- Wednesday
- November 27th, 2024
தாய்லாந்தில் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு எழுதியவர்களில் மூவாயிரம் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். கேமராக்கள் மற்றும் ஸ்மார்ட்-வாட்ச்சுகளின் துணையுடன் மிகவும் நூதனமான முறையில் மாணவர்கள் தேர்வு மோசடியில் ஈடுபட்டுள்ளதை பல்கலைக்கழகம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. மூக்குக் கண்ணாடிகளில் பொருத்தப்பட்டிருந்த நுண்ணிய கேமரா மூலம் தேர்வுத் தாளை மூன்று மாணவர்கள் படம்பிடித்துள்ளதாக பாங்காக்-இன் ராங்ஸிட் பல்கலைக்கழகம்...
பாகிஸ்தான் நாட்டில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றியவரின் மகன் லண்டன் நகரின் புதிய மேயராக நியமிக்கபட்டுள்ளார். முஸ்லீம் ஒருவர் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பது இதுதான் முதல் முறையாகும். லண்டன் மேயருக்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சாதிக் கான், கன்சர்வேட்டிவ் சார்பில் போட்டியிட்ட ஜாக் கோல்ட்ஸ்மித்தை விட சுமார் ஒன்பது...
10 ஆண்டுகளுக்கு பிறகு சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு எதிர்வரும் 9ம் திகதி நடக்கிறது. இதனை வெற்றும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை அன்றைய தினம் மாலை 4.15 முதல் மாலை 6.20 வரை வானில் பார்க்கலாம். புதன் கோளின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த...
அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் இன்று முதல் முறையாக அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பாகக் கூடிய வகையில் 'அமெரிக்கத் தலைநகரில் தமிழ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி துவங்கப்பட்டது. குளோபல் டெலிவிஷன் என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் வாயிலாக இத் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பப் படுகிறது. மேரிலாண்ட் மாநிலத்தின் வெளியுறவுத் துறை இணைச்செயலராகப் பணியாற்றி, தற்போது அம்மாநில போக்குவரத்துத் துறை ஆணையராகப் பதவி...
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் பெரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்த வழக்கில் சிக்குகிறவர்களுக்கு அங்கு தயவுதாட்சண்யமின்றி மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அங்கு மயூரன் சுகுமாரன் என்ற ஆவுஸ்திரேலிய தமிழர் உள்பட போதைப்பொருள் கடத்தில் வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேர் ஒரே நேரத்தில் நுசகம்பங்கன் தீவு சிறையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். இது...
பூமியைப் போன்று மனிதர்கள் வாழத் தகுதியுள்ள 3 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளியில் சுற்றித்திரியும் நட்சத்திரக் கூட்டங்களை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், அவ்வப்போது புதிய கிரகங்களை கண்டுபிடித்து அதுபற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், பூமியைப் போன்று மனிதர்கள் வாழத் தகுந்த 3 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு...
வட்டுக்கோட்டை சிவன் கோவிலடியை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர்கள் இருவர் படகில் பயணித்தவேளை பரிதாபமாக அகால மரணமாகியுள்ளனர். கனடா ஒன்ராரியோவில் உள்ள ஈகிள் பார்க் நீர்ச்சுணையில் படகுப் பயணம் சென்று கொண்டிருந்தவேளையே இப் பரிதாபம் நிகழ்ந்துள்ளது. உறவினர்களான 7 இளைஞர்கள் இப் படகுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த போது படகு கவிந்து மூழ்கியதில் இரு இளைஞர்கள்கள் உயிரிழந்துள்ளனர். 24...
இலங்கையுடனான உறவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூடுதல் முக்கியத்துவம் வழங்குகின்றார் என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமெரிக்க - இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு பேரவை மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் உலகின் வேறு எந்த நாடும்...
ஆசிய நாடுகளை வாட்டியெடுத்து வரும் வெப்ப சலனத்தின் (எல்-நினோ) தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்தாலும், அதனைத் தொடர்ந்து வரும் 'லா -நினோ' சலனம் காரணமாக பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கிய வெப்ப சலனம் காரணமாக, பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத...
உலகில் தற்போது நிகழும் வெப்பநிலை காரணமாக பனிப்பாறைகள் உருகுவதனால் உலகம் முழுவதும் கடல்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் கலிப்போர்னியா சிலிகன் வெலி பகுதியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளன. சமீபத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்புக்கு அமைவாக கடல்மட்டம் வேகமாக உயர்ந்து...
