Ad Widget

வெளியேறுகிறது பிரிட்டன்; அடுத்த நகர்வு என்ன?

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா என்பது குறித்து பிரிட்டிஷ் மக்களின் கருத்தறியும் நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது. "பிரெக்ஸிட்´ என அழைக்கப்படும் அந்த விலகல் குறித்த...

2016 ஆம் ஆண்டுக்கான கராத்தே சம்பியன் பட்டத்தை வென்ற ஈழத்துச் சிறுவன்!

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அகிலன் கருணாகரன் என்ற சிறுவன் 2016ஆம் ஆண்டுக்கான கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பிரித்தானியாவில் வசித்துவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அகிலன் கருணாகரன் டப்ளினில் கடந்த 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெற்ற கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். இதில் 36 நாடுகளில் இருந்து 2254 விளையாட்டு வீரர்கள்...
Ad Widget

படகில் இருந்தவர்கள் சிறீலங்காவில் சித்திரவதைக்குட்பட்டவர்கள்– தி கார்டியன்!

இந்தோனேசியாவில் தரைதட்டிய படகில் இருந்த தமிழ்அகதிகள் பலரும், சிறிலங்காவில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களை திருப்பி அனுப்பினால் அங்கு துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஒருவர், தி கார்டியன் நாளிதழிடம் தெரிவித்துள்ளார். கரிகாலன் என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திய அவர், 2010ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்ரேலியா வந்து அடைக்கலம் தேடினார். சிறிலங்காவில்...

மேடை போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பது மட்டும் உதவியாக அமையாது!

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் தலைவியர்கள் சமூக அரசியல் துறைகளில் செயலாண்மை மிக்கவர்களாக விளங்க வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை யாழ். நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களாக இருந்தால் என்ன சிங்களவர்களாக இருந்தால் என்ன...

லைகா மொபைல் நிறுவனத்தின் பாரிய பண மோசடி அம்பலம்; 19 பேர் கைது

சர்வதேச அளவில் பாரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் போது 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 09 பேர் பணமோசடி குற்றச்சாட்டிலும் 10 பேர் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். பல மில்லியன் பவுன் பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் இவர்கள்...

தமிழ் அகதிகளை விமானம் மூலம் நாடு கடத்தும் முயற்சியில் இந்தோனேஷியா!

இந்தோனேஷியாவின் ஆச்சே பிராந்தியத்தில் தரைதட்டிய அகதிகள் படகு திருப்பி அனுப்ப முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளதால் அந்தப் படகில் வந்த ஈழத் தமிழர்கள் குறித்த படகில் ஏற்றப்பட்டு திருப்பி அனுப்பப்படலாம் என்றிருந்த அச்சம் நீங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் 44 தமிழ் அகதிகளையும் நாடு கடத்துவதற்காக அவர்களுக்கு தற்காலிக கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொடுக்குமாறு, இலங்கை, இந்திய தூதரகங்களிடம்...

19 இலங்கை சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த பிரான்ஸ் நாட்டுக்காரன்

19 இலங்கை சிறுவர்கள் உட்பட 66 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரான்ஸ் வயோதிபர், குழந்தைகள் மீதான பாலியல் இச்சைக்கொண்ட நபரென விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. டெரி டெரன்டையர் என அடையாளம் காணப்பட்ட 53 வயதுடைய பிரான்ஸ் நாட்டைச் சேரந்த குறித்த சந்தேக நபர் இலங்கை, தன்சானியா மற்றும் எகிப்திய நாட்டைச் சேர்ந்த 66 சிறுவர்களை...

‘செல்பி’ பிரியர்களுக்கான அதிர்ச்சி தகவல்!!

கையடக்க தொலைபேசியில் 'செல்பி' எடுப்பது தற்போது 'பேஷன்' ஆகிவிட்டது. சிலர் 'செல்பி' எடுப்பதில் அதி தீவிரமாக உள்ளனர். அவர்களை எச்சரிக்கும் விதமாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அடிக்கடி 'செல்பி' எடுத்தால் உடலின் தோலில் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதானவர் போன்ற தோற்றம் உருவாகும் என்றும் தோல் நோய்...

அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் சிங்கத்திடம் இருந்து மகனை காத்த தாய்

அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் ஆஸ்பென் நகருக்கு அருகே லோயர் உட்டிகிரீக் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டை சேர்ந்த 5 வயது சிறுவன், கடந்த 17–ந் தேதி இரவு தனது சகோதரனுடன் வீட்டுக்கு வெளியே முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். வீட்டுக்குள் இருந்த தாய்க்கு திடீரென தனது 5 வயது மகன் அலறுகிற சத்தம் கேட்டது. உடனே அவர்...

செவ்வாய் கிரகத்தில் வேலை செய்ய ஆட்கள் தேவை என்று நாசா விளம்பரம்

செவ்வாய் கிரகத்தில் பலவித வேலைகளை செய்ய ஆட்கள் தேவை என்று நாசா விளம்பரம் வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பது பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பலவித வேலைகளை பார்ப்பதற்கு ஆட்களை தேடும் பணியின் தீவிரமாக களமிறங்கியுள்ளது நாசா. செவ்வாய் கிரகத்தில்...

