- Wednesday
- November 27th, 2024
படகு மூலம் கடந்த 2012ம் ஆண்டில் அவுஸ்ரேலியா சென்ற இலங்கை அகதி ஒருவரை நாடு கடத்துமாறு அவுஸ்ரேலிய மத்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை திரும்பினால் தண்டிக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக புகலிடக் கோரிக்கையாளர் சட்டத்தரணிகளின் ஊடாக நீதிமன்றிற்கு அறித்த போதிலும் அந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை இராணுவத்தினரால் தனது தந்தை சுட்டுக் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து தாம்...
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை ஒன்று நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளது. விளையாட்டு என்ற பெயரில் 6 மாத குழந்தையை தண்ணீரில் வைத்து சறுக்கு விளையாட வைத்தது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்ததுள்ளது . சியாலா என்ற அந்த பெண் குழந்தை நடக்க முடியாத போதிலும் ஏரியின் குறுக்கே...
தீவிர வானிலை மாற்றங்களால் பல பயிர்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு விஷத்தன்மை கொண்டதாக மாறி வரும் நிலை அதிகரித்து வருவதாக ஐ.நா எச்சரித்துள்ளது. வறட்சி மற்றும் அதிகப்படியான வெப்ப நிலை ரசாயன கலவைகளின் குவிப்புக்கு வழிவகை செய்கிறது என வெளிப்படுத்திய ஆய்வு ஒன்றை சுட்டிக்காட்டி ஒரு புதிய அறிக்கையை ஐ.நா வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக கோதுமை, சிறு...
G-7 அமைப்பின் 42 ஆவது உச்சிமாநாடு இன்று(26) ஜப்பான் நாட்டின் சிசாகி நகரத்தில் ஆரம்பமாகிறது. இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இவ் உச்சி மாநாடு சமாதானம், சுபீட்சத்திற்கான சிறந்த வழியைக்காட்டும் சுதந்திரம், ஜனநாயகம், சட்ட ஆட்சி, மனித உரிமைகளின் அடிப்படைப் பெறுமானங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய நோக்கங்களுடன் இம்முறை நடைபெறுகிறது. சம்பிரதாயபூர்வமான G7 நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக...
வடக்கு தாய்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில், மாணவிகள் தங்கும் அறையில் தீ பரவி, தூங்கிக்கொண்டிருந்த குறைந்தது 17 மாணவிகள் கொல்லப்பட்டனர். சியாங் ராய் மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளியில், 6 லிருந்து 13 வயது கொண்ட பல மாணவிகள் தங்கியிருந்தார்கள். இதில், பெரும்பாலானவர்கள் மலைப் பகுதி பழங்குடியின கிராமங்களை சேர்ந்தவர்கள். இந்த தீ விபத்தில் 5க்கும்...
சீனா நரமாமிசத்தை (மனித இறைச்சியை) பதப்படுத்திய மாட்டிறைச்சி என்ற பெயரில் ஆபிரிக்க நாடுகளிடையே விற்பனை செய்து வருவதாக வெளியான தகவல்கள் ஆபிரிக்கர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இத்தகவலை சாம்பியாவின் சீன தூதுவரான யாங் யொம்மி கடுமையாக மறுத்துள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில், சீனநாட்டவர்கள் மனித உடல்களை எடுத்து அவற்றை உப்பு மற்றும்...
எகிப்து ஏர் நிறுவனத்தின் தடம் எண்: MS804 கொண்ட ஏர்பஸ் பயணிகள் விமானம் கெய்ரோவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கிச் சென்றபோது உள்ளூர் நேரப்படி இரவு 11.09 மணியளவில் மத்திய தரைக்கடலின் மேற்பரப்பில் விமான நிலைய ரேடாரின் கண்காணிப்பு எல்லையில் இருந்து மாயமானதாக தெரியவந்தது. அலெக்சாண்டரியாவின் மத்திய தரைகடல் பகுதியில் நடுவானில் விமானம் வெடித்து...
பிரான்ஸ் நாட்டின் பாரிஸிலிருந்து , எகிப்தின் கெய்ரோ நோக்கி பயணித்த விமானமொன்று மாயமாகியுள்ளது. EgyptAir MS 804 என்ற விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை விமான சேவை உறுதி செய்துள்ளது.அந்த விமானத்தில் 59 பயணிகளும் 10 பணியாளர்களும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேஸ்புக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உணர்வுகளை தெரிவிக்க உதவும் ’ரியாக்சன்’-களை பயனர்கள் பயன்படுத்த வேண்டாம் என பெல்ஜியம் பொலிசார் எச்சரித்துள்ளனர். பேஸ்புக்கில் ’லைக்’ பட்டன் இருப்பது போல் ‘டிஸ்லைக்’ பட்டன் இருக்க வேண்டும் என பயனர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் பேஸ்புக் நிறுவனம் கோபம், சிரிப்பு, சோகம், ஆச்சர்யம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும்...
