Ad Widget

அவுஸ்திரேலியத் தேர்தலில் இலங்கையர் போட்டி

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஜகத் பண்டார, தமது கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய லேபர் கட்சியின் நியூ சவுத் வேல்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எதிர்வரும் ஜூலை 2ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தான், அங்கு (அவுஸ்திரேலியாவுக்கு) சென்ற நாள் முதல் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த...

துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன?: கொலையாளியின் தந்தை பரபரப்பு பேட்டி

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் நேற்று மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். 53 பேர் காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நடத்திய ஒமர் மட்டீன் என்ற 29 வயது வாலிபர் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆப்கானிதான் நாட்டில் இருந்து வந்து...
Ad Widget

துப்பாக்கி சூட்டுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு!

அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோவில் இரவு விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் ‘பல்ஸ்' என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வந்தது. அந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில்...

அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம்

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் ‘பல்ஸ்’ என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வந்தது. அந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த வாலிபர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்....

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமானால் சாட்சியமளிக்கத் தயார்!, முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள்

இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால நீதிப் பொறிமுறைகளில், சாட்சியமளிக்கத் தயார் என, ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தமது பாதுகாப்பு மற்றும் அடையாளம் வெளிப்படுத்தப்படாது என்பதற்கும் உத்தரவாதம் வழங்குகின்ற பட்சத்தில் சாட்சியமளிக்க தயார் என அவர்கள் கூறியுள்ளதாக,...

ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகத்தில் துப்பாக்கி சூடு, 50 பேர் பலி

அமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐம்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரின் மேயர் தெரிவித்துள்ளார். அந்த துப்பாக்கிதாரி, தாக்குதல் ரைபிள் மற்றும் கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என்றும் பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்த அவர், சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் காவல்துறையினரை நோக்கி சுட்டார் என்றும் கூறப்படுகிறது. இதனை ஒரு பயங்கரவாதத்...

அமெரிக்க பாடகி கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக்கொலை

பிரபல அமெரிக்க பாடகியான கிரிஸ்டினா கிரிம்மி (வயது 22) ”தி வாய்ஸ்” என்ற திறமைகளை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போட்டியாளர் ஆவார். இவர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி விட்டு ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் கிரிஸ்டினா கிரிம்மி சரமாறியாக சுட்டார். இதனால் பலத்த காயம் அடைந்த கிரிம்மி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைபலனின்றி அவர்...

40 இலங்கையர்கள் நிர்க்கதி

தாம் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, 40 இலங்கையர்கள் இந்தோனேஷியாவில் நிர்க்கதியான நிலையில் உள்ளதாக அந்தநாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளதாக, இந்தோனேஷியப் பொலிஸார் கூறுகின்றனர். இவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

மனித இனத்தை காப்பாற்றப் போகும் நுளம்புகள்!

ஸிக்கா வைரஸிடமிருந்து மனித இனத்தை காப்பாற்றப் போவது, பல நோய்களை பரப்பும் நுளம்புகள் என ஆய்வின் மூலம் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உலகை அச்சுறுத்திவரும் ஸிக்கா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் குழு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். நுளம்புகள் மூலம் பரவும் ஸிக்கா வைரஸிற்கு எதிரான போரட்டத்தில் நுளம்புகளையே களமிறக்க முடியும்...

அரசு ஊழியர்கள் அலுவலகக் கணினியிலிருந்து இணையத்தைப் பயன்படுத்த தடை

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு மே மாதத்திலிருந்து அரசு ஊழியர்கள் அவர்கள் அலுவலகக் கணினியில் இருந்து இணையத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையின் நோக்கம் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள சூழலில், பணி தொடர்பான மின்னஞ்சல்கள் மற்றும் பகிரப்படும் ஆவணங்களின் தகவல்கள் கசியும் சாத்தியக்கூறைத் தடுப்பதே என "தி ஸ்ட்ரெயிட் டைம்ஸ் "என்னும் செய்தித்தாள் தெரிவிக்கிறது....

கணிணியில் விளையாடிய 12 வயது சிறுவன் திடீர் மரணம்: காரணம் என்ன?

பிரித்தானிய நாட்டில் கணிணியில் ’ஹேம்’ விளையாடிய 12 வயது சிறுவன் ஒருவன் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Birmingham நகரில் Karnel Haughton என்ற 12 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டியான இந்த சிறுவன் இணையத்தளத்தில் வெளியாகும் புதிய புதிய விளையாட்டுகளை விளையாடுவது...

