின்னர் வீடு திரும்புவது வழக்கம். சில தினங்களுக்கு முன்னர் அவன் வீடு திரும்பிக்கொண்டு இருந்தவேளை, காட்டுப் பாலம் ஒன்றில் வைத்து ஒரு காடையர்...
ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனி மலைகள் இப்போது உருகிக் கொண்டிருக்கும் வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்’ என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான். தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா துருவப் பகுதிகளில் உள்ள...
Loading posts...
All posts loaded
No more posts