மூன்று கோடி டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 390 கோடி ரூபா) அளிப்பதாகக் கூறியபோதிலும், தனது கண்டுபிடிப்பைப் பெருநிறுவனத்துக்கு விற்க மறுத்த சிறுவன் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான். பணப்பட்டுவாடா செய்யும் வங்கி ஏ.டி.எம்.கள் போல முதலுதவிச் சிகிச்சைக்கு உதவும் மருந்துப் பொருள்களை வழங்கும் இயந்திரத்தை ரெய்லர் ரோஸன்தால் என்கிற 14 வயதுச் சிறுவன் உருவாக்கினான். அமெரிக்காவின்...
ரயன் எயர் விமானத்தில் சந்தேசத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட இலங்கையர் ஒருவர், நோர்வேயின் மொஸ் விமானநிலையத்தில் நோர்வேக் காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இலங்கையரும் வேறு நாட்டவர் ஒருவரும் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய காரணத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நோர்வேக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விமானம் மான்செஸ்டர் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தவேளையில் கழிவறையில் இவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதன்போது குண்டு என்ற வார்த்தையைப் பிரயோகித்ததாக...
பிரித்தானிய நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானை சேர்ந்த பஸ் டிரைவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பஸ் டிரைவரின் மகனான சாதிக் கான்(45), தொழிலாளர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தேர்தலில் சுமார் 11 லட்சம் மக்கள் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையில் மொத்த வாக்குகளில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாக பெற்ற சாதிக் கான், லண்டன்...
சவுதியில் அனுமதியின்றி கணவரின் கைப்பேசியை மனைவி சோதனையிட்டால் சவுக்கடி அல்லது சிறை என்ற புதிய சட்டம் அங்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனிமனிதரின் சுதந்திரத்தை இது பாதிப்பதாக கூறி வழக்கு தொடர்ந்தால் அது விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என சட்ட வல்லூநர்கள் கருத்து தெரிவித்துள்ளார். இதனிடையே புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள இந்த சட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான...
உகண்டா ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவருடன் உகண்டா சென்ற கல்கிஸ்ஸ நகரபிதா தனசிறி அமரதுங்க தெரிவித்துள்ளார். உகண்டாவின் ஜனாதிபதியாக யொவேறி முசவேனி பதவியேற்புடன் அந்நாட்டில் பதற்றநிலைமை ஏற்பட்டுள்ளது. இதன்போதே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நகரபிதா கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின்...
வங்காளதேசம் டாக்காக நகரில் உள்ளூரில் கிரிக்கெட் போட்டி நடத்தினர். அப்போது இரு அணியினர் விளையாடி கொண்டு இருந்தனர். ஒரு அணியின் சார்பில் பாபுல் ஷைக்தர் என்ற 16 வயது சிறுவன் விக்கேட் கீப்பராக இருந்தார். அப்போது பந்து வீசியவர் நோபால் வீசியது குறித்து அம்பயருடன் பேசிகொண்டு இருந்தார். இதனால் கோபம் அடைந்த பேட்ஸ்மேன் அங்கிருந்த ஸ்டெம்பை...
போலிக்கடவுச் சீட்டுடன் பத்து இலங்கையர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய காவல்துறையினர் நடத்திய சுற்றி வளைப்பில் 19 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பத்து பேர் இலங்கையர்களாவர். போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி மலேசியா வழியாக ஜெனீவா பயணிக்க முயற்சித்த இலங்கையர்களே கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூர் விமான நிலையத்தில் கடமையாற்றி வரும் மலேசிய குடிவரவு திணைக்கள அதிகாரிகள்...
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகளின் பின்னர், சிறீலங்காவில் தமிழர்கள்மீது மேற்கொள்ளப்பட்டது ஒரு இனப்படுகொலையே என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயான் தெரிவித்துள்ளார். தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பிரித்தானியக் கிளையினரால் நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் உரையாற்றும்போது, நாம் இவ்வாறான சாட்சியங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும்போதுதான் போர்க்குற்றம்...
உங்களது குழந்தைக்கு கூட தனிப்பட்ட உரிமை உண்டு, இதனை வலியுறுத்த தனது குழந்தையின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்யும் பெற்றோர்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் சிறைத்தண்டனை அல்லது பெரிய அபராதம் விதிக்குமாறு ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. ஒருவருடைய குழந்தை வளர்ந்து தனது சிறுவயது புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்த பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யு வகையில் அந்தச்...
வெள்ளைக் கொடியோடு சென்று சிங்கள ராணுவத்திடம் சாரணடைந்த, நடேசன் படுகொலை செய்யப்பட்டது யாவரும் அறிந்ததே. இன் நிலையில் இன்றைய தினம் பிரித்தானிய பாராளுமன்றில் நடேசனின் மகன் பல பிரித்தானிய MP க்களுக்கு முன்னதாக முதல் தடவையாக சாட்சியம் அளித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்றும். இலங்கை ராணுவம் தனது அப்பாவை கொலைசெய்தது என்ற உண்மையை அவர்...
ஈராக்கில் அன்பர் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தற்போதைய முக்கிய தலைவர்களில் ஒருவரும், ஈராக்கில் இயங்கி வந்த அல்-கொய்தா அமைப்பின் முன்னாள் உறுப்பினருமான அபு வஹீப், அன்பர் மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட வான்தாக்குதலில் கொல்லப்பட்டதாக பென்டகன் மேலும்...
Loading posts...
All posts loaded
No more posts