இலங்கை அகதிகள் தரையிறங்க அனுமதித்தது இந்தோனேசியா!

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டி நிற்கும் படகில் இருந்த இலங்கைத் தமிழ் அகதிகளை தரையிறங்குவதற்கு இந்தோனேசிய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக ஆச்சே மாகாண கடற்கரையில் படகில் இருந்த அகதிகள் 44 பேரும் இன்று தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். கர்ப்பிணிப் பெண், ஒன்பது சிறுவர்கள் மற்றும் பெண்கள் அடங்கிய 44 அகதிகள்...

இலங்கை அகதிகள் குறித்த இந்தோனேஷியாவின் முடிவுக்கு சர்வதேச அமைப்புக்கள் எதிர்ப்பு

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரித்திருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் படகை மீண்டும் கடற்பரப்புக்குள் தள்ளிச் செல்லும் இந்தோனேசியாவின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புக்கள் வெளியாகியுள்ளன. 44 இலங்கை தமிழ் அகதிகள் சட்டவிரோத கடற்பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு சென்ற வேளை படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் தரைதட்டியது. அப்படகில் ஒரு கர்ப்பிணிப் பெண்,...

இலங்கை அகதிகள் தரையிறங்குவதற்கு தற்காலிக அனுமதி!

இந்தோனேஷிய அச்சே பகுதியில் நிர்கதியாகியுள்ள 44 இலங்கை அகதிகளையும் தற்காலிகமாக தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், படகில் உள்ள அகதிகளுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அச்சே பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். அத்துடன், பழுதடைந்துள்ள படகை திருத்துவதற்கும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அச்சே பிராந்திய ஆளுநர் சைனி...

பெண்களை எச்சரிக்கும் வகையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காவல்துறையினர்

இலங்கை அகதிகள் படகில் இருந்து இந்தோனேசிய கரையில் குதித்த பெண்களை எச்சரிக்கும் வகையில் இந்தோனேசிய காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள் படகு இந்தோனேசியாவின் ஆச்சே பிராந்திய கடற்கரையில் கடந்த சனிக்கிழமை கரையொதுங்கியது. அகதிகளை தரையிறங்க விடாமல் இந்தோனேசிய அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். இந்த...

அகதிகளைத் தரையிறக்க இந்தோனேசியா அனுமதிக்க வேண்டும்!

இந்தோனேசியாவில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை அகதிகளை தரையிறக்குவதற்கு இந்தோனேசிய மத்திய அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், குறித்த அகதிகள் ஐக்கிய நாடுகள் அகதிகள் பேரவை அதிகாரிகளை சந்திப்பதற்கு இடமளிக்க வேண்டுமென, சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறித்த அகதிகள் ஏற்கனவே ஆபத்தான மற்றும் நீண்ட கடல் பயணத்தை...

பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு!

பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர். நாடாளுமன்றத்தின்...

டீசலைக் கொடுத்து படகை வெளியேற்ற இந்தோனேசியா முடிவு!

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் கரையொதுங்கிய இலங்கைத் தமிழ் அகதிகளின் படகுக்குத் தேவையான 7 மெட்ரிக்தொன் டீசலைக் கொடுத்து தனது கடற்பிரதேசத்தைவிட்டு வெளியில் அனுப்புவதற்கு இந்தோனேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடிப் பயணித்தபோது இடையில் இயந்திரக்கோளாறு காரணமாக தத்தளித்த படகு கடந்த சனிக்கிழமையன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் படகினைச் சோதனையிட்ட அதிகாரிகள் அதிலிருந்த அகதிகளிடம்...

ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவன் பலி?

ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவன் அபுபக்கர் அல் பக்தாதி அமெரிக்க படைகளின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினருக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கு சிரியாவில் உள்ள ராக்கா என்ற இடத்தில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது அமெரிக்க படைகள்...

மீண்டும் இந்தோனேசியாவுக்கே திரும்பியது இலங்கைத் தமிழ் அகதிகள் படகு

44 இலங்கைத் தமிழ் அகதிகளுடன், இந்தோனேசியக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த படகு, அவுஸ்ரேலியா நோக்கிப் புறப்பட்டுச் சென்ற போதும், மீண்டும் இந்தோனேசியாவின் அச்சே பகுதிக்குத் திரும்பி வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கர்ப்பிணி உள்ளிட்ட 15 பெண்கள், ஒன்பது சிறுவர்கள் உள்ளிட்ட 44 பேருடன் இந்தியாவில் இருந்து புறப்பட்ட அகதிகள் படகு, இயந்திரக் கோளாறினால், இந்தோனேசியாவின்...

பேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை!!

>பேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக மருத்துவமனை அல்ஜீரியாவில் தொடங்கப்பட்டுள்ளது. பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் சாதாரண மக்களையும் தீவிரவாதிகளாக மாற்ற பயங்கரவாதிகள் முயன்று வருவதாக எழுந்த புகாரை அடுத்து இது தொடங்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் புளு கம்யூனிட்டி என்ற பெயரில் தீவிரவாத சிந்தனைகளுக்கு மக்களை ஆட்படுத்த பிரசாரம் மேற்கொண்டு, அதன்மூலம்...
Loading posts...

All posts loaded

No more posts