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்துப் பகுதியில் நிலத்திலிருந்து ‘பிராக்கிங்’ மூலம் நிலத்திலிருந்து மெதேன் வாயு எடுக்கும்போது அந்த வாயு அருகிலுள்ள நதியில் சேர்வதாக அனைவரும் கவலைவெளியிட்டு வந்தனர். இதனை நிரூபிக்கும் வகையில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் அந்த நதிக்குத் தீ வைத்தார். நீருக்குமேலே தீ பெரிதாகப் பரவுவதை அவர் வீடியோவும் எடுத்துள்ளார்.
ரொறன்ரோப் பிரதேசத்தினை அண்மித்த யோர்க் பிராந்தியத்தில் வசித்து வந்த 44 வயதுடைண தமிழ்ப் பெண்ணைக் காணவில்லை என்று அந்தப் பிரதேசப் பொலிசார் அறிவித்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 19ம் திகதி இவர் தனது வீட்டைவிட்டுச் சென்றுள்ளார். இவர் சென்ற வாகணம் அண்மையிலுள்ள வணிக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனுள் அவர் தான் 15 நாட்களிற்குள் திரும்பி வருவேன்...
தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்வேடார் நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக கடந்த சனிக்கிழமை 4.8 ரிக்டர் மற்றும் 7.8 ரிக்டராக பதிவான இரு நிலநடுக்கங்களால் பலியானோர் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்றைய நிலநடுக்கம் 6.0 ரிக்டராக பதிவாகியுள்ளது. போர்ட்டோவிஜோ நகரில் இருந்து நூறு கிலோமீட்டர் வடமேற்கே பூமியின்...
லிப்ட்டின் உள்ளே மர்மமான முறையில் இறந்துகிடந்த பாப் இசை உலகின் பிரபல பாடகர் பிரின்ஸ் ரோஜர்ஸ் நெல்சனின் மரணத்துக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார். ரிதம் அன்ட் புளூஸ், ஃபங்க், ராக் அண்ட் ரோல் போன்ற புதியவகை மேற்கத்திய இசையை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவராக கருதப்படும் பிரின்ஸ் ரோஜர்ஸ் நெல்சன்(57) அமெரிக்க...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்யுமாறு தமிழ் அமைப்புகள் விடுத்த வேண்டுகோளை அமெரிக்கா மறுத்துள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஒரு வாரகாலமாக அமெரிக்காவில் தங்கியுள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக அவர் அமெரிக்கா சென்றிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் யுத்தக்குற்றவாளியான அவரை அமெரிக்காவில் வைத்து கைது செய்ய வேண்டும்...
இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம். நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூப மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்" என ஃபிடெல் காஸ்ட்ரோ தனது உரையில் தெரிவித்துள்ளார். கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஃபிடெல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ ஏற்றுக்கொள்வார் என அந்நாடு அதிகாரபூர்வமாக...
கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து ஐரோப்பாவில் குடியேறும் நோக்கில் மத்திய தரைக்கடல் வழியாக பயணித்த நூற்றுக்கணக்கானவர்கள் மூழ்கியுள்ளதாக, மீட்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நாற்பதுக்கும் அதிகமான கிழக்கு ஆப்ரிக்கர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தங்களுடன் பயணிக்க ஆரம்பித்தவர்களின் படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்ததில் ஏராளமானோர் மூழ்கினர் என தப்பித்தவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கிரேக்கத்தின் கலமாட்டா பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்கள், தாங்கள்...
ஓமானுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 16 ஆம் திகதி குறித்த பெண் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தவறான உறவு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் வினவிய போது, குறித்த பெண் பதிவு...
கொழும்பை நோக்கிப் புறப்பட்ட சற்று நேரத்தில் ஸ்ரீலங்கன் விமானம் திடீரென மீண்டும் சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட்டமைக்கான காரணம் தெரியவந்துள்ளது. UL 309 என்ற ஸ்ரீலங்கன் விமானம் சிங்கப்பூரின் செங்கி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 3 நிமிடங்களுக்குள் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனை அடுத்து விமானத்தில் இருந்த மூன்று இலங்கையர்களை அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் விசாரணைக்குட்படுத்தினர்....
Loading posts...
All posts loaded
No more posts