வேலை பார்க்கா விட்டால் சம்பளம் வேண்டாம்: சுவிஸ் மக்கள்

சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் மக்களுக்கு அவர்கள் வேலை செய்தாலும், வேலை செய்யாவிட்டாலும் அடிப்படை மாதாந்திர சம்பளம் ஒரு தொகை வழங்கும் திட்டத்தினை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாத ஊதியமாக 2,555 டாலர் (இலங்கை மதிப்பளவு சுமார் ரூ.3 லட்சத்து 76 ஆயிரம்) வழங்க முன் மொழியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு மாதம் 625 டாலர் வழங்கவும்...

வேலை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அனைவருக்கும் மாதம் 2,555 டாலர்கள்

சுவிஸ் நாட்டில் வேலை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அடிப்படை மாத ஊதியமாக 2,555 டாலர் வழங்குவது குறித்து தீர்மானிக்க கருத்து வாக்கெடுப்பு நடந்தது. சுவிஸ் என்றழைக்கப்படுகிற சுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே முதல் முறையாக வாழ்கிற அனைத்து மக்களுக்கும், அவர்கள் வேலை செய்கிறவர்களாக இருந்தாலும், வேலை செய்யாதவர்களாக இருந்தாலும் அடிப்படை மாதாந்திர ஊதியமாக ஒரு தொகை வழங்கும் திட்டத்தை...

சூடுபிடிக்கும் விற்பனையில் உலகின் முதல் கறுப்பு ஐஸ்கிறீம்!

அமெரிக்காவின் நியூயோர்க்கில் விற்பனைக்கு வந்திருக்கிறது கறுப்பு ஐஸ்கறீம். தேங்காய்ப் பால், தேங்காய் கிறீம், தேங்காய்த் தூள், தேங்காய்க் கரி கலந்த மிகச் சுவையான ஐஸ்கிறீம் இது. கோப்பி, சொக்லேட் சுவையை விட வித்தியாசமான சுவையில் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். தேங்காயின் சாம்பலை ஐஸ்கிறீமுடன் கலந்தனர். சுவையும் நிறமும் இதில் இருந்துதான் கிடைத்தன. விற்பனைக்கு வந்த...

வெள்ளத்தில் மிதக்கிறது பிரான்ஸ்! பரிஸில் செஞ்சிவப்பு எச்சரிக்கை!!

பிரான்ஸில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சென் நதியின் நீர் மட்டம் சாதாரண அளவில் இருந்து ஆறு மீற்றர்களுக்கு மேல் உயர்ந்ததை அடுத்து பாரிஸ் நகரில் வெள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பிரபல்யம் மிக்க லூவர்( Louvre) மியூசியம் முடப்பட்டிருக்கிறது. நகரை ஊடறுத்துச்செல்லும் நிலத்தடி ரயில் மார்க்கங்களில் ஒன்றான RERC தடத்தில்...

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மற்றொருவரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த தற்கொலை மற்றும் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து...

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. படாங் நகரை மையமாக கொண்டு சுமார் 50 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், தூங்கி கொண்டிருந்த சில மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியே...

இத்தாலி அருகே அகதிகள் படகு விபத்தில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை

இத்தாலி அருகே அகதிகள் சென்ற 3 படகுகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 700க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக வெளியான தகவலில்,1 வயது குழந்தையின் உடல் பிணமாக மீட்கப்பட்டுள்ளது. சிரியா, ஈராக், ஏமன், துருக்கி, லிபியா, சூடான், எரித்ரியா உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக வெளியேறுபவர்கள் இடைத்தரகர்கள் மூலம் பாதுகாப்பற்ற படகுகளில்...

பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடவும்; உலக சுகாதார தாபனம்

சிகா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து திரும்பும் மக்களை பாதுகாப்பான உடலுறவு நடைமுறைகளை பின்பற்றுமாறும் அல்லது குறைந்தது எட்டு வாரங்களுக்காவது உடலுறவில் ஈடுபட வேண்டாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மேற்கூறிய இந்த அறிவுரை, உலக சுகாதார நிறுவனத்தின் முந்தைய பரிந்துரையை விட இரட்டிப்பு மடங்கானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது துணைவருக்கு சிகா வைரஸ்...

படகு விபத்துக்களில் 700 பேர் உயிரிழப்பு

கடந்த வாரம் முன்னர் லிபியா கரையோர பிரதேசத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வெவ்வேறு படகு விபத்துக்களில் சுமார் 700 பேர் தஞ்சம் கோரி பயணித்தவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று ஐநா அகதிகள் முகவர் அமைப்பு (UNHCR) தெரிவித்துள்ளது. கடந்த புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்ற படகு விபத்துக்களிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று ஐநா...
Loading posts...

All posts loaded

No more posts